2022
மோசேயும் மன்னாவும்
ஏப்ரல் 2022


“மோசேயும் மன்னாவும்,” Friend மாதாந்தர செய்திகள், ஏப்ரல் 2022

“மோசேயும் மன்னாவும்”

Friend மாதாந்திரச் செய்திகள் ஏப்ரல் 2022

மோசேயும் மன்னாவும்

படம்
மோசேயும் இஸ்ரவேலின் பிள்ளைகளும்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

மோசே ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு நேராக தேவனுடைய மக்களை அவன் வழிநடத்தினான். அநேக நாட்களாக அவர்கள் நடந்தார்கள்.

படம்
மன்னாவுடன் பிள்ளைகள்

மக்கள் பசியாயிருந்தார்கள். அவர்களுக்கு உணவு இல்லாமலிருந்தது. ஆகவே, வானத்திலிருந்து அவர்களுக்கு உணவை தேவன் அனுப்பினார். இது மன்னா என அழைக்கப்பட்டது.

படம்
மகனும் தாயும் மன்னாவை தயாரித்தல்

ஒவ்வொரு காலையும் மன்னாவை மக்கள் சேகரித்தனர். ஆனால் அது ஒரே இரவில் கெட்டுப்போவதாயிருந்தது. அடுத்த நாள் அவர்கள் அதிகமாய் சேகரிக்க வேண்டியதிருந்தது

படம்
பிள்ளைகளுடன் இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்துவை நமக்கு மன்னா நினைவுபடுத்துகிறது. மக்களைக் காப்பாற்ற தேவன் மன்னாவை அனுப்பினார். நம்மைக் காப்பாற்றவும் இயேசுவை அவர் பூமிக்கு அனுப்பினார். ஒவ்வொரு நாளும் உணவு நமக்குத் தேவைப்படுவதைப்போல, ஒவ்வொரு நாளும் இயேசு நமக்குத் தேவையாயிருக்கிறார்.

படம்
இயேசு கிறிஸ்துவின் ஒரு படத்தை பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருத்தல்

நான் இயேசுவைப் பின்பற்றுவேன். அவர் எனக்குப் பெலனளித்து, ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பை உணர எனக்குதவுவார்.

வண்ணமிடும் பக்கம்

ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்து நமக்கு வேண்டும்

படம்
பிள்ளைகளுடன் இயேசு கிறிஸ்து

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்–ஏப்ரில் ஸ்டாட்

இயேசு எவ்வாறு உங்களுக்கு உதவுகிறார்?

அச்சிடவும்