“ஜீவ விருட்சம்,” Friend, ஜனு. 2024, 26–27.
நண்பன் மாதாந்தர செய்தி, ஜனுவரி 2024
ஜீவ விருட்சம்
லேகி ஒரு தீர்க்கதரிசி. அவருடைய குடும்பத்தை வாக்குத்தத்த தேசத்திற்கு அழைத்துச் செல்லும்படி தேவன் அவரிடம் கூறினார். அவர்கள் பயணம் செய்யும் போது, அவர் ஒரு அழகான மரம் பற்றி கனவு கண்டார். இது ஜீவ விருட்சம் என்று அழைக்கப்பட்டது.
மரத்தில் சுவையான வெள்ளை பழங்கள் பழுத்தன. லேகி அதைச் சாப்பிட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார்! அவர் தனது குடும்பத்தினரும் அதை சாப்பிட வேண்டும் என விரும்பினார்.
லேகி மரத்திற்கு வழிநடத்தும் இரும்பு கம்பியைக் கண்டார். மரத்திற்குச் சென்று பழங்களை உண்பதற்காக மக்கள் கோலைப் பிடித்தனர்.
லேகியின் கனவில் உள்ள மரம் தேவனின் அன்பைப் போன்றது. கோல் வேதம் போன்றது. நாம் வேதங்களைப் படிக்கும்போது, பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி வருகிறோம்.
© 2024 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, March 2024 மொழிபெயர்ப்பு. Language. 19273 418.