நேபி மக்களுக்காக ஜெபித்தல்,”நண்பன், செப்டம்பர் 2024, 26-27.
மாதாந்திரநண்பன் செய்தி, செப்டம்பர் 2024
நேபி மக்களுக்காக ஜெபித்தல்
நேபி ஒரு தீர்க்கதரிசி. பித்தளைத் தகடுகளைப் பெற்ற நேபியின் பெயரால் அவன் பெயரிடப்பட்டான். அவன் மக்களைப் பற்றி கவலைப்பட்டான். அவர்கள் தேவனை பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள்.
நேபி தன்னுடைய தோட்டத்திற்குச் சென்றான். தோட்டத்தில் உள்ள ஒரு கோபுரத்தில் ஏறி தேவனை நோக்கி ஜெபித்தான். அவன் மக்களுக்காக ஜெபித்தான்.
நேபி கோபுரத்தின் மேல் இருப்பதை சிலர் கவனித்தனர். அவர்கள் கேட்பதற்காக நின்று, மற்றவர்களும் கேட்கும்படியாக அவர்களைக் கூட்டிச் சேர்த்தனர். நேபி ஜெபித்து முடித்ததும், அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களுக்குப் போதிக்க ஆரம்பித்தான்.
நேபி மக்களை மனந்திரும்பும்படி கேட்டுக்கொண்டான். அவர்களில் சிலர் நேபி போதித்ததை விரும்பவில்லை. ஆனால் மற்றும் பலர் கவனித்தனர்! அவர்கள் மனந்திரும்பத் தேர்ந்தெடுத்து, தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டனர்.
© 2024 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி, செப்டம்பர் 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19357 418