“என் வாழ்க்கையில் கர்த்தருடைய குரலை நான் கேட்கிறேன் என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்?” இளைஞர்களின் பெலனுக்காக, பெப். 2021, 29.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2021
என் வாழ்க்கையில் கர்த்தருடைய குரலை நான் கேட்கிறேன் என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்?
இயேசு கிறிஸ்துவுக்கு நாம் எவ்வாறு செவிகொடுக்கிறோம் என்பதைப்பற்றி “ஆழமாகவும் அடிக்கடியும் சிந்திக்கவும்” மேலும் “அவருக்கு சிறப்பாக அடிக்கடி செவிகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தலைவர் ரசல் எம். நெல்சன், நம்மை அழைத்திருக்கிறார். (“ நீங்கள்# எப்படி அவருக்கு செவிகொடுக்கிறீர்கள்? “ A Special Invitation,” Feb. 26, 2020, blog.ChurchofJesusChrist.org.
வேதங்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் மூலம் நாம் அவருக்குச் செவிகொடுக்க முடியும். ஆனால் அது முக்கியமாக அந்த வார்த்தைகளைக் கேட்பது அல்லது படிப்பது மட்டுமல்ல. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம், கர்த்தர் விளக்கினார்:
“இந்தச் சொற்களை உங்களிடம் பேசுவது என் குரல்; ஏனென்றால் அவை என் ஆவியினால் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன …;
“ஆகையால், நீங்கள் என் குரலைக் கேட்டீர்கள் என்று நீங்கள் சாட்சியமளிக்க முடியும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:35–36).
கூடுதலாக, அவருக்கு செவிகொடுக்க முற்படுவது நாம் ஊக்கமளிக்கும் ஒன்றல்ல. “இதற்கு விழிப்பான மற்றும் நிலையான முயற்சி தேவைப்படுகிறது” என தலைவர் நெல்சன் சொன்னார் (“அவருக்குச் செவி கொடுங்கள்,” ஏப்ரல் 2020 பொது மாநாடு [ என்சைன் அல்லது லியாஹோனா, மே 2020, 89]).
நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளைப் படித்து, ஜெபித்து, ஆராதித்து, சேவைசெய்து, கீழ்ப்படியும்போது, அவர் தம்முடைய ஆவியால் உங்களை ஆசீர்வதிப்பார், இயேசு கிறிஸ்துவின் பபாவநிவர்த்தி மூலம் உங்களை மாற்றுவார். அப்போது அவருடைய குரலை நீங்கள் கேட்டிருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
© 2021 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன அ.ஐ.நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, January 2021 மொழிபெயர்ப்பு. Tamil. 17464 418.