“தேவனின் ஆசாரியத்துவம்,” இளைஞரின் பெலனுக்காக, - ஆகஸ்ட் 2021, 20–21.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஆகஸ்ட் 2021
தேவனின் ஆசாரியத்துவம்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84.
ஒவ்வொரு இளைஞரும் ஆசாரியத்துவத்தைப் பற்றியும் அதனுடனான அவர்களின் தொடர்பைப் பற்றியும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வார்த்தை இரண்டு விதமாக பயன்படுத்தப்படும்போது அது எவ்வளவு குழப்பமாக இருக்கும் என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உதாரணமாக ஆங்கிலத்தில் பூமி என்ற வார்த்தை நாம் வாழ்கிற கிரகத்தையும், நமது கால்களுக்கு அடியிலுள்ள மண்ணையும் குறிக்கிறது. இரண்டுமே சரியானவை, ஆனால் நீங்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் போது அந்த நேரத்தில் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இதை மேலும் குழப்பமடையச் செய்ய, பூமி என்பது நமது கிரகம் என்று பொருள் படும்போது, அதில் மண், பற்றிய யோசனையும் அடங்கும், ஏனென்றால் மண் கிரகத்தில் உள்ளது.
ஆசாரியத்துவம் எனும் சொல்லை வரையறுத்தல்
ஆசாரியத்துவம் சபையில் இரண்டு விதமாக நாம் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். இந்த சொல் தேவனின் வல்லமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. எனினும், நாம் ஆசாரியத்துவத்தை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வழியில் பயன்படுத்துகிறோம்—“தேவனின் பிள்ளைகளின் இரட்சிப்புக்குத் தேவையான எல்லாவற்றிலும் செயல்பட நியமிக்கப்பட்ட ஆசாரியத்துவம் தரித்தவர்களுக்கு தேவன் கொடுக்கும் வல்லமையையும் அதிகாரத்தையும் ”குறிப்பதற்கு.1
மனிதனுக்கு அருளப்பட்டுள்ள ஆசாரியத்துவம் தேவனின் வல்லமை அனைத்தும் அல்ல. பின்வரும் விளக்கப்படம் இந்த கருத்தை விளக்குகிறது.
இந்த விளக்கப் படத்தில் முடிவற்றதும், எல்லைகளற்றதுமான தேவனின் வல்லமையின் சில எடுத்துக்காட்டுகளை நீங்கள் காண்கிறீர்கள். கிறிஸ்துவின் சபையில் பணியாற்ற தகுதியான மனிதர்களுக்கு அவர் அருளுகிற அல்லது கொடுக்கிற தேவனின் ஆசாரியத்துவத்தின் வல்லமை மற்றும் அதிகாரத்தின் எடுத்துக்காட்டுகளையும் அதற்குள், நீங்கள் காண்கிறீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஆசாரியத்துவ அதிகாரத்தின் உதாரணங்கள்
ஆசாரியத்துவத்தின் அனைத்து ஆசீர்வாதங்களும் பரலோக பிதாவின் அன்பான மகள்கள் மற்றும் மகன்கள் ஆகிய அனைவருக்கும் கிடைக்கின்றன. இரண்டாவது பட்டியல் ஆசாரியத்துவ திறவுகோல்களை வைத்திருப்பவர் அல்லது அவருக்கு ஆசாரியத்துவ அதிகாரம் அருளப்பட்டதன் மூலம் உங்களுக்கு வரும் ஆசீர்வாதங்களை குறிக்கிறது.
பூமியில் தனது சபையின் அமைப்பு மற்றும் நிர்வாகத்திற்காக தேவன் நிறுவிய ஒழுங்கு இது. தேவனின் ஆசாரியத்துவ அதிகாரத்தின் பிற எடுத்துக்காட்டுகளில், அவரது குழுமத்தின் பணிகளை இயக்குவதற்கான திறவுகோல், ஒரு தகப்பனின் வீட்டில் கொடுக்கப்படும் ஆசீர்வாதங்கள், மற்றும் ஆலய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் ஆகியவை உடைய ஒரு உதவிக்காரர் அல்லது ஆசிரியர்கள் குழும தலைவர் அடங்குவார்.
ஆண்கள், பெண்கள் மற்றும் ஆசாரியத்துவம்
ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமனம் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும், பிரதான தலைமையின் முதல் ஆலோசகரான தலைவர் டாலின் எச். ஓக்ஸ் ஒரு முக்கியமான கொள்கையை விளக்கினார்: “அவருடைய எல்லா பிள்ளைகளின் ஆதாயத்துக்காகவும், தேவனின் பணி பயன்படுத்தப்பட நம்பிக்கையுடன் தரித்திருக்கிற தெய்வீக வல்லமையும் அதிகாரமும் ஆசாரியத்துவம் ஆகும். ஆசாரியத்துவம் என்பது, ஒரு ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது அதன் அதிகாரத்தை பிரயோகிப்பவர்கள் அல்ல. ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஆண்கள் ஆசாரியத்துவம் அல்ல. … நியமனம் செய்யப்பட்ட ஆண்களை ஆசாரியத்துவம் என நாம் குறிப்பிடக் கூடாது.”2
பெண்கள் ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கப்படவில்லை என்றாலும், தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கினார், “நீங்கள் ஆசாரியத்துவ திறவுகோலை தரித்திருப்பவரின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு அழைப்பில் பணியாற்றுவதற்காக பணிக்கப்பட்டிருக்கும்போது … அந்த அழைப்பில் செயல்பட உங்களுக்கு ஆசாரியத்துவ அதிகாரம் வழங்கப்படுகிறது.”3 இதன் சில எடுத்துக்காட்டுளில் இளம் பெண்கள் வகுப்புத் தலைவர்கள், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஊழிய சகோதரிகள், கற்பிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் பணிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் பிணையங்களில் உள்ள தலைவர்கள், மற்றும் ஆலய பணியாளர்கள் அடங்குவர்.
ஆசாரியத்துவ அதிகாரம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறது
ஞானஸ்நானத்தின்போது நீங்கள் செய்யும் உடன்படிக்கைகள் மற்றும் ஆலயத்தில் நீங்கள் செய்யவிருக்கிற உடன்படிக்கைகள் மூலம் வாலிபர்களும், இளம் பெண்களுமான நீங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் உங்களுடையவை. உங்கள் வீட்டில் ஒரு ஆசாரியத்துவம் தரித்தவர் இல்லையென்றாலும், நீங்கள் அவருடன் செய்த உடன்படிக்கைகளை நீங்கள் கடைபிடிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசாரியத்துவ வல்லமையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படலாம். (1 நேபி 14:14 பார்க்கவும்).
நம்முடைய உடன்படிக்கைகளின்படி நாம் வாழும்போது, நம்மை பலப்படுத்தும் மற்றும் ஆசீர்வதிக்கும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். உங்கள் வாழ்க்கையில் ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்திக்க நாங்கள் உங்களை அழைக்கிறோம்—தேவனின் முடிவற்ற ஆசாரியத்துவ வல்லமை மற்றும் தேவனின் ஆலயத்தில் அருளப்படும் மற்றும் வழங்கப்படும் ஆசாரியத்துவ அதிகாரத்தின் மூலம் குறிப்பாக வரும் ஆசீர்வாதங்கள்.
© 2021 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ. நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, August 2021 மொழிபெயர்ப்பு. Tamil. 17472 418