2022
அவைகள் என்னுடையவைகள், நான் அவைகளை அறிவேன்
ஜனுவரி 2022


“அவைகள் என்னுடையவைகள், நான் அவைகளை அறிவேன்” இளைஞரின் பெலனுக்காக, ஜனு. 2022.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜனுவரி 2022

“அவைகள் என்னுடையவைகள், நான் அவைகளை அறிவேன்”

மோசே 1

கூட்டத்தில் இளம் பெண்

கெட்டி உருவங்களிலிருந்து புகைப்படம்

நீங்கள் எப்போதாவது முக்கியத்துவம் இல்லாதவராக உணர்ந்திருக்கிறீர்களா? இந்த உலகில் எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தபோதோ அல்லது வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளன என்று பார்த்தபோதோ நீங்கள் இவ்வாறு உணர்ந்திருக்கலாம். நீங்கள் யார், உங்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்று உண்மையிலேயே தேவனுக்குத் தெரியுமா என்று எப்போதாவது நீங்கள் வியந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், மோசே உங்களுக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறான்.

இந்த மண்ணுலகின் ஒவ்வொரு துகளையும், அங்கே வாழ்கின்றவர்களையும் ஒரு தரிசனத்தில் தேவன் மோசேக்கு காட்டினார். அவர்கள் “கடற்கரையிலே கிடக்கின்ற மணலைப் போல் எண்ணிறைந்தவர்கள்” (மோசே 1:28). “எண்ணி முடியாத உலகங்களை” அவர் சிருஷ்டித்தார் என்று பின்னர் மோசேயிடம் தேவன் கூறினார்(மோசே 1:33)—அவர் சிருஷ்டித்தவை இந்த பூமிக்கு அப்பாலும் உள்ளன.

இவை அனைத்தையும் கண்டபோது ஒருவேளை மோசே திகைத்துப்போயிருப்பான். அவன் ஆச்சரியப்பட்டிருக்கலாம்: இத்தனை சிருஷ்டிகளுக்கும் மத்தியில் நான் எங்கே பொருந்துவேன்? இவ்வளவற்றையும் தேவனால் எவ்வாறு கண்காணிக்கமுடியும்?

தேவனின் பதில் எளிதாக இருந்தது: “சகல காரியங்களும் எனக்கு எண்ணப்படுபவையாய் இருக்கும்.” எவ்வாறு? “அவைகள் என்னுடையவைகள், நான் அவைகளை அறிவேன்” (மோசே 1:35). மோசே யார் என்று தேவன் அறிவார், அவருடைய பிள்ளைகளைப்பற்றியும், அவருடைய எல்லா சிருஷ்டிபுகளைப்பற்றியும் அவர் அறிவார். அனைத்தும் அவருடையவை – நட்சத்திரங்கள், மணல் மற்றும் குறிப்பாக பூமியிலுள்ள அவருடைய பிள்ளைகள். அவர் பூமியைப் படைக்க அவர்கள் மட்டுமே முழு காரணம். அவர்களுடைய நித்திய இரட்சிப்பு தேவனின் மிக முக்கியமான பணி.

ஏனெனில் இதோ, மனுஷனின் அநித்தியத்தையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது. (மோசே 1:39).

தேவனின் திட்டத்தில் தான் எங்கு பொருந்த வேண்டும் என மோசே அறிந்துகொண்டதைப் போலவே, உங்களையும் தேவன் அறிவார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்! அவரிடத்தில் உங்களை வரச் செய்ய உங்களுக்குதவுவதே அவரது கிரியையும் மகிமையுமாகும். ஏன்? ஏனென்றால் நீங்கள் அவருக்குரியவர்கள். அதில் முக்கியத்துவம் அற்றது என எதுவுமில்லை!