2022
கோத்திர பிதாக்கள்: அவர்கள் யாராயிருந்தார்கள், அது ஏன் முக்கியமானது
பெப்ருவரி 2022


“கோத்திர பிதாக்கள்: அவர்கள் யாராயிருந்தார்கள், அது ஏன் முக்கியமானது,” இளைஞரின் பெலனுக்காக, பெப். 2022.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2022

ஆதியாகமம் 11–50

கோத்திர பிதாக்கள்

அவர்கள் யாராயிருந்தார்கள், அது ஏன் முக்கியமானது

ஒருவேளை நீங்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். மார்மன் புஸ்தகத்தில் நாம் அவர்களைப்பற்றி அடிக்கடி வாசிக்கிறோம், இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டை நீங்கள் படிக்கும்போது நிச்சயமாக நீங்கள் அவர்களைப்பற்றி அதிகம் கேள்விப்படுவீர்கள். அவர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுவதால், அவர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூன்று மனிதர்கள் ஏன் இன்று முக்கியமானவர்கள்?” சரி, அந்த பதிலுக்கான திறவுகோல் நித்திய உடன்படிக்கைகளிலும், தேவன் அவர்களுக்குக் கொடுத்த வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களிலும் உள்ளது.

ஆபிரகாம்

ஆபிரகாம்

பட விளக்கங்கள்–ஜாரம் வோகல்

ஆபிரகாம் ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவன் நீதியுள்ளவனாகவும், தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாகவும் இருந்தான்.

அவன் ஞானஸ்நானம் பெற்றான், ஆசாரியத்துவத்தைப் பெற்றான் மற்றும் நித்தியத்திற்காக அவனது மனைவி சாராளுடன் முத்திரிக்கப்பட்டான்.

அவனுடைய சந்ததியினர் பெரியவர்களாக இருப்பார்கள், அவன் பெற்ற அதே ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், என தேவன் ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கை செய்தார்.

அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையை பூமியிலுள்ள தேசங்களுக்கு எடுத்துச் செல்வார்கள்.

ஈசாக்கு

ஈசாக்கு

ஈசாக்கு, ஆபிரகாம் மற்றும் சாராள் ஆகியோரின் மகன்.

தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலியிடச் சொன்னார். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தான், ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுத்தான். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடப் போகும் சற்றுமுன், ஒரு தூதன் ஆபிரகாமை நிறுத்தச் சொன்னான். தேவனுக்குக் கீழ்ப்படிய ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு சித்தமமாயிருந்தது தேவனின் ஒரே பேறான குமாரனின் பாவநிவர்த்தியின் அடையாளமாகும்.

ஆபிரகாமின் அதே ஆசீர்வாதங்கள் ஈசாக்குக்கும் வாக்களிக்கப்பட்டது.

யாக்கோபு

யாக்கோபு

யாக்கோபு தனது தகப்பன் மற்றும் தாத்தாவைப் போலவே தேவனுக்கு உண்மையுள்ளவனாக இருந்தான்.

அவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, கர்த்தர் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார், அதன் அர்த்தமாவது “தேவனுடன் ஜெயிக்கிறவன்” அல்லது “தேவன் ஜெயிப்பாராக” (Bible Dictionary, “Israel” பார்க்கவும்).

யாக்கோபுக்கு 12 குமாரர்கள் இருந்தார்கள். இந்த குமாரர்களும் அவர்களது குடும்பங்களும் இஸ்ரவேல் கோத்திரம் என்று அறியப்பட்டனர்.

தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை யாக்கோபுடனும் அவனுடைய பிள்ளைகளுடனும் புதுப்பிக்கப்பட்டது.

கோத்திர பிதாக்களும் நீங்களும்

சபையின் உறுப்பினராக, நீங்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோரின் சந்ததியினரின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். தேவனோடு அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை உங்களுக்கும் பொருந்தும்!

இரட்சகரைப்பற்றிய உங்கள் சாட்சியைக்கூறி சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு ஆசீர்வாதமும் பொறுப்பும் இருக்கிறது.

உடன்படிக்கைகளைச் செய்து, அதைக் கடைப்பிடிக்கவும், ஆசாரியத்துவ நியமங்களைப் பெறவும், அனைவரையும் அழைக்க நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். தலைவர் ரசல் எம். நெல்சன், இவை அனைத்தும் இஸ்ரவேலின் கூடுகையின் ஒரு பகுதி என்று கூறினார், அது “இன்று பூமியில் நடக்கும் மிக முக்கியமான விஷயம்” (“Hope of Israel,” [worldwide youth devotional, June 3, 2018], 8, ChurchofJesusChrist.org).