“அவர் சொல்வதை நீங்கள் எப்படி கேட்கிறீர்கள்?,” இளைஞரின் பெலனுக்காக, மார்ச் 2022.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, மார்ச் 2022
அவர் சொல்வதை நீங்கள் எப்படி கேட்கிறீர்கள்?
பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நாம் பெறுகிற சமாதானமான வழிநடத்துதலுடன், அவ்வப்போது, தேவன் நம்மை அறிகிறார், நம்மை நேசிக்கிறார் என்றும், தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வல்லமையாகவும் மிகவும் தனிப்பட்ட முறையிலும் உறுதியளிக்கிறார். பின்னர், நம்முடைய சிரமமான தருணங்களில், இரட்சகர் இந்த அனுபவங்களை மீண்டும் நம் மனதில் கொண்டு வருகிறார்.
உங்களுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றி சிந்தியுங்கள். இந்த அனுபவங்கள் நம் வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில், அல்லது முதலில் எதுவும் நடக்காத சம்பவங்களாகத் தோன்றும் நேரங்களிலோ வரக்கூடும். ஆவிக்குரிய ரீதியாக வரையறுக்கும் இந்த தருணங்கள் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு வழிகளிலும் வந்து, அவை நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக்கப்பட்டுள்ளன.
சிலநேரங்களில் நாம் “திடீர் கருத்துக்களை” பெறுவதாகவும், எப்போதாவது புத்திசாலித்தனத்தின் தூய்மையான பொழிவைப் பெறுவதாகவும் ஜோசப் ஸ்மித் விளக்கினார்.1
இத்தகைய அனுபவம் ஒருபோதும் பெற்றது இல்லை என்று கூறிய ஒரு நேர்மையான மனிதருக்கு தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் பதிலளித்தபோது “ஒருவேளை உங்கள் ஜெபங்களுக்கு மீண்டும் மீண்டும் பதில் கிடைத்திருக்கலாம், ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகள் ஒரு பிரமாண்டமான அடையாளமாகவோ அல்லது சத்தமாகவோ நீங்கள் நிச்சயித்திருப்பதால் பதில் பெறவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்”2 என பதிலளித்தார்,
தலைவர் ரசல் எம். நெல்சன் சமீபத்தில் சொன்னவற்றை நாம் கேட்டோம்: “இந்த முக்கிய கேள்வியைப்பற்றி ஆழமாகவும் அடிக்கடி சிந்திக்கவும் நான் உங்களை அழைக்கிறேன்: அவருக்கு நீங்கள் எவ்வாறு செவிகொடுப்பீர்கள்? அவருக்கு சிறப்பாகவும், மிக அடிக்கடியும் செவிகொடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் நான் உங்களை அழைக்கிறேன்.”3
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, March 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18296 418