“உலகமுழுவதிலுமுள்ள சபை,” இளைஞரின் பெலனுக்காக, ஏப். 2022.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஏப்ரல் 2022
பாடனுபவிக்கும் இரட்சகர்
நமது பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து பாடுபடுதலை, அவர் வருவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா முன்னறிவித்தான்.
அசட்டைபண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்டார்
இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, சிலர் அவரை நம்பினார்கள், ஆனால் அநேகர் அவரை நம்பவில்லை. அவர்கள் அவரை இழிவாகவும் பார்த்தார்கள், அநேகர் அவரை வெறுத்தார்கள். இறுதியில், மக்கள் அவரை சித்திரவதை செய்து கொலை செய்ய முடிவு செய்தனர். (1 நேபி 19:9 பார்க்கவும்.)
அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டார்
நம்முடைய எல்லா வேதனைகளையும், நோய்களையும், பெலவீனங்களையும் இயேசு கிறிஸ்துவே தம்மீது எடுத்துக்கொண்டார். அவர் நம்மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்காகவும், நமக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காகவும் இதைச் செய்தார். (ஆல்மா 7:11–13 பார்க்கவும்.)
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்
நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து பாடனுபவித்தார். நாம் மனந்திரும்பும்போது, நாம் மன்னிப்படையும் பொருட்டு அவர் இதைச் செய்தார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும்18:11; 19:15–19 பார்க்கவும்.)
அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்
“அவருடைய தழும்புகள்” அவருடைய காயங்கள். அவருடைய இரத்தம் சிந்துதல் மற்றும் அவரது மரணம் உட்பட அவர் நமக்காக சகித்திருந்த அனைத்து பாடுகளுக்கும் இவை சாட்சிகளாக நிற்கின்றன. இயேசு கிறிஸ்து நமக்காக பாடுபட்டதினிமித்தம், மீண்டும் நாம் முழுமையடையலாம். நமது பாவங்கள் மன்னிக்கப்பட அவருடைய தியாகம் சாத்தியமாக்குகிறது. நாம் மனந்திரும்பி நமது உடன்படிக்கைகளை கைக்கொள்ள முயற்சிக்கும்போது, அவர் நம்மைக் குணமாக்கி நம்மை மாற்றுகிறார். (மோசியா 3:7–11; விசுவாசப்பிரமாணங்கள் 1:3 பார்க்கவும்.)
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, April 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18314 418