“காத்திருக்காதீர்! மேய்ப்பர்களைப் போலிருங்கள்,” இளைஞரின் பெலனுக்காக, டிசம்பர் 2022. இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, டிசம்பர் 2022 லூக்கா 2:8–20 காத்திருக்காதீர்! மேய்ப்பர்களைப் போலிருங்கள் எரிக் பி. மர்டோக்; விளக்கப்படங்கள்–டாரென் ராலிங்ஸ் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு அமைதியான இரவில், மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை சிரத்தையுடன் பார்த்தார்கள். மேய்ப்பர்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தது. ஆடுகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு தேவைப்பட்டது. திடீரென ஒரு தூதன் தோன்றினான்! “பயப்படாதிருங்கள்; இதோ, மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் ஏனெனில், இன்று உங்களுக்காக … கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்.” பெத்லகேமில், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, தொழுவத்திலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள் என மேய்ப்பர்களுக்கு தேவதூதன் கூறினான். பரமசேனையின் திரள் வானத்தை நிரப்பி, தேவதூதனுடன் சேர்ந்து தேவனைத் துதித்தார்கள். உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக.” “நாம் பெத்லகேமுக்குப் போய், கர்த்தர் நமக்குத் தெரியப்படுத்தியதைப் பார்ப்போம்.” மேய்ப்பர்கள் காத்திருக்கவில்லை. இது மிக முக்கியமாயிருந்தது! அவர்கள் பெத்லகேமுக்கு “அவசரமாக வந்தார்கள்”. தேவதூதன் சொன்னது போலவே, இயேசு துணிகளால் சுற்றப்பட்டு, ஒரு தொழுவத்தில் கிடத்தியிருப்பதை மேய்ப்பர்கள் கண்டார்கள். உலகத்தின் இரட்சகராகவும் மீட்பராகவும் நமக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் வந்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா இவரே! மேய்ப்பர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர்! அவர்கள் கேட்டதையும் பார்த்ததையும் பகிர்ந்து கொண்டனர். “உலக இரட்சகர் பிறந்தார்!” “இறுதியாக மேசியா வந்தார்!” மேய்ப்பர்கள் இயேசுவிடம் “அவசரமாய்” வந்தார்கள். நீங்களும்கூட வர முடியும்! நீங்கள் அவரைப்பற்றி அறிந்து கொள்ளமுடியும். மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நீங்கள் அவருக்கு சேவை செய்யலாம். நீங்கள் அவரைக் குறித்து சாட்சியமளிக்கலாம். © 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, December 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18318 418