2023
பரிசுத்த ஆவியானவருக்கு உங்கள் இருதயத்தைத் திறக்கவும்
ஏப்ரல் 2023


“பரிசுத்த ஆவியானவருக்கு உங்கள் இருதயத்தைத் திறக்கவும்” இளைஞரின் பெலனுக்காக, ஏப். 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஏப்ரல் 2023

பரிசுத்த ஆவியானவருக்கு உங்கள் இருதயத்தைத் திறக்கவும்

இந்த ஈஸ்டர் பருவத்தில், நம்முடைய மீட்பராக பூமிக்கு தானாக முன்வந்த அவருடைய நேச குமாரனின் பரிசுக்காக நம்முடைய பரலோக பிதாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர் நம்முடைய பாவங்களுக்குப் பாவநிவர்த்தி செய்து உயிர்த்தெழுந்தார் என்பதை அறிந்து நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடைய பாவநிவர்த்தியின் காரணமாக நான் என்றென்றும் உயிர்த்தெழுப்பப்பட்டு அன்பான குடும்பத்தில் என்றென்றும் வாழலாம் என்பதை அறிந்து கொள்வதில் ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகிறேன்

நம்மில் எவராலும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரே வழியில் மட்டுமே எனக்கு அந்த காரியங்கள் தெரியும். பரிசுத்த ஆவியானவர் என் மனதுடனும் இருதயத்துடனும் அவை உண்மை என்று ஒருமுறை மட்டுமல்ல, அடிக்கடி பேசியிருக்கிறார்.

துணையாக, பரிசுத்த ஆவியானவரின் விலைமதிப்பற்ற வாக்குறுதி நமக்கு இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் பரிசுத்த ஆவியின் மூலம் தொடர்ச்சியான ஆவிக்குரிய வழிநடத்துதலையும் ஆறுதலையும் பெறுவதற்கு நம் இருதயங்களை திறப்பதைத் தேர்ந்தெடுப்பதே நமது கடமை.

பூ

விளக்கப்படங்கள் - எமிலி ஈ. ஜோன்ஸ்

தேவனுக்கு முன்பாக தாழ்மையாக இருப்பது நம்முடைய முதல் தேர்ந்தெடுப்பு

ஜெபிக்கும் கரங்கள்

இரண்டாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் ஜெபிப்பது.

திசைகாட்டி

மூன்றாவது சரியாகக் கீழ்ப்படிவது.

இருதய வடிவம்

மேலும் நான்காவதாக தேவனிடம் மற்றவர்களின் தேவைகள் மற்றும் உள்ளங்களையும் அறிந்து கர்த்தருக்காக அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைக் குறித்து ஜெபிப்பது.

உங்களுக்கு மிகவும் தாராளமாக அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியின் குரலை நீங்கள் கேட்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் ஜெபிக்கிறேன் மேலும் அவர் உங்களுடன் எப்போதும் துணையாக இருப்பதன் மகிழ்ச்சியை நீங்கள் பெறுவதற்காக, நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரைப் பெற உங்கள் இருதயத்தைத் திறக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.