2023
மரித்தோர்கள் தேவனுக்கு முன்பாக நிற்பார்கள்
டிசம்பர் 2023


“மரித்தோர்கள் தேவனுக்கு முன்பாக நிற்பார்கள்” இளைஞரின் பெலனுக்காக, டிசம்பர் 2023.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, டிசம்பர் 2023

மரித்தோர்கள்தேவனுக்கு முன்பாக நிற்பார்கள்

அவனது வெளிப்படுத்தலில், யோவான் கடைசி நியாயத் தீர்ப்பைக் கண்டான்.

இயேசு கிறிஸ்து

அவர் மீண்டும் ஆட்சிசெய்யவும் மற்றும் ராஜரீகம் பண்ணவும் வருகிறார்–மேரி சவர்.

மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் தேவனுக்கு முன்பாக முன்பாக நிற்றல்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை அனைத்து ஜனங்களையும் தேவனின் பிரசன்னத்திற்கு நியாயந்தீர்க்கப்படும்படி கொண்டு வருகிறது.(ஆல்மா 11:42–44;33:2240:21; ஏலமன் 14:15–17மார்மன் 9:13–14) பார்க்கவும்.

புஸ்தகங்கள் திறக்கப்பட்டன

பூமியில் பாதுகாத்து வைத்திருக்கப்பட்ட பதிவேடுகளைக் குறிப்பிடும் இந்த புஸ்தகங்கள் ஜனங்கள் உடன்படிக்கையின் பாதையை பின்பற்ற பூமியில் என்ன செய்தார்கள் என்பதை பதிவு செய்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:7 பார்க்கவும்).

ஜீவபுஸ்தகம்

“ஒரு விதத்தில் ஜீவபுஸ்தகம் என்பது ஒரு நபரின் எண்ணங்கள் மற்றும் செயல்களின் மொத்த வாழ்க்கைக் பதிவாகும். இருப்பினும், விசுவாசமுள்ளவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் நீதியான கிரியைகள் பற்றிய விவரங்கள் உட்பட ஒரு பரலோக பதிவு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் வேதங்கள் சுட்டிக்காட்டுகின்றன” (Guide to the Scriptures, “Book of Life,” scriptures.ChurchofJesusChrist.org).

நியாயத்தீர்ப்படைந்தார்கள்

ஜனங்கள் உயிர்த்தெழுந்த பின்பு நியாயத் தீர்ப்பு வருகிறது. இயேசு கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் நியாயாதிபதியாக இருப்பார். இந்த தீர்ப்பு ஒவ்வொரு நபருக்குமான நித்திய மகிமையைத் தீர்மானிக்கும். (See Guide to the Scriptures, “Judgment, the Last,” scriptures.ChurchofJesusChrist.org; ஆல்மா 41:3–5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:26–32.)

தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக

ஒவ்வொருவரும் அவர்களுடைய கிரியைகளின் படியும், அவர்களுடைய இருதயங்களின் வாஞ்சைகளின் படியும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 137:9 பார்க்கவும்). அவர்கள் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்களா, இந்த ஜீவியத்தில் அவர்கள் பெற்ற ஒளி மற்றும் உண்மைக்கு இசைவாக செயல்பட்டார்களா என்பதை வைத்து அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.