“நாம் ஞானஸ்நானம் பெறும்போது நாம் சரியாக என்ன வாக்குறுதி அளிக்கிறோம்” இளைஞரின் பெலனுக்காக, . ஜூன் 2024.
இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜூன் 2024
நாம் ஞானஸ்நானம் பெறும்போது தேவனுக்கு நாம் என்ன வாக்குறுதி அளிக்கிறோம்?
நாம் ஞானஸ்நானம் பெறும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது எடுத்துக்கொள்வதற்கும், தேவனைச் சேவிப்பதற்கும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கும் நாம் உடன்படிக்கை செய்கிறோம் (அல்லது வாக்குறுதியளிக்கிறோம்) என்று வேதங்கள் நமக்குக் கற்பிக்கின்றன (மோசியா 18:10; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 77).
ஞானஸ்நானம் “தேவனின் மந்தையினுள் வந்து, அவருடைய ஜனம் என்று அழைக்கப்படுவதற்கு” (மோசியா 18:8) நமது விருப்பத்தை நிறைவேற்ற உதவுகிறது என்று வேதங்களில் கற்றுக்கொள்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் ஞானஸ்நானம் பெற்றதற்கு ஒரு காரணம் என்னவென்றால், நாம் இயேசு கிறிஸ்துவின் சபையில் சேர விரும்புகிறோம், கிறிஸ்துவில் ஐக்கியப்பட்டதன் மூலம் வரும் அன்பையும் சொந்தமாவதையும் அனுபவிக்க விரும்புகிறோம்.
கர்த்தருக்குச் சேவை செய்வதற்கும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அர்ப்பணிப்பு நம் வாழ்நாள் முழுவதும் பல விஷயங்களை உள்ளடக்கியது. உதாரணமாக, “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, … துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும், எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்களிலும், எல்லா இடங்களிலும், தேவனுக்கு சாட்சிகளாய் நிற்கவும்” இருப்பதை உள்ளடக்கியது ( மோசியா 18:8–9).
© 2024 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly For the Strength of Youth Message, June 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19299 418