இளைஞரின் பெலனுக்காக
நாம் அனைவரும் மிகவும் வேறுபட்டவர்களாக இருந்தால் எவ்வாறு ஒன்றிணைய முடியும்?
அக்டோபர் 2024


“நாம் அனைவரும் மிகவும் வேறுபட்டவர்களாக இருந்தால் எவ்வாறு ஒன்றிணைய முடியும்?” இளைஞரின் பெலனுக்காக, அக். 2024.

மாதாந்திர இளைஞரின் பெலனுக்காக செய்தி, அக்டோபர் 2024

நாம் அனைவரும் மிகவும் வேறுபட்டவர்களாக இருந்தால் எவ்வாறு ஒன்றிணைய முடியும்?

படம்
அம்புகள் கொண்ட கனசதுரங்கள்

நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள். ஆனால் கர்த்தர் நாம் “ஒன்றாக இருக்க” விரும்புகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:27) தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் நமக்குக் கற்பித்த ஒற்றுமையின் சில கொள்கைகள் இங்கே:

நாம் இயேசு கிறிஸ்துவிலும், அவரது சுவிசேஷத்திலும், அவரது சபையிலும் ஒன்றிணைக்கப் பட்டிருக்கிறோம். “இயேசு கிறிஸ்துவின் மீதான நமது தனிப்பட்ட விசுவாசம் மற்றும் அன்பின் மூலமாக மட்டுமே நாம் ஒன்றாக இருக்க முடியும் என்று நம்ப முடியும்.”

ஒற்றுமைக்கு அன்பு தேவை. “மொழிகளின் வேறுபாடு மற்றும் அழகான, மேம்பட்ட கலாச்சார பாரம்பரியங்கள் இருந்தாலும், ஒற்றுமை மற்றும் அன்பில் பின்னப்பட்ட இதயங்களை நாம் கொண்டிருக்க வேண்டும்.”

ஒற்றுமை என்பது ஒரே தன்மை அல்ல. “ஒற்றுமையும் வேற்றுமையும் எதிரானவை அல்ல. வேற்றுமைக்கு மரியாதையையும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையையும் வளர்ப்பதன் மூலம் நாம் அதிக ஒற்றுமையை அடைய முடியும்.” “ஒற்றுமைக்கு ஒரே தன்மை தேவையில்லை, ஆனால் நல்லிணக்கம் தேவை.”

பிணக்குகளையும் முன்வெறுப்புகளையும் அகற்ற வேண்டியது ஒற்றுமைக்குத் தேவையாயிருக்கிறது அனைவருக்கும் இடம் உண்டு. இருப்பினும், எந்த விதமான முன்வெறுப்பு, கண்டனம் அல்லது சர்ச்சைக்கு இடம் இல்லை .

அச்சிடவும்