இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, டிசம்பர் 2024
கிறிஸ்து பிறப்பு
நாம் நன்கு அறிந்த இந்த கிறிஸ்துமஸ் காட்சியையும், அது எவ்வாறு நமக்கு இரட்சகரை நோக்கி பார்க்க உதவுகிறது என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள்.
பெத்லகேம்
பெத்லகேம்என்பதற்கு எபிரேய மொழியில் அப்பத்தின் வீடு என்று அர்த்தம். இது சில நேரங்களில் தாவீதின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது, மேசியா இந்த வம்சாவழியில் வருவாரென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. (எரேமியா 23:5;யோவான்7:42 ஐப் பார்க்கவும்). சாமுவேல் பெத்லகேமில் தாவீது இராஜாவை அபிஷேகம் பண்ணினான்.(1 சாமுவேல் 16:1–13ஐப் பார்க்கவும்). அங்கு மேசியா பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.(மீகா 5:2ஐப் பார்க்கவும்).
சத்திரம்
சத்திரம் கிரேக்க வார்த்தையில் விருந்தினர் அறை உட்பட எந்தவொரு தற்காலிக தங்குமிடத்தையும் குறிக்கும். மரியாள் “[குழந்தையாகிய கிறிஸ்துவை ] தொழுவத்தில் கிடத்தினாள்;“ஏனெனில் சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தது” (லூக்கா 2:7). (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு “சத்திரங்கள்” என்று கூறுகிறது.) (“அறை இல்லை” என்பதற்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் அல்லது அவர்கள் தங்கியிருக்கக்கூடிய எந்த இடத்திலும் குழந்தையைப் பெற்றெடுக்க இடமில்லை என்று அர்த்தமாகலாம்.) எப்படியிருந்தாலும், அவர்கள் ஒரு மாட்டுக் கொட்டில் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.
மாட்டுக் கொட்டில்
கொட்டில் என்பது விலங்குகளுக்கான உணவைத் தாங்கும் உயரமான பெட்டி அல்லது தொட்டி ஆகும். பண்டைய யூதேயாவில், இவை பெரும்பாலும் கல்லால் செய்யப்பட்டன. சத்திரங்கள் கொட்டில்களுடன் நடு முற்றங்களைக் கொண்டிருந்தன, மேலும் பல வீடுகளில் பெரிய பிரதான அறையில் கொட்டில்கள் இருந்தன, இதனால் விலங்குகளை இரவுமுழுவதும் அங்கேயே வைத்திருக்க முடியும்.
குழந்தையைச் சுற்றிப் போர்த்தும் துணிகள்
தாய்மார்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை (ஒரு போர்வை அல்லது துணியில் சுற்றி) போர்த்தி வருகின்றனர். இது கருவிலிருந்து வெளிவரும் அதிர்ச்சியிலிருந்து அவர்களை அமைதிப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் செய்கிறது. மரியாள் பயன்படுத்திய துணியானது குடும்பத்திற்கு தனித்துவமான ஒரு சிறப்பு அடையாளத்தைக் கொண்டிருந்திருக்கலாம்.
மரியாளும் யோசேப்பும்
அவர்கள் நல்லவர்களும் நீதியுள்ளவர்களுமாயிருந்தார்கள், மேலும் இருவருமே தாவீதின் சந்ததியினர். இரட்சகரின் பிறப்பின் ஆயத்தமாக ஒவ்வொருவராக தேவதூதன் ஒருவன் சந்தித்தான்( மத்தேயு 1:18–25; லூக்கா 1:26–38ஐப் பார்க்கவும்). அவர்கள் பெத்லகேமிற்கு 100–140 கிமீ (60–90 மைல்கள் ) பிரயாணம் செய்தார்கள். மரியாள் பிரயாணத்தின்போது கற்பவதியாயிருந்தாள்.
மேய்ப்பர்கள்
பெத்லகேம் அருகே மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். சில ஞானிகளின் கூற்றுப்படி, ஒரு நகரத்திற்கு அருகில் ஆலயங்களில் பலியிடப்படும் ஆடுகளை மட்டுமே வளர்க்க அனுமதிக்கப்பட்டது. ஆகவே, இந்த மேய்ப்பர்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தது நமக்காக இயேசு கிறிஸ்துவின் பலியை குறித்துக்காட்டுகிறது. (மோசே 5:6–7 ஐப் பார்க்கவும்). மேசியாவைப் பார்க்க அவர்கள் தங்கள் மந்தைகளை விட்டுச் சென்றனர், அவருடைய பாவநிவர்த்திக்கான பலி விலங்குகளின் பலியை முற்றிலும் நீக்கிவிடும்.
குழந்தையாகிய கிறிஸ்து
இயேசு கிறிஸ்து, கிறிஸ்து பிறப்புக் காட்சி மற்றும் நம் வாழ்க்கையின் முதன்மையான கதாபாத்திரம்.
© 2024 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, டிசம்பர் 2024 மொழிபெயர்ப்பு. Tamil. 19346 418