2010–2019
ஊழியம் செய்தல்
ஏப்ரல் 2018


2:3

ஊழியம் செய்தல்

பிறரைக் கவனிப்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் நாம் ஒரு புதிய பரிசுத்தமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவோம்.

உங்களுடைய உளமார்ந்த விசுவாசத்தின் வார்த்தைகளுக்காக மூப்பர் காங், மூப்பர் சோர்ஸூக்கு நன்றி. உங்களுக்காகவும் உங்கள் அன்பு தோழமைகளுக்காகவும் நாங்கள் மிக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

அன்பான சகோதர சகோதரிகளே, தேவனின் கட்டளைகளை, குறிப்பாக தேவனிடத்திலும் நமது அண்டை வீட்டாரிடத்திலும் அன்பு செலுத்த அந்த இரண்டு மகத்தான கட்டளைகளைக் கைக்கொள்ள நமது அங்கத்தினர்களுக்கு எவ்வாறு உதவலாமென கர்த்தரிடமிருந்து வழிகாட்டுதலை நாம் தொடர்ந்து நாடுகிறோம். 1

இரட்சகரின் வழியில் நமது மக்களின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான தேவைகளுக்கு ஊழியம் செய்ய ஒரு சிறந்த வழியைப் பல மாதங்களாக நாம் நாடிக்கொண்டிருக்கிறோம்.

அவைகளைப்பற்றி நாம் அறிந்திருக்கிற வீட்டுப்போதகம் மற்றும் விசாரிப்புப்போதகத்திலிருந்து ஓய்வுபெற நாம் தீர்மானம் செய்தோம். அதற்குப் பதிலாக, மற்றவர்களைக் கவனிக்கவும் ஊழியம் செய்யவும் ஒரு புதிய பரிசுத்தமான அணுமுறையை நாம் நடைமுறைக்குக் கொண்டுவருவோம். இந்த முயற்சிகளை நாம் “ஊழியம் செய்தல்” என குறிப்பிடுவோம்.

சகோதரிகளின் உள்ளார்ந்த வரங்களாலும், ஆசாரியத்துவத்தின் ஒப்பிடமுடியாத வல்லமையாலும் ஆற்றல்மிக்க ஊழியம் செய்தலின் முயற்சிகள் சாத்தியமாகும். எதிரியின் வஞ்சனையிலிருந்தும் கண்ணிகளிலிருந்தும் நம் அனைவருக்கும் அத்தகைய பாதுகாப்பு வேண்டும்.

உலகமுழுவதிலுமுள்ள சபை அங்கத்தினர்களுக்கு சேவை செய்வதிலும் கண்காணிப்பதிலும் ஆசாரியத்துவத்தில் நியமிக்கப்பட்டிருக்கிற சகோதரர்களும், ஒத்தாசைச் சங்கத்தில் நியமிக்கப்பட்ட சகோதரிகளும், இளம் பெண்களும் இப்போது எவ்வாறு செயல்படுவார்களென, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் ஜெப்ரி ஆர் ஹாலண்டும், ஒத்தாசைச் சங்க பொதுத் தலைமையிலுள்ள சகோதரி ஜீன் பி. பிங்காமும் விளக்குவார்கள்.

அவர்களுடைய செய்திகளை அங்கீகரிப்பதில் பிரதான தலைமையும் பன்னிருவரும் ஒன்றுசேருகிறார்கள். நன்றியுணர்வுடனும் ஜெபத்துடனும் சபை வரலாற்றில் இந்த புதிய அத்தியாயத்தை நாம் திறக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென்.