நான் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்?
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நாம் ஆர்வத்துடனும், இதயப்பூர்வமாகவும், உறுதியாகவும், உண்மையாகவும் கற்றுக்கொள்ளவும் அதை ஒருவருக்கொருவர் போதிக்கவும் நாம் நாடும்போது, இந்த போதனைகள் இருதயங்களை மாற்றும்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நமது அன்பான தீர்க்கதரிசி ரசல் எம்.நெல்சனின் வழிநடத்துதலின் கீழ் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் இந்த பொது மாநாட்டில் மீண்டும் இங்கே நாம் கூடியிருப்பது என்ன ஒரு பெரிய மகிழ்ச்சி. இந்த மாநாட்டில் நமது காலத்திற்கான தேவைகளை ஜெபித்து, பாடி, உரையாற்றுகிறவர்களின் போதனை மூலமாக நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்பதற்கான சிலாக்கியம் நமக்கிருக்கிறதென நான் சாட்சியளிக்கிறேன்.
அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிக்கப்பட்டுள்ளதைப்போல, எத்தியோப்பியாவின் ராஜஸ்திரீயின் பொக்கிஷங்களுக்கெல்லாம் தலைவனாயிருந்த ஒரு மந்திரியான ஒரு குறிப்பிட்ட எத்தியோப்பியனுக்கு மதப்போதகனாகிய பிலிப்பு சுவிசேஷத்தைப் போதித்தான்.1 எருசலேமில் பணிந்துகொண்டு திரும்புகிறபோது அவன் ஒரு இரதத்திலே உட்கார்ந்து ஏசாயா ஆகமத்தைப் படித்துக்கொண்டிருந்தான். ஆவியினால் கட்டாயப்படுத்தப்பட்டதில் பிலிப்பு அவனுக்கருகில் வந்து கேட்டான், “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?
“அதற்கு அவன் [மந்திரி] ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்றான்? …
“பின்னர் பிலிப்பு பேசத் தொடங்கி இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.”2
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கற்றுக்கொள்ள தனிப்பட்டவர்களாக, குடும்பங்களாக நாடவும் ஒருவருக்கொருவர் போதிக்கவும் நம் அனைவருக்குமுள்ள தெய்வீக ஆணையின், ஒரு நினைவூட்டலாக இந்த எத்தியோப்பிய மனிதனால் கேட்கப்பட்ட கேள்வியிருக்கிறது.3 உண்மையில், சுவிசேஷத்தை கற்றுக்கொள்ளுதலின், போதிப்பதின் சூழ்நிலையில் சிலசமயங்களில் நாம் எத்தியோப்பியனைப் போலிருக்கிறோம், ஒரு உண்மையுள்ள, உணர்த்தப்பட்ட ஆசிரியரின் உதவி நமக்குத் தேவை, சிலசமயங்களில் பிலிப்பைப் போலிருக்கிற நாம் அவர்களுடைய மனமாற்றத்தில் மற்றவர்களுக்கு போதிக்கவும் பெலப்படுத்தவும் வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும் போதிக்கவும் நாம் நாடும்போது, தேவனிலும், அவருடைய தெய்வீக சந்தோஷத் திட்டத்தில், இயேசு கிறிஸ்துவில், அவருடைய பாவநிவர்த்தியின் பலியில், விசுவாசத்தை அதிகரிக்கவும் நிலைத்திருக்கிற மனமாற்றத்தை அடைவதுமே நமது நோக்கம். தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்யவும், கைக்கொள்ளவும் இத்தகைய அதிகரிக்கப்பட்ட விசுவாசம் நமக்குதவும், அப்படியாக, இயேசுவைப் பின்பற்ற நமது விருப்பத்தை பெலப்படுத்தி, நம்மில் ஒரு உண்மையான ஆவிக்குரிய மாறுதலை விளைவிக்கிறது, வேறுவார்த்தைகளிலெனில் அவனுடைய நிருபத்தில், கொரிந்தியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் போதித்ததைப்போல ஒரு புதிய சிருஷ்டிக்கு நம்மை மாற்றுகிறது. 4 ஒரு அதிக சந்தோஷத்தை, உற்பத்தி திறனை, ஆரோக்கியமான வாழ்க்கையை இந்த மாற்றம் நமக்குக் கொண்டுவந்து, ஒரு நித்திய தோற்றத்தை பராமரிக்க நமக்கு உதவும். இரட்சகரைப்பற்றி அவன் அறிந்துகொண்டு, அவருடைய சுவிசேஷத்திற்குள் மனமாறிய பின்பு எத்தியோப்பிய மந்திரிக்கு நடந்தது இதைப்போன்றே இல்லையா? அவன் சந்தோஷத்தோடே தன் வழியே போனான் என வேதம் சொல்லுகிறது.5
சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும் அதை ஒருவருக்கொருவர் போதிக்கவும் உள்ள கட்டளை புதிதல்ல, மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே இது தொடர்ந்து திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.6 வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், மோசேயும் அவனுடைய ஜனங்களும் மோவாபின் சமவெளியிலிருந்தபோது கர்த்தரிடமிருந்து அவர்கள் பெற்ற கட்டளைகளையும் உடன்படிக்கைகளையும் கற்றுக்கொள்ளவும், சிவந்த சமுத்திரத்தைக் கடந்த அல்லது சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட வெளிப்படுதலின் அனுபவத்தைப் பெற்றிராத அநேகரான தங்கள் சந்ததிக்கு அவைகளைப் போதிக்கவும் அவர்களுடைய பொறுப்பைக்குறித்து அவனுடைய ஜனங்களுக்கு எச்சரிக்கும்படிக்கு கர்த்தர் அவனுக்கு உணர்த்தினார்.7
மோசே தன்னுடைய ஜனங்களை எச்சரித்தான்.
“இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்ளுவதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். . .
“…அவைகளை உன் பிள்ளைகளுக்கும், உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.”8
“நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய்” என்று சொல்லி மோசே முடித்தான்.9
“கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்”10, “ஒளியிலும் சத்தியத்திலும்”11 நம்முடைய குடும்பங்களை வளர்க்கும்படியாக தேவனுடைய தீர்க்கதரிசிகள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். “பரவலான ஒழுக்கக்கேடு மற்றும் ஆபாச படங்களின் போதையின் இந்த நாளில் தங்கள் வாழ்க்கையில் தேவனின் [மற்றும் இயேசு கிறிஸ்துவின்] முக்கியத்துவத்தை தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க ஒரு பரிசுத்த பொறுப்பு பெற்றோருக்கிருக்கிறது” என தீர்க்கதரிசி நெல்சன் சமீபத்தில் சொன்னார்.12
சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள நாடவும், நம்மை நேசிக்கிற, அவருடைய பிள்ளைகளுக்காக ஒரு சந்தோஷத்தின் தெய்வீகத் திட்டத்தை வளர்த்திருக்கிற ஒரு பிதா பரலோகத்திலிருக்கிறார் என்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் மீட்பரென்றும், அவருடைய நாமத்தின் மேலுள்ள விசுவாசத்திலிருந்து இரட்சிப்பு வருகிறதென்றும் நமது குடும்பங்களுக்கு போதிக்கவும் நமது தனிப்பட்ட பொறுப்புக்கு நமது தீர்க்கதரிசியின் எச்சரிக்கை, கூடுதல் நினைவூட்டுதலாயிருக்கிறது.13 நமது விசுவாசத்தில் நிலைத்திருக்க நமக்குதவும் நமது இருதயங்களில் பொறிக்கப்பட்டிருக்கிற நமது சொந்த ஆவிக்குரிய பதிவுகளைக் கொண்டிருக்க, தனிப்பட்டவராகவும் குடும்பங்களாகவும் நமக்குதவுகிற நமது மீட்பரான இயேசு கிறிஸ்துவின்மீது வேரூன்றப்பட்ட ஆவிக்குரிய புகலிடங்களாக நமது வீடுகள் மாறவேண்டும்.14
இயேசுவே ஆட்டுக்குட்டியானவரென்றும், மேசியாவென்றும் யோவான் சாட்சி பகர்ந்த பின்பு யோவான் ஸ்நானனின் இரண்டு சீஷர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்ந்து போனது உங்கள் நினைவுக்கு வரலாம். “வந்து பார்க்கவும்”, அந்நாளில் அவரோடு தங்கவும் இயேசுவின் அழைப்பை அந்த நல்ல மனிதர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.15 தேவகுமாரனாகிய இயேசுவே மேசியாவென்று அவர்கள் அறியவந்து, தங்களுடைய வாழ்நாளின் எஞ்சிய நாட்களில் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
இதே பாணியில் “வந்து பாருங்கள்” என்ற இரட்சகரின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, வேதங்களில் நாம் மூழ்கி, அவைகளில் களிகூர்ந்து, அவருடைய கோட்பாடுகளைக் கற்று அவர் வாழ்ந்த வழியில் வாழ முயற்சித்து அவரோடு தங்கவேண்டும். அப்போது மட்டுமே அவரைப்பற்றி நாம் அறிய வந்து, அவரே ஜீவஅப்பமென்றும், அவரண்டை நாம் வந்து அவரில் நம்பிக்கை வைத்தால் நாம் பசியடையோம், தாகமடையோம் என்றறிந்து அவருடைய குரலை நாம் அடையாளம் காண்போம்.16 அந்நாளில் இயேசுவுடன் தங்கியிருந்த அந்த இரண்டு சீஷர்களுக்கு சம்பவித்ததைப்போல எல்லா நேரங்களிலும் சத்தியத்தை பகுத்தறிய நமக்கு சாத்தியமாகும்.
சகோதர சகோதரிகளே, அது தற்செயலாக நடக்காது. தெய்வீகத்தின் மிக உயர்ந்த செல்வாக்கிற்கு நம்மை இசைய வைத்திருப்பது ஒரு எளிதான காரியமில்லை, அதற்கு தேவனை அழைப்பதும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நமது வாழ்க்கையின் மையமாக எவ்வாறு கொண்டுவருவதென்பதை கற்றுக்கொள்ளுதலும் அவசியமாகிறது. நாம் அப்படிச் செய்தால், பரிசுத்த ஆவியின் செல்வாக்கு நமது இருதயத்திற்கும் மனதிற்கும் சத்தியத்தைக் கொண்டுவந்து, சகல காரியங்களையும் போதித்து18 அதைக் குறித்து சாட்சியளிக்கும்17 என நான் வாக்களிக்கிறேன்.
நாம் கற்றுக்கொண்ட சுவிசேஷத்தின் கொள்கைகளை நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த நமது பொறுப்பின் சூழலில் “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?” என்ற எத்தியோப்பியனின் கேள்விக்கு ஒரு விசேஷித்த அர்த்தமிருக்கிறது. உதாரணமாக, எத்தியோப்பியனின் விவகாரத்தில் பிலிப்பிடமிருந்து அவன் அறிந்துகொண்ட சத்தியத்தின்மேல் அவன் செயல்பட்டான். ஞானஸ்நானம் பெறும்படிக்கு அவன் கேட்டுக்கொள்ளப்பட்டான். இயேசு கிறிஸ்துவே தேவகுமாரனாயிருந்தார் என அவன் அறியவந்தான்.19
சகோதர சகோதரிகளே, நாம் கற்றுக்கொள்கிறதை, போதிக்கிறதை நமது செயல்கள் பிரதிபலிக்கவேண்டும். ஆகவே, நாம் வாழ்கிற வழியின் மூலமாக நமது நம்பிக்கைகளைக் காட்டவேண்டும். சிறந்த ஆசிரியர் ஒரு நல்ல முன்மாதிரியாயிருக்கிறார். உண்மையாக நாம் வாழ்கிற ஒன்றைப்பற்றி போதித்தல் நாம் போதிக்கிறவர்களின் இருதயங்களில் ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணும். குடும்பமாகவோ, இல்லையோ, வேதங்களையும் ஜீவிக்கிற அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் தங்கள் இருதயங்களில் ஆனந்தமாக மக்கள் பொக்கிஷப்படுத்த நாம் விரும்பினால், அவைகளில் நமது ஆத்துமாக்கள் களிகூருவதை அவர்கள் காணவேண்டும். அதைப்போன்றே நமது காலத்தில், தலைவர் ரசல் எம்.நெல்சன் தீர்க்கதரிசியாக, ஞானதிருஷ்டிக்காரராக, வெளிப்படுத்துபவராக இருக்கிறாரென்பதை அவர்கள் அறிந்துகொள்ள நாம் விரும்பினால், அவரை ஆதரிக்க நமது கைகளை உயர்த்துவதையும், இரட்சகரால் அவர் உணர்த்தப்படும்போது அவருடைய போதனைகளை நாம் பின்பற்ற உணருகிறோமென்பதை அவர்கள் பார்க்கவேண்டும். வார்த்தைகளைவிட செயல்கள் சத்தமாகப் பேசுகிறது என பிரசித்தமிக்க பழமொழி சொல்கிறது.
“மூப்பர் சோர்ஸ், இந்தக் காரியங்கள் அனைத்தையும் நான் செய்துகொண்டிருக்கிறேன், இந்த மாதிரியை தனிப்பட்டவனாகவும், குடும்பமாகவும் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன், ஆனால் துரதிருஷ்டவசமாக, என் நண்பர்களிலும், எனக்கன்பானவர்களிலும் சிலர் கர்த்தரிமிடமிருந்து தங்களைத் தூரப்படுத்திக்கொண்டார்கள் என்று உங்களையே கேட்டுக்கொண்டிருக்கிற இந்த இதே தருணத்தில் உங்களில் சிலர் இருக்கலாம்.. நான் என்ன செய்யவேண்டும்? துக்கம், கடுந்துயர், வருத்தத்தின் இந்த உணர்வுகளை இதே நேரத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கும் நீங்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என கர்த்தர் அறிந்திருப்பதாலும் அவர்களைக் கண்காணித்து வருவதாலும் நமக்கன்பானவர்கள் முழுமையாக காணாமற்போகவில்லை என்பதை தயவுசெய்து அறிந்துகொள்ளுங்கள். அவர்களும் அவருடைய பிள்ளைகளென்பதை நினைவுகூருங்கள்.
ஏன் சில மக்கள் மற்றொரு பாதையை எடுத்தார்கள் என்பதற்கான அனைத்துக் காரணங்களையும் புரிந்துகொள்ளுதல் கடினம். இந்த சூழ்நிலைகளில் அவர்களை நேசித்து, அரவணைத்து அவர்களின் நலனுக்காக ஜெபித்து, என்ன செய்யவேண்டும், சொல்லவேண்டுமென்பதை அறிந்துகொள்ள கர்த்தரின் உதவியை நாடுதலே நம்மால் செய்யமுடிந்த சிறப்பானது, அவர்களுடைய சாதனைகளில் உண்மையாக அவர்களுடன் களிகூருங்கள், அவர்களுக்கு நண்பர்களாயிருங்கள், அவர்களில் நல்லதைத் தேடுங்கள். அவர்களை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது ஆனால் நமது உறவுகளைப் பாதுகாக்கவேண்டும். ஒருபோதும் அவர்களைப் புறக்கணிக்காதீர்கள், தவறாக தீர்க்காதிருங்கள். அவர்களை நேசியுங்கள். பிள்ளைகள் தாங்களே வெளியே போகும்போது, வீட்டிற்கு வர அவர்கள் விரும்புகிறார்கள் என கெட்ட குமாரனின் உவமை நமக்குப் போதிக்கிறது. உங்களுக்கன்பானவர்களுக்கு இது நடந்தால், கெட்ட குமாரனின் தகப்பன் செய்ததைப்போல இரக்கத்தால் உங்கள் இருதயங்களை நிரப்பி, அவர்களிடம் ஓடிப்போய், அவர்களுடைய கழுத்தைக் கட்டி அவர்களை முத்தமிடுங்கள். 20
இறுதியாக, ஒரு தகுதியான வாழ்க்கையை வாழுங்கள், நீங்கள் எதை நம்புகிறீர்களென்பதற்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாயிருந்து, நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவினடத்தில் நெருக்கமாயிருங்கள். நம்முடைய ஆழமான துக்கங்களையும் வேதனைகளையும் அவர் அறிகிறார், புரிந்துகொள்கிறார், உங்களுக்கன்பானவர்களுக்கான உங்கள் முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் இந்த வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் அடுத்த வாழ்க்கையில் அவர் ஆசீர்வதிப்பார். சகோதர சகோதரிகளே, சுவிசேஷத் திட்டத்தில் நம்பிக்கை ஒரு முக்கியமான பங்கென்பதை எப்போதும் நினைவுகொள்ளுங்கள்.
பல ஆண்டுகளாக சபைக்கு சேவை செய்வதில், தங்களுடைய வாழ்க்கையில் இந்தக் கொள்கைகளை தீவிரமாகவும் தொடர்ந்தும் பிரயோகிக்கிற உண்மையுள்ள அங்கத்தினர்களை நான் கண்டிருக்கிறேன். “மேரி” என நான் குறிப்பிடுகிற ஒரு ஒற்றைத் தாயின் சங்கதி இது. துரதிருஷ்டவசமாக, மேரிக்கு விவாகரத்து பிரச்சினை வந்தது. அவளுடைய குடும்பத்திற்கு சம்பந்தமான அவளுடைய மிக முக்கியமான தீர்மானங்கள் ஆவிக்குரியதாயிருக்க வேண்டுமென அந்த நேரத்தின் புள்ளியில் மேரி கண்டுணர்ந்தாள். ஜெபித்தல், வேத வாசிப்பு, உபவாசம், சபை மற்றும் ஆலயத்திற்குச் செல்வது தொடர்ந்து அவளுக்கு முக்கியமானதாய் இருக்கவேண்டுமா?
எப்போதுமே மேரி விசுவாசமுள்ளவளாயிருந்தாள், அந்த முக்கியமான தருணத்தில், சத்தியமாக இருக்கிறதாக ஏற்கனவே அவள் அறிந்திருக்கிறதை பற்றிக்கொண்டிருக்க அவள் தீர்மானித்தாள். “குடும்பம் உலகிற்கு ஓர் பிரகடனத்தில்” அவள் வலிமையைக் கண்டாள். அன்பிலும் நீதியிலும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவும் தேவனின் கட்டளைகளை எப்போதும் கைக்கொள்ள அவர்களுக்குப் போதிக்கவும் பெற்றோருக்கு ஒரு பரிசுத்த கடமையிருக்கிறது என அநேக அற்புதமான கொள்கைகளுக்கு மத்தியில் அது போதிக்கிறது.21 கர்த்தரிடமிருந்து பதில்களுக்காக அவள் தொடர்ந்து தேடினாள், ஒவ்வொரு குடும்ப அமைப்பிலும் அவற்றை தனது நான்கு பிள்ளைகளுடன் அவள் பகிர்ந்துகொண்டாள். சுவிசேஷத்தைப்பற்றி ஒரு குடும்பமாக அவர்கள் அடிக்கடி விவாதித்து, ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்களையும சாட்சிகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.
அவர்கள் கடந்துவந்த துயரங்களுக்கு அப்பால் அவளுடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்மீது ஒரு நேசத்தையும், சேவை செய்யவும் இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஒரு விருப்பத்தை வளர்த்தார்கள். அவர்களில் மூன்றுபேர் உண்மையுள்ள முழுநேர ஊழியத்தை செய்தார்கள், கடைசியானவன் இப்போது தென் அமெரிக்காவில் ஊழியம் செய்துகொண்டிருக்கிறான். “எங்களுடைய வீட்டில் கர்த்தர் எப்போதுமே இருப்பதால் என்னுடைய தாய் எங்களைத் தனியாக வளர்த்தார் என நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, அவரைக்குறித்து எங்களுடன் அவருடைய சாட்சியை பகிர்ந்தபோது நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய கேள்விகளுடன் அவரிடத்தில் திரும்ப ஆரம்பித்தோம். வாழ்க்கையில் சுவிசேஷத்தை அவர் கொண்டுவந்ததற்காக நான் மிக நன்றியுள்ளவளாயிருக்கிறேன்” என இப்போது திருமணமாகி தனது விசுவாசத்தில் உறுதியாயிருக்கிற எனக்கு மிகவும் பரிச்சயமான மூத்த மகள் பகிர்ந்துகொண்டாள்.
சகோதர, சகோதரிகளே, அவளுக்கு வாழ்க்கையில் சவால்களிருந்தபோதிலும் ஆவிக்குரிய கற்றுக்கொள்ளுதலின் மையமாக அவளுடைய வீடிருக்கச் செய்ய இந்த நல்ல தாயால் முடிந்தது. எத்தியோப்பியனின் கேள்வியைப்போலவே, “ஒரு தாய் அவர்களை வழிநடத்துவதைத் தவிர எப்படி என்னுடைய பிள்ளைகள் கற்றுக்கொள்ளமுடியும்?” என மேரி அநேக நேரங்களில் தன்னையே கேட்டுக்கொண்டாள்.
சுவிசேஷத்தில் என்னுடைய அன்பான கூட்டாளிகளே, உண்மையான நோக்கத்துடனும், பரிசுத்த ஆவியின் செல்வாக்கின் கீழும் ஆர்வத்துடனும் இதயப்பூர்வமாகவும், உறுதியாகவும், உண்மையாகவும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நாம் கர்றுக்கொள்ளவும் ஒருவருக்கொருவர் போதிக்கவும் நாம் நாடும்போது, இந்த போதனைகள் இருதயங்களை மாற்றி தேவனின் சத்தியங்களின்படி வாழ ஒரு விருப்பத்தை உணர்த்தும் என நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன்.
இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகர் என நான் சாட்சியளிக்கிறேன், அவர் மீட்பராயிருக்கிறார், அவர் ஜீவிக்கிறார் அவருடைய தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள், வெளிப்படுத்துபவர்கள் மூலமாக அவர் தனது சபையை வழிநடத்துகிறார் என்பதை நான் அறிவேன். தேவன் ஜீவிக்கிறாரென்றும் அவர் நம்மை நேசிக்கிறாரென்றும் நான் சாட்சியளிக்கிறேன். அவர் நம்மை நம் அனைவரையும் அவருடைய பிரசன்னத்திற்குள் திரும்பிவர விரும்புகிறார். நமது ஜெபங்களுக்கு அவர் செவி சாய்க்கிறார். இந்த சத்தியங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன்,ஆமென்