2010–2019
அவசியமான காரியங்கள் ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாக்கு
ஏப்ரல் 2019 பொது மாநாடு


2:3

அவசியமான காரியங்கள் ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாக்கு

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் நமது தனிப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற நாம் முயற்சிக்கும்போது ஆசீர்வாதங்கள் வரும்.

சமீபத்தில் நடந்த பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தொடர் மாற்றங்களால் சாட்சியாக்கப்பட்டதில் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இன்னும் அதிகமாக வீட்டை மையப்படுத்துவதாகவும் சபை ஆதரிக்கப்பட்டதாகவுமிருக்கிறது. “வருவதற்கு இன்னும் அதிகமிருக்கிறது. … உங்களுடைய சக்தி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். இது உற்சாகமாக இருக்கப்போகிறது.”1என தலைவர் ரசல் எம்.நெல்சன் நமக்கு ஆலோசனையளித்தார்.

கர்த்தருடைய சபையில் இந்த நடந்துகொண்டிருக்கிற மாற்றங்களால் ஏராளமான அடிப்படை மாற்றங்களை நாம் ஒன்றுசேர்ந்து கருத்தில் கொள்ளும்போது பரிசுத்த ஆவியின் உதவிக்காக நான் ஜெபிக்கிறேன், அழைக்கிறேன்.

வீட்டை மையப்படுத்துகிற, சபை ஆதரிக்கிற சுவிசேஷ கற்றுக்கொள்ளுதல்

சமீபத்தில் நடந்த ஒரு ஆசாரியத்துவ தலைமையின் மாநாட்டில் மூப்பர் க்ரைக் சி. கிறிஸ்டென்சன் என்னுடைய கூட்டாளியாக இருந்தார். வீட்டை மையப்படுத்துகிற, சபை ஆதரிக்கிற கொள்கைக்கு மாறுதலை அவர் வலியுறுத்த இரண்டு எளிய கேள்விகளை அவர் பயன்படுத்தினார். ஞாயிற்றுக் கிழமை சபை கூட்டங்களுக்குப் பின் நமது வீடுகளுக்குத் திரும்பி “இன்று சபையில் இரட்சகரைப்பற்றியும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றியும் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என கேட்பதற்குப் பதிலாக, “இரட்சகரைப்பற்றியும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றியும் இந்த வாரத்தில் உங்கள் வீட்டில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என நாம் கேட்கவேண்டும். ஓய்வு நாளை சரியாக ஆசரித்தல், புதிய பாடத்திட்டம், கூட்ட நேர அட்டவணை மாற்றம் எல்லாம், வீடுகளிலும் சபையிலும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள நமக்கு உதவுகிறது.

கர்த்தருடைய போதனைகளைக் கற்றுக்கொள்ளவும், அதன்படி வாழவும், இரட்சிப்பின், மேன்மையடைதலின் நியமங்களை சரியான அதிகாரம் பெற்றவர்களால் பெறுவதற்கு பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஒவ்வொரு அங்கத்தினர்களுக்கும் ஒரு தனிப்பட்ட பொறுபபிருக்கிறது. நாம் அறிந்துகொள்ளவும், செய்யவும், அர்ப்பணிப்பான சீஷர்களாக மாறுவதற்கும், முடிவுபரியந்தம் துணிவுடன் நிலைத்திருக்கவும் செய்யவேண்டிய ஒவ்வொன்றையும் நமக்குக் கூற அல்லது போதிக்க சபையை ஒரு நிறுவனமாக நாம் எதிர்பார்க்கக் கூடாது.2 மாறாக, நாம் கற்கவேண்டியதைக் கற்றுக்கொள்ளவும், எப்படி வாழவேண்டுமென நாம் அறிந்ததின்படி வாழவும், நாம் யாராய் மாறவேண்டுமென போதகர் விரும்புகிறார்போல மாறவும் நமக்கு தனிப்பட்ட பொறுப்பிருக்கிறது. கற்றுக்கொள்ளுதலுக்கும், வாழுதலுக்கும்,மாறுதலுக்கும் நமது வீடுகள் இறுதியான அமைப்பு.

ஒரு சிறு பிள்ளையாக ஜோசப் ஸ்மித் அவருடைய குடும்பத்திலிருந்து தேவனைப்பற்றிக் கற்றுக்கொண்டார். அவரைக்குறித்து தேவனுடைய சித்தத்தை கண்டுபிடிக்க அவரது முயற்சிகள், அநேக வெவ்வேறு கிறிஸ்தவ பிரிவுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடவும், வேதங்களை சிரத்தையுடன் தேடவும் தேவனிடத்தில் உண்மையாக ஜெபிக்கவும் ஜோசப்புக்குக் காரணமாயிருந்தன. பிதா மற்றும் குமாரன் தோன்றியதற்குப் பின்பு உடனேயே பரிசுத்த தோப்பிலிருந்து அவருடைய வீட்டிற்கு இளம் ஜோசப் ஸ்மித் திரும்பி, முதலாவதாக அவருடைய தாயிடம் அவர் பேசினார். அவர் “நெருப்பு மூட்டத்திற்கருகில் சாய்ந்தபோது என்ன விஷயமென [அவருடைய] தாயார் விசாரித்தார். ‘ஒன்றுமில்லை எல்லாமுமே சரியாகத்தானிருக்கிறது, நான் நன்றாகத்தானிருக்கிறேன்’ என [ஜோசப்] பதிலளித்தார். பின்னர் [அவர்] [தன்] தாயிடம் சொன்னார், ‘நானே அறிந்துகொண்டேன்’”3 நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு ஆற்றல்மிக்க கற்றுக்கொள்ளுதலின் மாதிரியை ஜோசப்பின் அனுபவம் வழங்குகிறது. நாமும்கூட நாமே கற்றுக்கொள்ளவேண்டும்.

அவருடைய பிள்ளைகள் அவரைப்போலவே ஆகுவதற்காகவே பரலோக பிதாவின் திட்டத்தின் உந்துதல் நோக்கம். அதன்படியே வளரவும்,முன்னேறவும் அத்தியாவசியமான வாய்ப்புகளுடன் அவர் நமக்கு வழங்குகிறார். “பதட்டத்திலும்”4, எப்போதுமில்லாத குழப்பத்திலும், துன்மார்க்கத்திலுமிருக்கிற ஒரு உலகத்தில் சத்தியத்தின்படி வாழவும் கற்றுக்கொள்ளவும் நமது அர்ப்பணிப்பு அதிகரித்த முக்கியமாயிருக்கிறது. வெறுமனே சபைக்கூட்டங்களில் கலந்துகொள்ளவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அதன்மூலம் “தீங்கு நாளிலே நம்மால் நிற்கமுடிகிற”5, ஆவிக்குரிய நல்லொழுக்கம் அனைத்தையும் பாதுகாப்பையும் பெறுதலுக்கு நாம் எதிர்பார்க்க முடியாது.

“அன்பிலும் நீதியிலும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்க பெற்றோருக்கு ஒரு பரிசுத்த கடமையிருக்கிறது”.6 உணர்த்தப்பட்ட சபைத் தலைவர்கள், ஆசிரியர்கள், நிகழ்ச்சிகள் தனிப்பட்டவர்களுக்கும், ஆவிக்குரியதில் வளர குடும்ப முயற்சிகளுக்கும் உதவுகிறது. உடன்படிக்கை பாதையில் முன்னேறிச் செல்ல நம் எல்லோருக்கும் உதவி தேவையாயிருந்தாலும் ஆவிக்குரிய வலிமையையும் திண்மையையும் விருத்தி செய்ய இறுதியான பொறுப்பு நம் ஒவ்வொருவரின்மீதுமிருக்கிறது.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் ஜீவவிருட்சத்தின் தரிசனத்தில் அவனுடைய தகப்பன் அறிந்துகொண்டதை தீர்க்கதரிசி லேகியின் குமாரன் நெப்பி பார்க்கவும், கேட்கவும், அவனே அறிந்துகொள்ளவும் விரும்பினான். நெப்பிக்கு தெளிவாக தேவையாயிருந்து, தனது “நற்கீர்த்தி பெற்ற பெற்றோரின்”7 எடுத்துக்காட்டாலும் போதனையாலும் அவனுடைய இளமையில் ஆசீர்வதிக்கப்பட்டான். இருந்தும், ஜோசப் ஸ்மித்தைப்போல கற்றுக்கொள்ளவும், அவனே அறிந்துகொள்ளவும் ஏங்கினான்.

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷத்தை மற்ற மக்கள் போதிப்பதை, கூருவதை நீங்கள் யாவரும், நானும் கேட்டால், பின்னர் அவரைக்குறித்த நமது சாட்சிகளின் அஸ்திபாரமும் அவருடைய மகத்தான பிற்காலங்களின் பணியும் மணலின் மேல் கட்டப்பட்டிருக்கும்.8 நாம் நேசிக்கிற, நம்பிக்கை வைத்திருக்கிற மற்ற மக்களிடமிருந்து சுவிசேஷத்தின் ஒளியையும் அறிவையும் பிரத்தியேகமாக சார்ந்திருக்கவோ அல்லது கடன் வாங்கவோ முடியாது.

விசேஷமாக, உலகத்திற்குள் நமது வருகையில் “தேவனின் வடிவங்களையும் நோக்கங்களையும் பிற்காலப் பரிசுத்தவான்கள் ஒவ்வொருவரும் அவனே அல்லது அவளே புரிந்துகொள்ளவேண்டும்”9 என தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார்.

“அதைப்பற்றி மிக சிறிதே நமக்குத் தெரியவேண்டிய, எதிர்கால நிலையில் மனிதனுக்கும் தேவனுக்கும் தூதர்களுக்குமுள்ள உறவைப்பற்றி ஆதாமின் நாட்களிலிருந்து எழுதப்பட்ட அனைத்தையும் நம்மால் படித்து புரிந்துகொள்ளமுடியுமா. மற்றவர்களின் அனுபவத்தை அல்லது அவர்களுக்கு கொடுக்கப்படுகிற வெளிப்படுதலைப் படித்தல் நமது நிலையைப்பற்றியும் தேவனுக்கு நமது உண்மையான உறவைப்பற்றியும் ஒருபோதும் நமக்கு ஒரு விரிவான பார்வையைக் கொடுக்கமுடியாது. அந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிற தேவனின் நியமங்களின் மூலமாக வரும் அனுபவத்தால் மட்டுமே இந்தக் காரியங்களைக் குறித்த அறிவைப் பெறமுடியும்.10

தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்குமான இந்த மிகப்பெரிய ஆவிக்குரிய குறிக்கோளின் சாதனையை இயலுவதே, காலங்களின் பரிபூரண ஊழியக்காலத்தின் இந்த குறிப்பிட்ட பருவத்தில் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் மிக வீட்டை மையப்படுத்துகிறதாகவும் சபை ஆதரிப்பதாகவும் மாறியிருப்பதின் அடிப்படை காரணங்களில் ஒன்று.

விட்டை மையப்படுத்துகிறதை சபை ஆதரிக்கிறதை கற்றுக்கொள்ளுதலின் தாக்கங்கள்

சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் வீட்டை மையப்படுத்துவதாகவும் சபை ஆதரிக்கிறதாகவும் அதிகரித்துக்கொண்டிருப்பதன் ஒரு சில அடிப்படை தாக்கங்களை நான் தொகுக்கிறேன்.

இறுதியான ஊழியப் பயிற்சி மையம் நமது வீடுகளிலிருக்கின்றன, இரண்டாவதான ஊழியப் பயிற்சி மையங்கள் ப்ரோவா, மணிலா, மெக்சிகோ நகரம் மேலும் பிற இடங்களிலிருக்கின்றன. நமது மிக தகவல் நிறைந்த ஞாயிறு பள்ளி வகுப்புகள், நாம் வசிக்கும் இடங்களில் தனிப்பட்ட, குடும்ப படிப்பாயிருக்கவேண்டும், உதவிகரமான ஆனால் இரண்டாவது ஞாயிறு பள்ளி வகுப்புகள் நமது கூடுமிடங்களில் நடைபெறுகிறது.

குடும்ப வரலாறு மையங்கள் இப்போது நமது வீடுகளிலிருக்கின்றன. நமது குடும்ப வரலாறு ஆராய்ச்சிப் பணிக்காக துணை ஆதரவு நமது கூடுமிடங்களிலும் கிடைக்கிறது.

முக்கிய ஆலய ஆயத்த வகுப்புகள் நமது வீடுகளில் நடைபெறுகிறது, முக்கியமான ஆனால் இரண்டாவது ஆலய ஆயத்த வகுப்புகள் அவ்வப்போது நமது கூடுமிடங்களிலும் நடத்தப்படுகிறது.

நம்மால் “பரிசுத்த ஸ்தலங்களில் நிற்கமுடிகிற”11 நமது வீடுகளை சரணாலயங்களாக்குதல் இந்த பிற்காலங்களில் அத்தியாவசியமானது. இ்ன்று நமது ஆவிக்குரிய வலிமைக்கும் பாதுகாப்பிற்கும் வீட்டை மையப்படுத்துதலையும் சபை ஆதரித்தலையும் கற்றுக்கொள்ளுதல் முக்கியமாயிருப்பதைப்போல வருங்காலத்தில் இன்னும் அதிக முக்கியமானதாயிருக்கும்.

வீட்டை மையப்படுத்துதலையும் சபை ஆதரித்தலையும் கற்றுக்கொள்ளுதலும், ஆலய ஆயத்தப்படுதலும்

கர்த்தரின் ஆலயத்தில் பரிசுத்த நியமங்களையும் உடன்படிக்கைகளையும் பெற நமது தனிப்பட்ட ஆயத்தத்திற்கும் தகுதிக்கும் வீட்டை மையப்படுத்துதலின் சபை ஆதரித்தலின் கொள்கை எவ்வாறு பொருந்துகிறதென்பதை தயவுசெய்து கருத்தில்கொள்ளவும்.

உண்மையில், ஆலய ஆயத்தங்கள் நமது வீடுகளில் மிக ஆற்றலுள்ளதாக இருக்கும். ஆனால் ஆலயத்திற்கு வெளியே ஆலய அனுபவத்தைப்பற்றி எதை பொருத்தமாக சொல்லலாம் சொல்லக்கூடாது என்பதைப்பற்றி அநேக சபை அங்கத்தினர்களுக்கு நிச்சயமில்லை.

எதனால் இந்த நிச்சயமற்றது உள்ளதென்பதை தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் விவரித்தார்.

“ஆலயம் ஒரு பரிசுத்தமான இடம், ஆலயத்திலுள்ள நியமங்கள் பரிசுத்த தன்மையுள்ளது. அதன் பரிசுத்தத்தால், சிலநேரங்களில் நமது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் ஆலயத்தைப்பற்றி எதையும் சொல்ல நாம் தயக்கமடைகிறோம்.

“அதன் விளைவாக ஆலயத்திற்குப்போக ஒரு உண்மையான விருப்பத்தை அநேகர் வளர்ப்பதில்லை, அல்லது அவர்கள் அங்கே போகும்போது, அவர்கள் பிரவேசிக்கிற கடமைகள் மற்றும் உடன்படிக்கைகளுக்காக ஆயத்தப்படுத்த அதிக பின்னணியில்லாமல் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

ஆலயத்திற்காக நமது இளம் வயதினரை ஆயத்தப்படுத்த சரியான புரிந்துகொள்ளுதல் அல்லது பின்னணி அளவிடமுடியாமல் உதவி, ஆபிரகாம் அவனுடைய ஆசீர்வாதத்தை நாடியதைப்போல தங்களுடைய ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை நாட தங்களுக்குள் ஒரு விருப்பத்தை வளர்க்கும்.12

தலைவர் பென்சன் வலியுறுத்தியதைப்போல சரியான புரிந்துகொள்ளுதலை அடைய இரண்டு அடிப்படை வழிகாட்டுதல்கள் நமக்கு உதவும்.

வழிகாட்டுதல் எண் 1 நாம் கர்த்தரை நேசிப்பதால் எப்போதும் பயபக்தியுடன் அவருடைய பரிசுத்த ஆலயத்தைப்பற்றி நாம் பேசவேண்டும். பரிசுத்த ஆலய சடங்குகளில் நாம் பெறுகிற உடன்படிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட விசேஷித்த அடையாளங்களை நாம் வெளியிடவோ விவரிக்கவோ கூடாது. வெளியிடக்கூடாது என ஆலயத்தில் நாம் குறிப்பாக வாக்களித்த பரிசுத்த தவலை நாம் விவாதிக்கக்கூடாது.

வழிகாட்டுதல் எண் 2 ஆலயம் கர்த்தரின் வீடு. ஆலயத்திலுள்ள எல்லாமும் நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆலய நியம்ங்கள் மற்றும் உடன்படிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட கோட்பாட்டின், கொள்கையின் அடிப்படை நோக்கங்களை நாம் விவாதிக்கலாம்.

தலைவர் ஹோவார்ட் டபுள்யு ஹன்டர் ஆலோசனையளிக்கிறார், “ஆலயத்தில் நமக்கிருக்கிற ஆவிக்குரிய உணர்வுகளைப்பற்றி நமது பிள்ளைகளுடன் நாம் பகிர்ந்துகொள்ளுவோமாக. கர்த்தருடைய ஆலயத்தின் நோக்கங்களைப்பற்றி பொருத்தமாக நாம் சொல்லக்கூடிய காரியங்களை மிக ஆர்வத்துடனும் மிக வசதியுடனும் அவர்களுக்கு நாம் சொல்லக்கடவோம்”13

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திலிருந்து தலைவர் ரசல் எம்.நெல்சன் வரை தலைமுறைகள் முழுவதும் ஆலய நியமங்களின், உடன்படிக்கைகளின் கோட்பாட்டு நோக்கங்கள் சபைத் தலைவர்களால் விரிவாக போதிக்கப்பட்டு வருகிறது.14 துவக்க நியமங்கள், தரிப்பித்தல்கள், திருமணங்கள் மற்றும் பிற முத்திரிக்கும் நியமங்களைப்பற்றி கற்றுக்கொள்ள நமக்குதவ, வளங்கள் நிறைந்த நீர்த்தேக்கங்கள், அச்சில், ஒலி நாடாவில்,ஒளிநாடாவில், பிறவடிவங்களிலிருக்கின்றன.15 கீழ்ப்படிதலின் பிரமாணம், பலியின் பிரமாணம், சுவிசேஷத்தின் பிரமாணம், கற்புடமையின் பிரமாணம், அபிஷேகத்தின் பிரமாணத்தைக் கைக்கொள்ள உடன்படிக்கைகளைப் பெறுவதால் கைக்கொள்ளுவதால் இரட்சகரைப் பின்பற்றுவதைப்பற்றி தகவலும் கிடைக்கிறது.16 temples.churchofjesuschrist.org. ல் கிடைக்கும் மிகச்சிறந்த காரியங்களுடன் சபை அங்கத்தினர்கள் அனைவரும் பரிச்சயமாயிருக்கவேண்டும்.

temples.churchofjesuschrist.org

ஆலய நியமங்களின் பரிசுத்த தன்மைக்கும் மிகச்சரியான, பொருத்தமான, பகிரங்கமாக கிடைக்கக்கூடியதறகும், சபையால் வெளியிடப்படுகிற ஆலயங்களைப்பற்றிய மதிப்பு மிக்க தகவலுக்குமிடையில் முக்கிய சமநிலையை தலைவர் ரசல் எம்.நெல்சன் வலியுறுத்தினார். “ ‘பாவநிவர்த்தி,’ ‘ உடன்படிக்கை’ , ‘பலிகள், ‘ஆலயம்.’ போன்ற ஆலயத்திற்கு சம்பந்தப்பட்டவற்றை வேதாகம அகராதியிலுள்ள குறிப்புகளை அங்கத்தினர்கள் படிக்கும்படி நான் சிபாரிசு செய்கிறேன். யாத்திராகமம், அதிகாரங்கள் 26-29 யையும் லேவியராகமம் அதிகாரம் 8யையும். ஒருவர் படிக்க விரும்பலாம். பழைய ஏற்பாடு, அப்படியே, விலையேறப்பெற்ற முத்துவிலுள்ள மோசே, ஆபிரகாம் புஸ்தகங்கள் ஆலயப்பணியின், அதன் நியமங்களின் நிலைத்திருக்கிற தன்மைகளின் பண்டைக் காலத்தை கோடிட்டுக்காட்டுகிறது.”17

பரிசுத்த ஆலய உடையணிதலின் காணொலி.

ஆகவே, “ஆலயத்தில் வித்தியாசமான ஆடைகளை உடுத்துகிறார்கள் என பள்ளிக்கூடத்தில் யாரோ ஒருவர் என்னிடம் கூறினார் என உங்கள் மகன் அல்லது மகள் சொல்கிறதாக கற்பனை செய்யுங்கள் அது சரியா?” “பரிசுத்த ஆலய உடையணிதல்.” என்ற தலைப்பில் temples.churchofjesuschrist.org ல் ஒரு குறும் காணொலி கிடைக்கிறது. அவர்களுடைய தேவ பக்திக்கான உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த பண்டைக்காலங்களிலிருந்து ஆண்களும் பெண்களும் பரிசுத்த இசையை, பிரார்த்தனையின் வெவ்வேறு வடிவங்களை, குறியூட்டு மத ஆடைகளை, சைகைகளை, சடங்குகளை எவ்வாறு தழுவினார்கள் என இந்த மிகச்சிறந்த ஆதாரம் விவரிக்கிறது அப்படியாக, இந்த காணொலியைப்போல அடிப்படை அறிவுரை மற்றும் குறிப்பிடத்தக்க வளங்கள் மூலமாக ஆலயத்தின் மகிமையான ஆசீர்வாதங்களுக்காக வீட்டை மையமான ஆயத்தத்தை சபை ஆதரிக்கிறது அதிக பயனுள்ள தகவல் உங்களுக்குக் கிடைக்கிறது18

கர்த்தருடைய ஆவியின் சாந்தத்தில் நடக்க நாம் முயற்சிக்கும்போது19, பரிசுத்த ஆலய நியமங்களையும் உடன்படிக்கைகளையும்பற்றி விவாதிக்க எது பொருத்தமாயிருக்கும் எது பொருத்தமாயிருக்காது என்பதற்கிடையில் அவசியமான சமநிலையை புரிந்துகொள்ளவும் நமது வீடுகளில் அடையவும் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.

வாக்களிப்பும் சாட்சியும்

உண்மையில் உங்களுடைய சுவிசேஷக் கற்றுக்கொள்ளுதல் வீட்டை மையப்படுத்துகிறதாகவும் சபை ஆதரிப்பாகவும் மாறமுடியமா என உங்களில் சிலர் வியப்புறுகிறீர்கள் என நான் சந்தேகிக்கிறேன். ஒருவேளை உங்கள் வீட்டில் நீங்கள் ஒருவர் மட்டுமே சபை அங்கத்தினராக இருக்கலாம், அல்லது ஆதரவில்லாத துணையாய், அல்லது ஒற்றை பெற்றோராக, அல்லது திருமணமாகாது தனிமையாக வசிப்பவராக, விவாகரத்தான பிற்காலப் பரிசுத்தவானாக இருக்கலாம், மேலும் உங்களுக்கு இந்த கொள்கைகள் எவ்வாறு பொருந்துமென்பதைப்பற்றிய கேள்விகளுடன் நீங்களிருக்கலாம். ஒருவருக்கொருவரைப் பார்த்துக்கொண்டு “இதை நம்மால் செய்யமுடியுமா?” என கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிற ஒரு கணவன் மனைவியாக நீங்கள் இருக்கலாம்

ஆம், நீ இதைச் செய்யலாம். ஆசீர்வாதங்களுக்கான சாத்தியம் உள்ளுக்குள் பாய்ந்து உ்ங்கள் வாழ்க்கையில் வெளிப்படையாயிருக்கும் என நான் வாக்களிக்கிறேன். கதவுகள் திறக்கும். வெளிச்சம் பிரகாசிக்கும். சிரத்தையுடனும் பொறுமையுடனும் பாதுகாக்க உங்கள் திறன் அதிகரிக்கும்.

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் நமது தனிப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற நாம் முயற்சிக்கும்போது ஈடு செய்யும் ஆசீர்வாதங்கள் வரும் என நான் சாட்சியளிக்கிறேன். “அவசியமான காரியங்கள் ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ள நாம் உண்மையில் ஆயத்தமாயிருக்கலாம்“. 20 அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் வாக்களித்து, சாட்சியளிக்கிறேன், ஆமென்.