2010–2019
நிறைவுக் குறிப்புகள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


2:3

நிறைவுக் குறிப்புகள்

தனிப்பட்ட தகுதிக்கு, ஒரு முழுமனமாற்றமும், கர்த்தரைப்போலாயிருப்பதற்கு இருதயமும் தேவையாயிருக்கிறது.

என் அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டின் நிறைவுக்கு நாம் வரும்போது, செய்திகளை உணர்த்தியதற்காவும் நம்மை திருத்துகிற இசைக்காவும் நாம் கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கிறோம். உண்மையிலேயே ஒரு ஆவிக்குரிய விருந்தை நாம் சுவைத்தோம்.

அவருடைய கோட்பாட்டை கேட்கிற, கவனிக்கிற மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபித சுவிசேஷம் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கொண்டுவரும் என நாம் அறிவோம்.. ஒவ்வொரு வீடும், சமாதானமும், அன்பும், கர்த்தருடைய ஆவியும் தங்குகிற ஒரு உண்மையான விசுவாசத்தின் ஒரு சரணாலயமாக மாறும் எனவும் நாம் அறிவோம்.

நிச்சயமாக,மறுஸ்தாபிதத்தின் மகுடமான ஆபரணம் பரிசுத்த ஆலயம். அவருடைய இரண்டாம் வருகையில் இரட்சகரை வரவேற்க ஆயத்தமாயிருக்கிற மக்களை ஆயத்தப்படுத்த அதன் பரிசுத்த நியமங்களும் உடன்படிக்கைகளும் முக்கியமானவை. தற்போது நம்மிடம் 166 பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களிருக்கின்றன, அதிகமானவை வந்துகொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தின் பிரதிஷ்டைக்கு முன்னர் ஒரு திறந்த இல்லம் நிகழ்ச்சி நடைபெறும். நமது விசுவாசத்தை சாராத அநேக நண்பர்கள், அந்த ஆலயங்களின் சுற்றுப்பயணங்களில் பங்கேற்று, ஆலய ஆசீர்வாதங்களைப்பற்றி சிலவற்றை அறிந்துகொள்வார்கள். அந்த பார்வையாளர்களில் சிலர் அதிகமானவற்றை அறிந்துகொள்ள நகருவார்கள். ஆலயத்தின் ஆசீர்வாதங்களுக்காக அவர்கள் எப்படி தகுதியுள்ளவர்களாகுவார்கள் என சிலர் உண்மையாகக் கேட்பார்கள்.

சபையின் அங்கத்தினர்களாக, அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். எவருக்கும், அவர்களையே ஆயத்தப்படுத்துகிற அனைத்து மக்களுக்கும் ஆலய ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது என நாம் விவரிக்கலாம். ஆனால், ஒரு அபிஷேகிக்கப்பட்ட ஆலயத்திற்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு முன்பு அவர்கள் தகுதியுள்ளவர்களாக வேண்டும். அவருடைய ஆலயத்தில் கிடைக்கக்கூடிய நித்திய ஆசீர்வாதங்களில் அவருடைய பிள்ளைகள் அனைவரும் பங்கேற்க கர்த்தர விரும்புகிறார். அவருடைய பரிசுத்த ஆலயத்திறகுள் பிரவேசிக்க ஒவ்வொரு நபரும் என்ன செய்யவேண்டுமென அவர் வழிகாட்டினார்.

அத்தகைய ஒரு போதிக்கும் வாய்ப்புக்கான ஒரு சிறந்த இடம் ஆலயத்தின் வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துவதே, “கர்த்தருக்கு பரிசுத்தம் கர்த்தரின் ஆலயம்”. இன்று தலைவர் ஐரிங் மற்றும் அநேகரின் செய்தி நம்மை மிகப் பரிசுத்தமாக்க உணர்த்தியது. ஒவ்வொரு ஆலயமும் பரிசுத்த ஸ்தலம், ஒவ்வொரு ஆலய புரவலரும் அதிக பரிசுத்தமாக மாற பாடுபடுகிறார்கள்.

ஆலயத்திற்குள் பிரவேசிக்க எல்லா தேவைகளும் தனிப்பட்ட பரிசுத்தத்தை சார்ந்திருக்கிறது. அந்த ஆயத்த நிலையை மதிப்பிட, ஆலயத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க விரும்புகிற ஒவ்வொரு நபருக்கும் இரண்டு நேர்காணல்கள் இருக்கும், முதலாவதாக, ஒரு ஆயர், ஆயத்துவ ஆலோசகர், அல்லது கிளைத்தலைவருடன், இரண்டாவதாக, பிணைய அல்லது ஊழியத் தலைவர் அல்லது அவருடைய ஆலோசகர்களில் ஒருவருடன். அந்த நேர்காணல்களில் ஏராளமான கேள்விகள் கேட்கப்படும்.

அந்தக் கேள்விகளில் சில, தெளிவுக்காக சமீபத்தில் திருத்தப்பட்டன. இப்போது, உங்களுக்காக அவைகளை மறுபரிசீலனை செய்ய நான் விரும்புகிறேன்.

  1. நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியில் உங்களுக்கு விசுவாசமும் சாட்சியுமுண்டா?

  2. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியிலும் உங்களுடைய இரட்சகராகவும் மீட்பராகவும் அவருடைய பாத்திரத்திலும் உங்களுக்கு சாட்சியுண்டா?

  3. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ மறுஸ்தாபிதத்தில் உங்களுக்கு சாட்சியுண்டா?

  4. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவரை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் மற்றும் ஆசாரியத்துவத்தின் சகல திறவுகோல்களையும் கையாள பூமியில் ஒரே நபராகவும் நீங்கள் அவரை ஆதரிக்கிறீர்களா?

    பிரதான தலைமையின் அங்கத்தினர்கள், மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

    சபையின் பிற பொது அதிகாரிகளையும், உள்ளூர் தலைவர்களையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

  5. அவருக்கு முன்பாக சகல காரியங்களும் “சுத்தமாகச் செய்யப்படவேண்டுமென” கர்த்தர் சொல்லியிருக்கிறார்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:41).

    உங்கள் சிந்தனையிலும் நடத்தையிலும் ஒழுக்க தூய்மைக்கு நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

    கற்புடமை நியாயப்பிரமாணத்திற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?

  6. உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் பிறருடன் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் பொது நடத்தையில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?

  7. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு எதிரான எந்த போதனைகளையும், நடைமுறைகள் அல்லது கோட்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது ஊக்குவிக்கிறீர்களா?

  8. வீ்ட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்கவும், உங்கள் கூட்டங்களில் பங்கேற்கவும், திருவிருந்தை ஆயத்தப்படுத்தவும் தகுதியுள்ளவராக பங்கெடுக்க, சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுடனும் கட்டளைகளுடனும் இணக்கத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

  9. நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் நேர்மையாயிருக்க நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

  10. நீங்கள் முழு தசமபாகம் செலுத்துபவரா?

  11. ஞானவார்த்தையை நீங்கள் புரிந்துகொண்டு அதற்கு கீழ்ப்படிகிறீர்களா?

  12. முன்னாள் வாழ்க்கைத்துணை அல்லது பிள்ளைகளுக்கு பண அல்லது பிற எந்தவித பொறுப்புகள் உங்களுக்கிருக்கிறதா?

    ஆம், என்றால் அந்த பொறுப்புகளை தற்போது நிறைவேற்றிக்கொண்டிருக்கிறீர்களா?

  13. தரிப்பித்தலில் அறிவுரை கொடுக்கப்பட்டதைப்போல ஆலய உள்ளாடைகளை அணிதலையும் சேர்த்து ஆலயத்தில் நீங்கள் செய்த உடன்படிக்கைகளை நீங்கள் கைக்கொள்ளுகிறீர்களா?

  14. உங்கள் மனந்திரும்புதலின் பகுதியாக ஆசாரியத்துவத்துடன் தீர்க்கப்படவேண்டிய கடுமையான பாவங்கள் எதாவது உங்கள் வாழ்க்கையில் உண்டா?

  15. கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் ஆலய நியமங்களில் பங்கேற்கவும் தகுதியுள்ளவராக உங்களை நீங்களே கருதுகிறீர்களா?

இந்த மறுபரிசீலிக்கப்பட்ட ஆலய பரிந்துரை கேள்விகள் உலகமுழுவதிலுமுள்ள சபைத் தலைவர்களுக்கு நாளை வினியோகிக்கப்படும்.

அந்தக் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதிலளிப்பதற்கும் கூடுதலாக, வயதுவந்த ஒவ்வொரு ஆலய புரவலரும் அவர்களுடைய வழக்கமான ஆடைகளுக்கு உள்புறமாக ஆசாரியத்துவத்தின் பரிசுத்த ஆடையை அணிவார்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. கர்த்தரைப்போலாக ஒவ்வொரு நாளும் முயற்சிக்க, இது ஒரு உள் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் ஒவ்வொரு நாளும் செய்யப்பட்ட உடன்படிக்கைகளுக்கு விசுவாசமுள்ளவர்களாக நிலைத்திருக்கவும், ஒவ்வொரு நாளும் உடன்படிக்கைப் பாதையில் ஒரு உயர்ந்த, பரிசுத்த வழியில் நடக்கவும் நமக்கு நினைவூட்டுகிறது.

ஒரு கணம் நமது இளைஞர்களிடம் பேச நான் விரும்புகிறேன். ஆலய பரிந்துரைகளின் வரையறுக்கப்பட்ட பயன்பாடுக்கு தகுதியாயிருக்க நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். பதிலி ஞானஸ்நான நியமிப்புகளுக்கும் திடப்படுத்தலுக்கும் உங்களுடைய ஆயத்தத்தில் உங்களுக்கு பொருத்தமான கேள்விகள் மட்டுமே உங்களிடம் கேட்கப்படும். அந்த பரிசுத்தமான ஆலயப் பணியில் பங்கேற்க உங்களுடைய தகுதிக்காவும் வாஞ்சைக்காகவும் நாங்கள் மிக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.

கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க தனிப்பட்ட தகுதிக்கு அதிக ஆவிக்குரிய ஆயத்தம் தேவையாயிருக்கிறது. ஆனால், கர்த்தருடைய உதவியுடன் சாத்தியமில்லாதது எதுவுமில்லை. சில விஷயங்களில் ஒரு ஆலயத்திற்காக ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு மக்களை உருவாக்குவதைவிட ஒரு ஆலயத்தைக் கட்டுவது எளிது. கர்த்தரைப் போலிருக்க, ஒரு நேர்மையான குடிமகனாயிருக்க, ஒரு பரிசுத்த நபராயிருக்க மனதிலும் இருதயத்திலும் ஒரு முழு மனமாற்றம், தனிப்பட்ட தகுதிக்கு தேவையாயிருக்கிறது.

“முடிவற்ற மகிழ்ச்சியுள்ள”1 நிலையில் சகல நித்தியத்திற்கும் உங்களுடைய குடும்பத்தை ஆயத்தப்படுத்துவதையும் சேர்த்து, இத்தகைய ஆயத்தப்பணி இந்த வாழ்க்கையில எண்ணிலடங்காத ஆசீர்வாதங்களையும், வரப்போகிற வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஆசீர்வாதங்களையும் கொண்டுவரும்.

இப்போது மற்றொரு தலைப்புக்கு திரும்ப நான் விரும்புகிறேன். வரப்போகிற ஆண்டிற்கான திட்டங்கள். முதல் தரிசனம் என நமக்குத் தெரிந்த தேவ தோற்றத்தை ஜோசப் ஸ்மித் அனுபவித்ததிலிருந்து 2020ம் ஆண்டின் வசந்த காலத்தில் இது சரியாக 200 ஆண்டுகளானது. பிதாவாகிய தேவனும் அவருடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் 14 வயதான இளைஞனான ஜோசப் ஸ்மித்துக்குத் தோன்றினார்கள். துல்லியமாக வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டதைப்போல அந்த நிகழ்ச்சி அதன் பரிபூரணத்தில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் தொடக்கத்தை குறித்தது2

மரோனி, யோவான் ஸ்நானன், ஆரம்பகால அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, யோவானையும் சேர்த்து, பின்னர் பரலோக தூதர்களிடமிருந்து தொடர்ச்சியான வருகைகள் வந்தது. மோசே, எலியாஸ் மற்றும் எலியாவையும் சேர்த்து மற்றவர்கள் தொடர்ந்தார்கள். மீண்டும் பூமியில் தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க ஒவ்வொருவரும் தெய்வீக அதிகாரத்தைக் கொண்டுவந்தார்கள்.

அதிசயமாக, பரிசுத்த வேதாகமத்திற்கு ஒரு துணையான வேதமாக, மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாட்டையும் நாம் பெற்றோம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் மற்றும் விலையேறப்பெற்ற முத்துவில் வெளியிடப்பட்ட வெளிப்படுத்தல் தேவனுடைய கற்பனைகளைப்பற்றிய, நித்திய சத்தியத்தைப்பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை அதிகமாக வளப்படுத்தியது

அப்போஸ்தலர்கள், எழுபதினமர், கோத்திரப் பிதா, பிரதான ஆசாரியன், மூப்பர், ஆயர், ஆசாரியர்கள்,போதகர்கள் மற்றும் உதவிக்காரரையும் சேர்த்து, ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களும் அலுவல்களும் மறுஸ்தாபிக்கப்பட்டது கர்த்தரை நேசிக்கிற பெண்கள், அதன் பரிபூரணத்தில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தில் எல்லா முக்கிய பாகங்களாயிருக்கிற, ஒத்தாசை சங்கம், ஆரம்ப வகுப்பு, இளம் பெண்கள், ஞாயிறு பள்ளி மற்றும் பிற அழைப்புகளில் வீரமுள்ளவர்களாக சேவை செய்கிறார்கள்.

அப்படியாக, 2020 ஆண்டு இருநூறு ஆண்டாக நியமிக்கப்படும். எந்த மாநாடையும் விட அடுத்த ஏப்ரலில் பொது மாநாடு வித்தியாசமாக இருக்கும். அடுத்த ஆறு மாதங்களில், மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்தின் அஸ்திபாரங்களை ஞாபகமார்த்தமாக்குகிற ஒரு தனித்துவமான மாநாடுக்கு ஒவ்வொரு அங்கத்தினரும் ஒவ்வொரு குடும்பமும் ஆயத்தப்படுவார்களென நான் நம்புகிறேன்.

விலையேறப்பெற்ற முத்துவில் பதிக்கப்பட்டுள்ள முதல் தரிசனத்தின் ஜோசப் ஸ்மித்தின் குறிப்புகளை மீண்டும் படிப்பதில் உங்கள் ஆயத்தப்படுதலை ஆரம்பிக்க நீங்கள் விரும்பலாம். அடுத்த ஆண்டுக்காக என்னைப் பின்பற்றி வாருங்கள் படிப்பு முறை மார்மன் புஸ்தகமாயிருக்கிறது. “மார்மன் புஸ்தகத்திலிருந்து நான் பெற்றுக்கொண்ட அறிவு திடீரென என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டால் என்னுடைய வாழ்க்கை எப்படி மாறுபட்டிருக்கும்?” அல்லது “முதல் தரிசனத்தைத் தொடர்ந்து வந்த நிகழ்வுகள் எனக்கும் நான் நேசிப்பவர்களுக்கும் எப்படி ஒரு வேறுபாட்டை உண்டாக்கும்?” போன்ற முக்கியமான கேள்விகளைத் தியானிக்க நீங்கள் விரும்பலாம். மேலும், இப்போது கிடைக்கக்கூடிய மார்மன் புஸ்தகத்தின் காணொலியுடன் உங்களுடைய மற்றும் குடும்ப தியானத்தில் அவைகளை இணைக்க நீங்கள் விரும்பலாம்.

உங்களுடைய சொந்தக் கேள்விகளை தேர்ந்தெடுங்கள். உங்களுடைய சொந்த திட்டத்தை வடிவமையுங்கள். மறுஸ்தாபிதத்தின் மகிமையான ஒளியில் உங்களை மூழ்கடியுங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, அடுத்த ஏப்ரலில் பொது மாநாடு ஞாபகார்த்தமாக மட்டுமல்ல, அது மறக்கமுடியாததாயிருக்கும்.

இப்போது நிறைவுசெய்வதில், ஒவ்வொரு கடக்கிற நாளிலும் சந்தோஷமாகவும் பரிசுத்தமாகவும் நீங்கள் ஒவ்வொருவரும் மாறும்படியாக என்னுடைய அன்பையும் என்னுடைய ஆசீர்வாதத்தையும் உங்களுடன் விட்டுவைக்கிறேன். அதே நேரத்தில், “தேவனின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டு, பணி முடிந்ததென3 மகா யேகோவா சொல்லும்வரை”, சபையில் வெளிப்படுத்தல் தொடருகிறது என்றும் தொடரும் என்றும் தயவுசெய்து உறுதியாயிருங்கள்.

நான் அப்படியே உங்களை ஆசீர்வதிக்கிறேன், தேவன் ஜீவிக்கிறாரென்ற என்னுடைய சாட்சியுடன் உங்களுக்கான என் அன்பை மீண்டும் உறுதி செய்கிறேன். இயேசுவே கிறிஸ்து இது அவருடைய சபை, நாம் அவருடைய மக்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.