ஒரு விசேஷித்த மகத்துவமான அழைப்பு
விசுவாசமிக்க பெண்களாக, நமது சொந்த வெளிப்படுத்தலைப் பெற உள்ளுணர்வளிக்கிற தீர்க்கதரிசி ஜோசப்பின் அனுபவங்களிலிருந்து சத்தியத்தின் கொள்கைகளை நாம் பெறலாம்.
மறுஸ்தாபிதத்தில் பெண்களின் தொடர்ச்சியான பங்குபற்றி இன்று எனது குறிப்புக்களில் கவனம் செலுத்துவதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நமது பரலோக பிதாவின் திட்டத்தில் வரலாறு முழுவதிலும் பெண்கள் ஒரு குறிப்பிடத்தக்க இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது தெளிவானதாகும். தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “பெண்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, கர்த்தரின் சபையிலும், மனைவிகளாகவும், தாய்களாகவும், பாட்டிகளாகவும், சகோதரிகளாகவும், அத்தைகளாகவும், ஆசிரியைகளாகவும், தலைவிகளாகவும்,விசேஷமாக விசுவாசத்தின் அர்ப்பணிப்புமிக்க காப்பாளர்களாகவும் உதாரணங்களாகவும் இருந்தது மட்டுமல்ல, அவர்களது செல்வாக்கை அளவிட முடியாது.” 1
178 ஆண்டுகளுக்கு முன்பு, நாவூவின் முந்தய ஒத்தாசைச் சங்கத்தில், “தங்கள் சிலாக்கியத்தின்படி வாழ” சகோதரிகளுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஆலோசனையளித்தார். 2 அவர்களது உதாரணங்கள் இன்று நமக்கு போதிக்கின்றன. இன்று நாம் நிற்கிற அஸ்திவாரத்தைப்போட அவர்கள் உதவியபோது, அவர்கள் ஒற்றுமையாக தீர்க்கதரிசியின் குரலைப் பின்பற்றினர் மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தில் உறுதியாக வாழ்ந்தனர். சகோதரிகளே, இது நமது முறை. கர்த்தரிடமிருந்து ஒரு தெய்வீகப் பணியைப் பெற்றிருக்கிறோம், நமது விசுவாசமிக்க தனித்துவமுள்ள பங்களிப்புகள் முக்கியமானவை.
தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் விளக்கினார், “இந்த பூமியில் காட்சிகள் முடிவுறும்போது நீதியுள்ள பெண்களாக இருக்க, இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு முன்பு, இது ஒரு விசேஷித்த மகத்தான அழைப்பு இருக்கிறது. நீதியான பெண்ணின் பெலனும் செல்வாக்கும் இன்று, அதிக அமைதியான நேரங்களில் இருக்கக்கூடியதை விட அதிகமாக இன்று பத்து மடங்கு இருக்க முடியும்.” 3
தலைவர் நெல்சனும் அதுபோல மன்றாடினார், “முன்னே அடியெடுத்து வைக்குமாறு … சபையின் சகோதரிகளிடம் நான் கெஞ்சுகிறேன்! முன்பு எப்போதையும் விட அதிகமாக, உங்கள் வீட்டிலும், உங்கள் சமுதாயத்திலும், தேவனுடைய ராஜ்யத்திலும் உங்களுக்கு உரிமைப்பட்ட தேவையான இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.” 4
அண்மையில், நியூயார்க்கின் பல்மைராவிலுள்ள ஸ்மித் குடும்ப வீட்டின் மாதிரியில், தலைவர் ரசல் எம். நெல்சனை ஒரு குழு ஆரம்ப வகுப்பு பிள்ளைகளுடன் சந்திக்கும் சிலாக்கியம் பெற்றேன். முன்னோக்கி படியெடுத்து வைக்க அவர்கள் என்ன செய்ய முடியும் என பிள்ளைகளுக்கு நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி கற்பிப்பதைக் கேளுங்கள்.
சகோதரி ஜோன்ஸ்:”தலைவர் நெல்சனிடம் நீங்கள் கேட்க விரும்பும் நீங்கள் வைத்திருக்கும் கேள்வியை அறிய நான் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் இங்கு தீர்க்கதரிசியோடு அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் தீர்க்கதரிசியிடம் கேட்க விரும்பிய ஏதாவது இருக்கிறதா? ஆம், பேள்.”
பேள்: “தீர்க்கதரிசியாக இருப்பது கடினமா? நீங்கள் உண்மையாகவே சுறுசுறுப்பாக இருக்கிறீர்களா?”
தலைவர் நெல்சன்: “உண்மைதான் அது கடினம். இரட்சகர் போல் ஆவதற்காக செய்யும் அனைத்து காரியமும் கடினமானது. உதாரணமாக, மோசேக்கு பத்து கட்டளைகளை தேவன் கொடுக்க விரும்பியபோது, எங்கு செல்லுமாறு அவர் மோசேயிடம் கூறினார்? ஒரு மலை உச்சிக்கு, சீனாய் மலை உச்சிக்கு. ஆகவே பத்துக் கட்டளைகளைப் பெற மலையின் உச்சிக்கு நெடுந்தூரம் மோசே நடக்க வேண்டியிருந்தது. இப்போது, பரலோக பிதா சொல்லியிருக்கலாம், ‘மோசே, நீ அங்கு தொடங்கு, நான் இங்கு தொடங்குகிறேன், நான் உன்னை பாதி வழியில் சந்திப்பேன்.’ இல்லை, கர்த்தர் முயற்சியை விரும்புகிறார், ஏனெனில் அது இல்லாமல் வரமுடியாத பிரதிபலன்களை முயற்சி கொண்டுவருகிறது. உதாரணமாக, நீங்கள் எப்போதாவது பியானோ கற்றிருக்கிறீர்களா?”
பிள்ளைகள்: “ஆம்.”
பேள்: “நான் வயலின் கற்கிறேன்.”
தலைவர் நெல்சன்: “நீங்கள் பயிற்சி செய்கிறீர்களா?”
பிள்ளைகள்: “ஆம்.”
தலைவர் நெல்சன்: “நீங்கள் பயிற்சி செய்யவில்லையானால் என்ன நடக்கும்?”
பேள்: “நீங்கள் மறந்து விடுவீர்கள்.”
தலைவர் நெல்சன்: “ஆம், நீங்கள் முன்னேறுவதில்லை, இல்லையா? ஆகவே பதில் ஆம், பேள். அதற்கு முயற்சி தேவை, நிறைய கடின உழைப்பு, நிறைய படிப்பு, அதற்கு முடிவில்லை. அது நல்லது! அது நல்லது, ஏனெனில் நாம் எப்போதும் முன்னேறுகிறோம். அடுத்த வாழ்க்கையில் கூட நாம் முன்னேறுகிறோம்.”
இந்த அருமையான பிள்ளைகளுக்கு தலைவர் நெல்சனின் பதில், நம் ஒவ்வொருவருக்கும் நீள்கிறது. கர்த்தர் முயற்சியை விரும்புகிறார், முயற்சி பிரதிபலன்களைக் கொண்டுவருகிறது. நாம் பயிற்சி செய்து கொண்டேயிருக்கிறோம். கர்த்தரைப் பின்பற்ற நாம் முயற்சி செய்யும்வரை, நாம் எப்போதும் முன்னேறுகிறோம். 5 அவர் இன்று பூரணமாவதை எதிர்பார்க்கவில்லை. நாம் நமது தனிப்பட்ட சீனாய் மலையில் ஏறிக்கொண்டிருக்கிறோம். காலம் கடந்துபோகும்போது, நமது பயணத்துக்கு உண்மையாகவே முயற்சி, கடின உழைப்பு, படிப்பு, தேவை, ஆனால் முன்னேறுவதற்கு நமது ஒப்புக்கொடுத்தல் நித்திய பிரதிபலன்களைக் கொண்டு வருகிறது. 6
முயற்சி, கடின உழைப்பு, படிப்பு பற்றி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மற்றும் முதல் தரிசனத்திலிருந்து நாம் என்ன அதிகம் கற்கிறோம்? நமது தனித்துவமான, தொடர் பாத்திரங்களில் முதல் தரிசனம் நமக்கு வழிகாட்டுதல் கொடுக்கிறது. விசுவாசமுள்ள பெண்களாக, நமது சொந்த வெளிப்படுத்தல் பெற உள்ளுணர்வுகள் கொடுக்கிற தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடமிருந்து சத்தியத்தின் கொள்கைகளை நாம் பெறலாம். உதாணமாக:
-
கஷ்டங்களின் மத்தியில் நாம் பிரயாசப்படுகிறோம்.
-
செயல்பட ஞானம் பெற நாம் வேதத்திடம் திரும்புகிறோம்.
-
நாம் தேவனில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் செயலில் காட்டுகிறோம்.
-
சத்துருவின் செல்வாக்கை திருப்பி அனுப்ப, நமக்கு உதவ தேவனிடத்தில் கேட்க நாம் நமது வல்லமையை பயன்படுத்துகிறோம்.
-
நாம் நமது இருதயங்களின் வாஞ்சைகளைத் தேவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.
-
நமது வாழ்க்கைத் தேர்வுகளை வழிநடத்தவும், நாம் அவரிடத்தில் திரும்பும்போது நம்மேல் தங்குகிற அவரது ஒளியில் கவனம் செலுத்துகிறோம்.
-
அவர் நம்மை பேர்பேராக அறிகிறார், நாம் நிறைவேற்ற தனிப்பட்ட பாத்திரங்களை வைத்திருக்கிறார் என அவர் அறிவதை நாம் உணர்கிறோம். 7
கூடுதலாக நாம் தெய்வீக திறமைகளும் நித்திய தகுதியும் பெற்றிருக்கிறோம் என்ற அறிவை ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதம் செய்தார். நமது பரலோக பிதாவுடன் அந்த உறவினிமித்தம் அவரிடமிருந்து நாம் வெளிப்படுத்தல் பெறுவதை அவர் எதிர்பார்க்கிறார் என நான் நம்புகிறேன்.
“பரிசுத்த ஆவியானவரைப் பெறவும்,” அதிகம் கற்கவும், “உலகத்தின் காரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, … சிறந்த காரியங்களை நாடவும்,” தேவனோடு “[தன்] உடன்படிக்கைகளில் இசைந்திருக்கவும்” கர்த்தர் எம்மா ஸ்மித்துக்கு அறிவுரை வழங்கினார். 8 கற்றல் முன்னேற்றத்தோடு இணைந்தது, விசேஷமாக, பரிசுத்த ஆவியின் தொடர்ந்த தோழமை நமக்கு போதிக்கிறபடி—நமது கவனத்தைத் திருப்பக்கூடிய அல்லது நமது முன்னேற்றத்தை தாமதிக்கக்கூடியவற்றை, ஒரமாக தள்ளிவைப்பது நம் ஒவ்வொருவருக்கும் தேவை.
தலைவர் நெல்சன் சொன்னார், “வெளிப்படுத்தல் பெற உங்கள் ஆவிக்குரிய ஆற்றலை அதிகரிக்குமாறு உங்களிடம் கெஞ்சுகிறேன்.” 9 முன்னோக்கி அடியெடுத்து வைக்க, பெண்களின் திறமைபற்றி நான் சிந்திக்கும்போது, நமது தீர்க்கதரிசியின் வார்த்தைகள் என்னோடு தொடர்ந்து இருக்கிறது. அவர் நம்மிடம் கெஞ்சுகிறார், அது முன்னுரிமையைக் குறிக்கிறது. பாவத்தால் சுகவீனப்பட்டிருக்கிற உலகில் வெளிப்படுத்தல் பெற்று, அதன்படி செயல்பட்டு ஆவிக்குரிய பிரகாரமாய் எப்படி வாழ்வதென அவர் நமக்கு போதிக்கிறார். 10 கர்த்தரின் கட்டளைகளைக் கனம் பண்ணி வாழ்ந்து, நாம் அப்படிச் செய்யும்போது, எம்மா ஸ்மித் போலவே “நீதியின் கிரீடம்” நாமும் வாக்களிக்கப்பட்டுள்ளோம். 11 இந்த வாழ்நாளில் நாம் செல்கிற பாதை தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அறிவதன் முக்கியத்துவம் பற்றி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார். அந்த அறிவில்லாமல், “நாம் [நமது] மனங்களில் தளர்வுற்று மயக்கமடைவோம்.” 12
இந்த மாநாட்டில் நமது வாழ்க்கையை மாற்றவும், முன்னேற்றவும், சுத்திகரிக்கவும் நமக்கு உணர்த்துகிற சத்தியங்களைக் கேட்போம். தனிப்பட்ட வெளிப்படுத்தல் மூலம் “பொது மாநாட்டில் அமிழ்ந்து போதல்” என சிலர் அழைக்கிறதை நாம் தடுக்கலாம்—இப்போது அவை அனைத்தையும் செய்ய தீர்மானத்துடன் நாம் செல்லும்போது. பெண்கள் பல தொப்பிகள் அணிகிறார்கள், அவை அனைத்தையும் ஒரே தடவையாக அணிவது சாத்தியமல்ல, தேவையற்றது. இன்று எந்த வேலையில் கவனம் செலுத்துவது என தீர்மானிக்க ஆவி நமக்கு உதவுகிறது. 13
பரிசுத்த ஆவி மூலம் கர்த்தரின் அன்பான செல்வாக்கு நமது முன்னேற்றம் பற்றிய அவரது முன்னுரிமையை அறிய நமக்கு உதவுவார். தனிப்பட்ட வெளிப்படுத்தலுக்கு செவிகொடுப்பது சுய முன்னேற்றத்துக்கு வழிநடத்துகிறது. 14 நாம் செவிகொடுத்து செயல் படுகிறோம். 15 கர்த்தர் சொன்னார், “நீங்கள் பெறுவீர்கள் என விசுவாசத்தில் நம்பி என் நாமத்தில் பிதாவிடத்தில் கேளுங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள், தெளிவான காரியங்களை அது வெளிக்காட்டுகிறது.” 16 நமது தொடர்ச்சியான பங்கு, தொடர் வெளிப்படுத்தல் பெறுவதாகும்.
அப்படிச் செய்வதில் பெருமளவில் நாம் திறமை பெறும்போது, “உண்மையாகவே இந்த உலகத்தின் காரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, சிறந்த காரியங்களை நாடும்போது,” இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் பணிக்காக ஊழியம் செய்யவும் நிறைவேற்றவும் நமது தனிப்பட்ட பங்குகளில் நாம் அதிக வல்லமை பெறலாம். 17 அதையே செய்ய நமது எழும்பும் தலைமுறைக்கு நாம் பின்னர் அதிக ஆற்றலுடன் உணர்த்தலாம்.
சகோதர சகோதரிகளே, நாமனைவரும் நமது வாழ்க்கையில் தேவ வல்லமையை நாடுகிறோம். 18 இன்று தேவ பணியை நிறைவேற்ற ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே அழகான ஒற்றுமை இருக்கிறது. முதலில் ஞானஸ்நான தண்ணீரிலும், பின்பு பரிசுத்த ஆலயங்களின் சுவர்களுக்குள்ளும் செய்யப்படுகிற உடன்படிக்கை மூலம் நாம் ஆசாரியத்துவத்தின் வல்லமை பெறுகிறோம். 19 தலைவர் நெல்சன் நமக்கு போதித்தார், “தேவனோடு உடன்படிக்கைகளைச் செய்து அந்த உடன்படிக்கைகளை கைக்கொள்ளுகிற எல்லா ஆண்களும் பெண்களும், ஆசாரியத்துவ நியமங்களில் தகுதியுள்ளவர்களாக பங்குபெறுகிறவர்கள் தேவனின் வல்லமையை நேரடியாக பெறலாம்.” 20
ஆசாரியத்துவ வல்லமையை என் உடன்படிக்கைகள் மூலம், நான் அணுக முடியும் என ஒரு பெண்ணாக முன்பு என் வாழ்க்கையில் நான் உணரவில்லை என்பது எனது இன்றைய தனிப்பட்ட ஒப்புதல் ஆகும். 21 சகோதரிகளே, நாம் நமது “உடன்படிக்கைகளோடு இசைந்திருக்கும்போது,” 22 வேதங்களின் சத்தியங்களை தழுவிக்கொள்ளும்போதும், நமது ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும்போதும் நாம் ஆசாரியத்துவ வல்லமையை அடையாளம் கண்டு பேண வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
“அவரிலே உண்டான அசைக்க முடியாத விசுவாசத்தினால், இரடசிக்க வல்லமையுடையவரின் நற்குணங்களில் முழுமையாக சார்ந்திருந்து” நமது பரலோக பிதா மற்றும் நமது இரட்சகருக்கு நமது அர்ப்பணிப்பை தைரியமாக அறிவிப்போமாக. 23 நமது உயர்வான ஆவிக்குரிய திறமையை நோக்கி சந்தோஷமாக இந்த பயணத்தைத் தொடர்ந்து, அன்பு, சேவை, தலைமைத்துவம், மற்றும் மனதுருக்கத்தின் மூலம் அப்படியே செய்ய நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவோமாக.
மூப்பர் ஜேம்ஸ் இ. டால்மேஜ் நமக்கு மென்மையாக நினைவூட்டினார், “பெண்கள் மற்றும் பெண்மையின் மாபெரும் உலக நாயன் இயேசு கிறிஸ்து.” 24 மறுஸ்தாபிதத்தில் பெண்களின் தொடர் பங்களிப்பு பற்றிய இறுதி ஆய்வில் நம் அனைவருக்கும் உயர்வான பங்கு என்ன? அவர் சொல்வதைக்கேட்டு, 25 அவரைப் பின்பற்ற, 26 அவரை நம்ப, 27 அவரது அன்பின் விரிவாக்கமாக, 28 ஆக வேண்டும் என நான் சாட்சியளிக்கிறேன். அவர் ஜீவிக்கிறார். 29 இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.