ஆலயமும் உங்களுடைய ஆவிக்குரிய அஸ்திபாரமும்
உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது எந்த வகையான கிளர்ச்சியாவது ஏற்பட்டால், ஆவிக்குரிய ரீதியாக பாதுகாப்பான இடம் உங்கள் ஆலய உடன்படிக்கைகளுக்கு உள்ளே வாழ்வதுதான்!
என் அன்பான சகோதர சகோதரிகளே, என்னுடைய இருதயத்தின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள இந்த காலை நேரத்தில் உங்களோடிருக்க நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
உங்களுக்குத் தெரிந்தாற்போல, வரலாற்று சிறப்புமிக்க சால்ட் லேக் ஆலயத்தின் முக்கிய புனரமைப்புகளை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக உழைத்த அதன் அசல் அடித்தளத்தின் பிரதான வலுவூட்டல் இந்த சிக்கலான திட்டத்தில் அடங்கும். ஆனால் இந்த ஆலயம் மிக நீண்ட காலம் நிற்கவேண்டும். இந்த மாபெரும் திட்டத்தின் முன்னேற்றத்தை மே மாத இறுதியில் நான் மேற்பார்வையிட்டேன். என் மனைவி வென்டியும் நானும் பார்த்ததை நீங்கள் பார்த்து பராட்டுவீர்களென நான் நினைத்தேன். “How Firm a Foundation”1 என்ற பாடல் ஏன் எங்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறதென்பதை நீங்கள் பார்ப்பீர்களென நான் நினைக்கிறேன்.
சால்ட் லேக் ஆலய புனரமைப்பின் இடத்திலிருந்து காணொளி: “சால்ட் லேக் ஆலயத்தின் அசல் அடித்தளத்தை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கார்டன் ரூமுக்குக் கீழே உள்ள ஒரு பகுதியில் நான் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த முழு கட்டிடத்தின் கைவினைத்திறனை நான் ஆராய்ந்தபோது முன்னோடிகள் சாதித்ததைத் கண்டு வியப்புற்றேன். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அவர்களுக்குக் கிடைத்த கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் மட்டுமே பயன்படுத்தி அவர்கள் இந்த மகத்தான ஆலயத்தைக் கட்டினார்கள் என்பதை நான் கருத்தில் கொள்ளும்போது முற்றிலுமாக நான் பிரமிக்கிறேன்.
“இந்த அநேக தசாப்தங்களுக்குப் பின்னர், எவ்வாறாயினும், அடித்தளத்தை நாம் நெருக்கமாக ஆராய்ந்தால், அரிப்பின் பாதிப்புகள், அசல் கல் வேலைகளில் உள்ள இடைவெளிகள் மற்றும் கட்டுமானத்தின் நிலைத்தன்மையின் பல்வேறு நிலைகளை நாம் காண முடியும்.
“நவீன பொறியியலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டுமான வல்லுநர்கள் அந்த அசல் அடித்தளத்தை வலுப்படுத்த என்ன செய்ய முடியும் என்பதை இப்போது நான் பார்க்கும்போது, நான் முற்றிலும் ஆச்சரியப்படுகிறேன். அவர்களுடைய பணி திடுக்கிட வைக்கிறது!
“எந்தவொரு கட்டிடத்தின் அடித்தளம், குறிப்பாக இது போன்ற பெரிய ஒன்று, பூகம்பங்கள், அரிப்பு, அதிக காற்று மற்றும் அனைத்து கட்டிடங்களையும் பாதிக்கும் தவிர்க்க முடியாத கீழிறக்கத்தைத் தாங்கும் அளவுக்கு வலுவாகவும் போதுமான நெகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் வலுப்படுத்தும் சிக்கலான பணி இந்த பரிசுத்த ஆலயத்தை அடித்தளத்துடன் வலுப்படுத்தும் மற்றும் காலத்தின் சோதனையில் நிற்கும்.”
ஆயிரவருஷத்திற்குள் இயற்கையின் சக்திகளைத் தாங்கும் ஒரு அடித்தளத்தை அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய இந்த மதிப்பிற்குரிய ஆலயத்துக்கு வழங்க நாங்கள் எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை. அதுபோலவே, நமது தனிப்பட்ட ஆவிக்குரிய அடித்தளத்தை வலுப்படுத்த, ஒருவேளை நாம் ஒருபோதும் எடுத்திராத நாம் ஒவ்வொருவரும் அசாதாரணமான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. முன்சம்பவிக்காத நேரங்கள் முன்சம்பவிக்காத நடவடிக்கைகளை அழைக்கிறது.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, இவைகள் பிற்காலங்கள். வரவிருக்கும் ஆபத்துகளையும் அழுத்தங்களையும் நீங்களும் நானும் தாங்க வேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் நமது மீட்பரான இயேசு கிறிஸ்துவின் கன்மலையின் மீது உறுதியான ஆவிக்குரிய அடித்தளத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்.2
ஆகவே, நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன், “உங்களுடைய அடித்தளம் எவ்வளவு உறுதியாயிருக்கிறது? சுவிசேஷத்தின் உங்களுடைய சாட்சிக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் என்ன வலுப்படுத்துதல்கள் தேவையாயிருக்கிறது?
இரட்சகரும் அவருடைய கோட்பாடும் ஆலயத்தின் இருதயமாக இருப்பதால் ஆலயத்தில் நமது விசுவாசத்தையும், ஆவிக்குரிய வலிமையையும் வலுப்படுத்த ஆலயம் மையத்தில் உள்ளது. அறிவுறுத்தலின் மூலமும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் ஆலயத்தில் கற்பிக்கப்பட்ட யாவும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கிறது. பரிசுத்த உடன்படிக்கைகள் மூலமாக அவருடைய அத்தியாவசியமான நியமங்கள் அவருடன் நம்மைக் கட்டுகிறது. பின்னர், நமது உடன்படிக்கைகளை நாம் கைக்கொள்ளும்போது, அவருடைய சுகப்படுத்தலுடனும் வல்லமையை பலப்படுத்துவதுடனும் அவர் நம்மோடு தரிப்பிக்கப்படுகிறார்.3 முன்னிருக்கிற நாட்களில் அவருடைய வல்லமை எப்படி நமக்குத் தேவைப்படும்.
“நீங்கள் ஆயத்தமாக இருந்தால் பயப்பட வேண்டாம்”4 என நாம் வாக்களிக்கப்பட்டிருக்கிறோம். இந்த உத்தரவாதம் இன்று ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. இன்றைய முன்சம்பவிக்காத சவால்கள் இருந்தபோதிலும், இயேசு கிறிஸ்துவின் மீது அடித்தளத்தைக் கட்டியெழுப்பவும், அவருடைய வல்லமையை ஈர்க்க கற்றுக்கொள்ளவும், இந்த சகாப்தத்தின் தனித்துவமான கவலைகளுக்கு அடிபணிய தேவையில்லை என்று கர்த்தர் அறிவித்துள்ளார்.
ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் பூர்வமானது. ஜெபிக்கவும், உடன்படிக்கைகளைச் செய்யவும், பலிகளைக் கொடுக்கவும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கர்த்தர் அறிவுறுத்தினார்.5 உண்மையில், “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிற மக்கள் எப்போதெல்லாம் அவருக்கிருக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆலயத்தைக் கட்ட அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.”6 ஆலய போதனைகள், ஆடை அணிதல், மொழி மற்றும் அதிகமானவற்றிற்கு தரமான புத்தகங்கள் குறிப்புகளோடு நிறைந்திருக்கிறது.7 நாம் நம்புகிற ஒவ்வொன்றும் அவருடைய ஒவ்வொரு உடன்படிக்கை மக்களுக்கும் தேவன் செய்த ஒவ்வொரு வாக்களிப்பும் ஆலயத்தில் சேர்ந்து வருகிறது. தேவனுடன் உடன்படிக்கை செய்கிறவர்களும், அவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் உடன்படிக்கையின் பிள்ளைகள் என விலையேறப்பெற்ற உண்மையை ஒவ்வொரு காலத்திலும், ஆலயம் கோடிட்டுக் காட்டிற்று.
அப்படியாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு, கர்த்தருடைய வீட்டில், தேவனுடன் செய்த அதே உடன்படிக்கையை நாம் செய்யலாம். அதே ஆசீர்வாதங்களை நம்மால் பெறமுடியும்!
அதன் ஆரம்ப நாட்களிலிருந்து இந்த ஊழியக்காலத்திற்கு ஆலயங்கள் ஒரு பகுதியாக இருக்கின்றன.8 முத்திரிக்கும் அதிகாரத்தின் திறவுகோல்களை, ஜோசப் ஸ்மித்துக்கு கர்த்லாந்து ஆலயத்தில் எலியா பொறுப்பளித்தான். நாவூ ஆலயத்தில் ஆசாரியத்துவத்தின் முழுமை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது.9
தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தலின் மறுஸ்தாபிதத்தை முன்னேற்றிய வெளிப்பாடுகளை அவருடைய இரத்த சாட்சியின் மரணம் வரை ஜோசப் ஸ்மித் தொடர்ந்து பெற்றார்.10 இருப்பினும், கூடுதலான சுத்திகரிப்பு தேவை என்பதை அவர் அங்கீகரித்தார் மே 1842ல், பிரிகாம் யங்குக்கு தரிப்பித்தலை நிர்வகித்த பின்னர், பிரிகாமுக்கு ஜோசப் கூறினார், “இது சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த சூழ்நிலையில் எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம், இந்த விஷயத்தை நீங்கள் கையில் எடுத்து இந்த விழாக்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து முறைப்படுத்த விரும்புகிறேன்.”11
தீர்க்கதரிசியின் மரணத்தைத் தொடர்ந்து, நாவூ ஆலயத்தின்12 நிறைவை யங் மேற்பார்வையிட்டு, பின்னர் யூட்டா பிரதேசத்தில் ஆலயங்களைக் கட்டினார். செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தின் கீழ் தளங்களின் பிரதிஷ்டையில், “இந்த காரியத்தை நான் நினைக்கும் போது, ஏழு இடிமுழக்கத்தின் நாக்குகள் மக்களை எழுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”13 என பிரிகாம் யங் சொன்னபோது, பதிலி ஆலய வேலையின் அவசரத்தை தீவிரமாக அவர் அறிவித்தார்.
அந்த நேரத்திலிருந்த முன்னோக்கி, ஆலய நியமங்கள் மெதுவாக சுத்திகரிக்கப்பட்டது. இரட்சகரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்குள் ஏன் நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் ஆலய நியமங்களின் நிர்வகித்தலும் கூட மாறிக்கொண்டே இருக்கின்றன என தலைவர் ஹெரால்டு பி. லீ விவரித்தார். தலைவர் லீ சொன்னார்: “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கைகள் தெய்வீகமானது. சபையின் கொள்கைகள் மற்றும் [கோட்பாட்டை] வெளிப்பாட்டால் கர்த்தரைத் தவிர வேறு யாரும் மாற்றுவதில்லை. ஆனால், கொடுக்கப்பட்ட நேரத்தில், தலைமை வகிப்பவர்களுக்கு உணர்த்தப்பட்ட வழிகாட்டுதல் வருவதால் முறைகள் மாறும்.”14
பல ஆண்டுகளாக திருவிருந்தை நிர்வகித்தல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில், திருவிருந்தின் தண்ணீர் ஒரு பெரிய பாத்திரத்தில் சபைக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் அதிலிருந்து பானம் பண்ணினார்கள். இப்போது நாம் வீசிவிடுகிற கிண்ணங்களைப் பயன்படுத்துகிறோம். நடைமுறைகள் மாறிவிட்டன, ஆனால் உடன்படிக்கைகள் அப்படியே இருக்கின்றன.
இந்த மூன்று உண்மைகளை சிந்தியுங்கள்:
-
மறுஸ்தாபிதம் ஒரு நடைமுறை, ஒரு நிகழ்வு அல்ல, மேலும், கர்த்தர் மீண்டும் வரும்வரை அது தொடரும்.
-
இஸ்ரவேல் கூடிவருதலின் இறுதியான நோக்கம்,15 தேவனுடைய விசுவாசமிக்க பிள்ளைகளுக்கு ஆலயத்தின் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதாகும்.
-
அந்த நோக்கத்தை மிக ஆற்றலுடன் எவ்வாறு நிறைவேற்றுவது என நாம் நாடும்போது, அதிக உள்ளுணர்வுகளை கர்த்தர் வெளிப்படுத்துகிறார். தொடர்ந்த மறுஸ்தாபிதத்திற்கு தொடர்ந்த வெளிப்பாடு தேவை.
அவருடைய விசுவாசமிக்க பிள்ளைகளுக்கு ஆலய ஆசீர்வாதங்களை எடுத்துப்போக, சிறந்த வழிகளிருக்கிறதா என பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் அடிக்கடி கர்த்தரை கேட்டிருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சாரத்தில் வேறுபாடுகளிருந்தாலும், ஆலய அறிவுரை, உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களில் உலகளாவிய துல்லியத்தையும், சீரானதையும் எவ்வாறு உறுதி செய்வதென்பதற்கு நாங்கள் வழக்கமாக வழிகாட்டுதலை நாடுகிறோம்.
கர்த்தருடைய வழிகாட்டுதலின் கீழ் மற்றும் நமது ஜெபங்களுக்கு பதிலில், சமீபத்திய நடைமுறை சரிசெய்தல்கள் செய்யப்பட்டன. அவர்தாமே நீங்கள் என்ன உடன்படிக்கைகளைச் செய்கிறீர்கள் என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய பரிசுத்த நியமங்களை முழுமையாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்தாமே விரும்புகிறார். உங்களுடைய சிலாக்கியங்கள், வாக்களிப்புகள், பொறுப்புகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார். இதற்கு முன் எப்போதுமே உங்களுக்கில்லாத ஆவிக்குரிய உள்ளுணர்வுகளும், விழிப்புணர்வுகளும் உங்களுக்கு இருக்க அவர் விரும்புகிறார். ஆலயப் புரவலர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவருக்கும் இதை அவர் விரும்புகிறார்.
கர்த்தர் அவருடைய சபையை தீவிரமாக வழிநடத்துகிறார் என்பதற்கு, தற்போதைய ஆலய நடைமுறைகளின் சரிசெய்தல்கள், மற்றும் அதைத் தொடருகிற மற்றவைகள் தொடர்ச்சியான சான்றுகள். அவர்மீதும், அவரின் ஆலயத்தின் நியமங்கள், உடன்படிக்கைகள்மீதும் நமது வாழ்க்கையை மையமாக்குவதால், நமது ஆவிக்குரிய அடித்தளங்களை மிக ஆற்றலுடன் வலுப்படுத்த நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகளை அவர் வழங்கிக்கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆலய பரிந்துரையை, நருங்குண்ட இருதயத்தை, கர்த்தருடைய கற்றுக்கொள்ளும் வீட்டிற்கு ஒரு தேடுதல் மனதை நீங்கள் கொண்டுவரும்போது அவர் உங்களுக்குப் போதிப்பார்.
தூரமோ, சுகாதாரச் சவால்களோ அல்லது பிற தடைகளோ சிறு காலத்துக்கு உங்கள் ஆலய வருகையை தடைசெய்தால், நீங்கள் செய்த உடன்படிக்கைகளை உங்கள் மனதில் ஒத்திகை பார்க்க ஒரு வழக்கமான நேரத்தை ஏற்படுத்த நான் உங்களை அழைக்கிறேன்.
நீங்கள் இன்னமும் ஆலயத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால், மிக அடிக்கடி செல்லுங்கள், குறைவாக இல்லை. அங்கே, அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாக கர்த்தர் உங்களுக்கு போதித்து உங்களை உணர்த்துவாராக. காலப்போக்கில், பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் வெளிப்பாட்டின் இடமாக ஆலயம் மாறும் என்று நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்.
ஒவ்வொரு இளம் வயது வந்தோரிடமும் நேரடியாக நான் பேச எனக்கு சாத்தியமானால், ஆலயத்தில் முத்திரிக்க முடிகிற ஒரு துணையைத் தேடும்படி நான் உங்களை வேண்டுகிறேன். உங்கள் வாழ்க்கையில் இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நீங்கள் ஆச்சரியப்படலாம். இது எல்லா வித்தியாசத்தையும் உண்டுபண்ணும் என நான் வாக்களிக்கிறேன்! ஆலயத்தில் நீங்கள் திருமணம் செய்து, திரும்ப திரும்ப அங்கே நீங்கள் வரும்போது, உங்களுடைய தீர்மானங்களில் நீங்கள் பலப்படுத்தப்பட்டு வழிநடத்தப்படுவீர்கள்.
ஆலயத்தில் இன்னும் முத்திரிக்கப்படாத ஒவ்வொரு கணவனுடனும் மனைவியுடனும் என்னால் பேச முடிந்தால், அந்த முடிசூட்டும், வாழ்க்கையை மாற்றும் நியமத்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் உங்களிடம் வேண்டுகிறேன்.16 அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துமா? நீங்கள் என்றென்றும் முன்னேறவும் என்றென்றும் ஒன்றாக இருக்கவும் விரும்பினால் மட்டுமே. ஒன்றாக இருக்க விரும்புதல் அதை அப்படியாக்காது. எந்த பிற சடங்கும் அல்லது ஒப்பந்தமும் அதை அப்படிச் செய்யாது.17
அவன் அல்லது அவளுடைய நித்திய துணையை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல், திருமணத்திற்கு எதிர்பார்த்திருக்கிற ஒவ்வொரு ஆணுடனும் பெண்ணுடனும் என்னால் பேச முடியுமானால், கர்த்தருடைய வீட்டில் திருமணம் தரிப்பிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டாம் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். ஆசாரியத்துவ வல்லமையுடன் ஆயுதம் தரிப்பிக்கப்பட்டிருத்தல் என்பதற்கு அர்த்தமென்ன என்பதைக் கற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் இப்போது ஆரம்பியுங்கள்.
ஆலய உடன்படிக்கைகளையும் நியமங்களையும் புரிந்துகொள்ள ஜெபத்துடனும் இடைவிடாதும் நாடுவதற்கு, ஆலய உடன்படிக்கைகளைச் செய்த உங்கள் ஒவ்வொருவரையும் நான் வேண்டுகிறேன்.18 ஆவிக்குரிய கதவுகள் திறக்கும். பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையில் திரையை எப்படிப் பிரிப்பதென்பதையும், தேவனுடைய தூதர்கள் உங்களை சந்திக்க எவ்வாறு கேட்பதென்பதையும், பரலோகத்திலிருந்து வழிநடத்துதலை எவ்வாறு சிறப்பாகப் பெறுவதென்பதையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். அப்படிச் செய்ய உங்களுடைய சிரத்தையான முயற்சிகள் உங்களுடைய ஆவிக்குரிய அடித்தளத்தை வலுப்படுத்தி பெலப்படுத்தும்.
எனக்கன்பான சகோதர சகோதரிகளே, சால்ட் லேக் ஆலயத்தின் புனரமைப்புகள் முடிவடையும்போது, நிலநடுக்கத்தின் போது ஆலயத்தைவிட பாதுகாப்பான இடம் சால்ட் லேக் பள்ளத்தாக்கில் இருக்காது.
அதேபோல, உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது எந்த வகையான கிளர்ச்சி ஏற்பட்டால், ஆவிக்குரிய ரீதியாக பாதுகாப்பான இடம் உங்கள் ஆலய உடன்படிக்கைகளுக்கு உள்ளே வாழ்வதுதான்!
உங்களுடைய ஆவிக்குரிய அடித்தளம் இயேசு கிறிஸ்துவின் மீது உறுதியாகக் கட்டப்படும்போது நீங்கள் பயப்படத் தேவையில்லை என நான் சொல்லும்போது, தயவுசெய்து என்னை நம்புங்கள். ஆலயத்தில் செய்கிற உங்கள் உடன்படிக்கைகளுக்கு நீங்கள் உண்மையாயிருக்கும்போது, அவருடைய வல்லமையால் நீங்கள் பெலப்படுத்தப்படுவீர்கள். பின்னர், ஆவிக்குரிய நிலநடுக்கங்கள் ஏற்படும்போது, உங்களுடைய ஆவிக்குரிய அடித்தளம் உறுதியாகவும் நகர்த்த முடியாததாகவும் இருப்பதால் நீங்கள் வலிமையுடன் நிற்க சாத்தியமாகும்.
அன்பான சகோதர சகோதரிகளே, நான் உங்களை நேசிக்கிறேன். இந்த சத்தியங்களை நான் அறிவேன்: அவரிடத்தில் வீட்டிற்குத் திரும்ப நீங்கள் தேர்ந்தெடுக்க தேவனாகிய நமது பரலோக பிதா விரும்புகிறார். நித்திய முன்னேற்றத்திற்கான அவரது திட்டம் சிக்கலானது அல்ல, அது உங்கள் சுயாதீனத்தை மதிக்கிறது. வரப்போகிற உலகத்தில் நீங்கள் யாராயிருக்க வேண்டுமென்றும், யாருடனிருக்க வேண்டுமென்றும் தேர்ந்தெடுக்க உங்களுக்கு சுதந்தரமிருக்கிறது.
தேவன் ஜீவிக்கிறார்! இயேசுவே கிறிஸ்து! உங்களுடைய தெய்வீக இலக்கை நிறைவேற்ற உங்களுக்குதவ, இது அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை. அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.