சபை வரலாறு
சிங்கப்பூர்: காலவரிசை


“சிங்கப்பூர்: காலவரிசை,”உலகளாவிய வரலாறுகள்: சிங்கப்பூர் 2021

“சிங்கப்பூர்: காலவரிசை,”உலகளாவிய வரலாறுகள்: சிங்கப்பூர்

சிங்கப்பூர்: சபை காலவரிசை

மார்ச் 1854 • சிங்கப்பூர்மூப்பர் எலாம் லுடிங்டன் சியாம் செல்லும் வழியில் சிங்கப்பூருக்கு வருகை புரிந்தார்.

செப்டம்பர் 6, 1964 • சிங்கப்பூர்சிங்கப்பூரில் பிற்காலப் பரிசுத்தவான்களின் முதல் திருவிருந்து கூட்டம், அனைத்து வெளிநாட்டினருடனும், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் வீட்டில் நடைபெற்றது.

1967 • சிங்கப்பூர்சகோதரிகள் ரேச்சல் மற்றும் ரெபெக்கா வோங் ஊழியக்காரர்களின் கலந்தாய்வுகளை கேட்ட பின்பு ஹாங்காங்கில் ஞானஸ்நானம் பெற்றார்கள், பின்னர் சிங்கப்பூர் திரும்பி, பிற்காலப் பரிசுத்தவான்களின் சிறிய குழுவில் முதல் உள்ளூர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்..

மார்ச் 1968 • சிங்கப்பூர்தைவானில் பணியாற்றிய தெற்கு தூர கிழக்கு மாண்டரின் மொழி பேசும் ஊழியக்காரர்களான மெல்வின் டி. ஷர்ட்ஸ் மற்றும் ரெட் டோட் பிளேக் மற்றும் ஹாங்காங்கில் இருந்து கான்டோனீஸ் மொழி பேசுபவர்களான கிம் ஏ. ஷிப்லி மற்றும் ஜோயல் ரிச்சர்ட்ஸ் III ஆகியோர் சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

மே 4, 1968 • சிங்கப்பூர்ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொண்ட முதல் உள்ளூர் சிங்கப்பூர் வாசி ஆலிஸ் டான் கீ எங்.

அக்டோபர் 13, 1968 • சிங்கப்பூர்சிங்கப்பூர் கிளை உருவாக்கப்பட்டது

ஏப்ரல் 14, 1969 • சிங்கப்பூர்மூப்பர் எஸ்ரா டாஃப்ட் பென்சன், சிங்கப்பூரில், ஃபேபர் மலையில் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காக அர்ப்பணிப்பு ஜெபத்தை ஏறெடுத்தார்.

1970 • சிங்கப்பூர்எடி செவ் செங் கியாட் சிங்கப்பூர் கிளையின் முதல் உள்ளூர் கிளைத் தலைவரானார்

ஜனுவரி 1970 • சிங்கப்பூர்சபை மற்றும் அதன் ஊழிய திட்டம் உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் பிற கிறிஸ்தவ குழுக்களின் தலைவர்களால் தாக்குதலுக்கு உள்ளானது.

பிப்ரவரி-மார்ச் 1970 • சிங்கப்பூர்இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பரஸ்பர மேம்பாட்டு சங்கங்கள் உருவாக்கபட்டன.

ஏப்ரல் 15– 16, 1970 • சிங்கப்பூர்இருபத்தி ஒன்பது ஊழியக்காரர்களுக்கு விசாவை புதுப்பிக்க அரசாங்கம் மறுத்த பிறகு, மூன்று வெளிநாட்டு ஊழியக்காரர்கள் தவிர ஏனைய அனைவரும் சிங்கப்பூரை விட்டு பிற ஊழியங்களுக்குச் சென்றனர்.

ஜனவரி 4, 1971 • சிங்கப்பூர்சிங்கப்பூரில் முழுநேர ஊழியக்காரராக பணியாற்றும் முதல் உள்ளூர் உறுப்பினராக தியோ தியாம் சை அழைக்கப்பட்டார்.

நவம்பர் 1973 • சிங்கப்பூர்எடி செவ் செங் கியாட் சிங்கப்பூர் சேகரத்தின் முதல் உள்ளூர் தலைவரானார்

ஜூன் 11–25, 1983 • சிங்கப்பூர்உள்ளூர் “ஜூன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல்” உடன் இணைந்து, பிற்காலப் பரிசுத்தவான்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், வெளிப்புற பிளே மார்க்கெட் மற்றும் உணவு கண்காட்சி, கார் கழுவுதல் மற்றும் குழும நிகழ்ச்சிகளைக் கொண்ட ரோட்ஷோக்களை நடத்தினர் (ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் மற்றும் சிறந்த ஸ்கிரிப்டுக்கான விருது ஆகியவற்றைக் கைப்பற்றியது. “தி லேட்டர்-டேட்டா சிஸ்டம்” கொண்ட டோ பயோ கிளை, கணினிகள் மற்றும் ஊழிய வேலைகளைப்பற்றிய நாடக கதை, உறுப்பினர்கள் செமி-கண்டக்டர்கள், டிஸ்கெட்டுகள் மற்றும் சாத்தான் போன்ற பாத்திரங்களை வகிக்கிறார்கள்)

மார்ச் 18, 1988 • சிங்கப்பூர்பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் குழுமத்தைச் சேர்ந்த மூப்பர் எம். ரசல் பல்லார்ட், சால்ட் லேக் தொழிலதிபர் ஜான் எம். ஹன்ட்ஸ்மேன் மற்றும் அமெரிக்க செனட்டர் ஜேக் கார்ன் ஆகியோர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவைச் சந்தித்து சிங்கப்பூரின் அரசாங்கம், வணிகம் மற்றும் உள்ளூர் சபை உறுப்பினர்களின் உயர்தரப் பணிகள் உள்ளிட்டவற்றைப்பற்றி விவாதித்தனர். பின்னர் ஊழியக்காரர்கள் விசாக்களின் எண்ணிக்கை பன்னிரண்டாக உயர்த்தப்பட்டது.

ஜூன் 1994 • சிங்கப்பூர்சபை உறுப்பினர்கள் குடும்ப தகுதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

பிப்ரவரி 26, 1995 • சிங்கப்பூர்1,600 உறுப்பினர்கள் கொண்ட நான்கு தொகுதிகள், மாண்டரின் மொழி, பிலிப்பைன்ஸ் மற்றும் வெளிநாட்டுப் பிரிவுகள் உட்பட இரண்டு கிளைகளுடன், லியோனார்ட் வூவைத் தலைவராகவும், வின்னி யோ 杨丽云ஒத்தாசைச் சங்க தலைவராகவும் கொண்டு சிங்கப்பூர் பிணையம் ஆரம்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 5, 1997 • சிங்கப்பூர்டான் சு கியோங் 陳思強பிரதேச எழுபதின்மர் பொது அதிகாரியாக அழைக்கப்பட்டார்

ஜனவரி 30, 2000 • சிங்கப்பூர்தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி , சகோதரி மார்ஜோரி பே ஹிங்க்லி, மூப்பர் பாய்ட் கே. பாக்கர் மற்றும் சகோதரி டோனா பாக்கர் ஆகியோர் சிங்கப்பூருக்கு வருகை புரிந்தனர். கல்லாங் திரையரங்கில் பரிசுத்தவான்கள் சிறப்பு கூட்டம் நடத்தினர்.

ஜனவரி 12–13, 2007 • சிங்கப்பூர்ஐந்து மாடிக் கட்டிடம், ஒரே பிணையத்தில் ஆறு தொகுதிகளை உள்ளடக்கும் வசதியுடைய புதிதாகக் கட்டப்பட்ட சிங்கப்பூர் பிணைய மையத்திற்கான ஒரு திறப்பின் வாசல் நிகழ்வுக்காக உறுப்பினர்கள் இரண்டு நாட்கள் செலவிட்டனர். இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஆரம்ப வகுப்பு போன்ற சபை அமைப்புகளின் உறுப்பினர்கள் பார்வையாளர்களுக்கு தங்கள் நிகழ்ச்சிகளை வழங்கினர்.

2008–09 • சிங்கப்பூர்சபை உறுப்பினர்கள் உட்லண்ட்ஸ் சாலையில் உள்ள குவாங் ஹூ சுவா தியோச்யூ கல்லறை பூங்காவில் சுமார் 5,000 கல்லறைகளின் படங்களை அவை வளர்ச்சிக்காக தோண்டியெடுக்கப்படுவதற்கு முன்பு பாதுகாத்தனர்.

ஜனவரி 20, 2010 • சிங்கப்பூர்சிங்கப்பூர் பிணைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கடந்த கால சபைத் தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி கற்பித்த இளைஞர்களுக்கான ஒன்பது “இருங்கள்” தரநிலைகளை மையமாகக் கொண்ட அசல் நாடக கதை கொண்ட இசை நிகழ்ச்சியை வழங்கினர்.

2011 • சிங்கப்பூர்புக்கிட் பிரவுன் சீன கல்லறையில் 200-க்கும் மேற்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்கள் ஒரு சேவைத் திட்டத்தில் பங்கேற்றனர், அங்கு அவர்கள் லோர்னி நெடுஞ்சாலை அமைப்பதற்கான தயாரிப்பில் கல்லறை தோண்டி எடுக்கப்படுவதற்கு முன்பு கல்லறைகளை சுத்தம் செய்து புகைப்படம் எடுத்தனர்.

ஜூன் 25, 2011 • சிங்கப்பூர்கம்பஸ்வேல் சபை திறப்பின் வாசல்-1,000 விருந்தினர்கள் மற்றும் அயலவர்கள், துணைப் பிரதமர் டியோ செவ் ஹியான் சாங் ச்சியான் 張志賢மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ யான் தியான் பாவ் 颜添宝ஆகியோர் இந்த புத்தம் புதிய சபைக்கு வருகை தந்து சபையின் நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டனர்.

இப்தார் குழு

மே 27, 2019 • சிங்கப்பூர்

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்ச்சி புக்கிட் திமா சாலையில் உள்ள சிங்கப்பூர் பிணைய மையத்தில் நடைபெற்றது. சபைத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய ஊழிய அமைப்பான ஜமியா சிங்கப்பூர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், திரு. மெல்வின் யாங் 杨益财பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய தொழிற்சங்கத்தின் உதவிச் செயலாளர் மற்றும் திரு. எஸ் ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் உட்பட 700 பேர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 28, 2019 • சிங்கப்பூர்சிங்கப்பூர் உறுப்பினர்கள் சபை நிறுவப்பட்ட 50வது ஆண்டு விழாவை ஆடம்பரமான தயாரிப்புகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன் அனுசரித்தனர்.

நவம்பர் 20, 2019 • சிங்கப்பூர்தலைவர் ரசல் எம். நெல்சன் தனது தென்கிழக்கு ஆசிய ஊழியத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூருக்கு வருகை புரிந்தார். புக்கிட் திமா பிணைய மையத்தில் தலைவர் நெல்சன் பேசினார்.

ஏப்ரல் 4, 2021 • சால்ட் லேக் சிட்டி, யூட்டாசபைத் தலைவர் ரசல் எம். நெல்சன் சிங்கப்பூரில் ஆலயம் கட்டப்படுமென அறிவித்தார்.