சபை வரலாறு
சிங்கப்பூர்: கண்ணோட்டம்


“சிங்கப்பூர்: கண்ணோட்டம்,” உலகளாவிய வரலாறுகள்: சிங்கப்பூர் (2021)

“சிங்கப்பூர்: கண்ணோட்டம்,” உலகளாவிய வரலாறுகள்: சிங்கப்பூர்

சிங்கப்பூர் வரைபடம்

சபையின் சுருக்கமான வரலாறு

சிங்கப்பூர்

தொடக்கத்திலிருந்தே, சிங்கப்பூரில் உள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் சமூகங்கள், சீன, மலேசிய, இந்திய, இந்தோனேசிய, ஐரோப்பிய மற்றும் பிற இன மற்றும் தேசியப் பின்னணியைச் சேர்ந்த மக்களின் ஒரு பரந்துபட்ட மக்களின் கலவையாகும். சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசிய வர்த்தகம், கல்வி மற்றும் கலாச்சாரத்தின் மையமாக இருப்பதால், பிற்காலப் பரிசுத்தவான்களின் பல்வேறு சமூகத்தை சிங்கப்பூர் ஈர்த்துள்ளது.

தெற்காசியா பகுதியில் பல தசாப்தங்களாக போர் மற்றும் உள்நாட்டு அமைதியின்மைக்குப் பிறகு, இந்த நாடுகளில் சுவிசேஷத்தை பரப்புவதற்கான முயற்சிகள் 1960-களின் பிற்பகுதியில் தீவிரமாகத் தொடங்கின. 1970-ல் உருவாக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியக்காரர்கள் விசாக்கள் மீதான அரசாங்கத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள் ஒரு சபை கலாச்சாரத்தை உருவாக்கியது, அதில் உள்ளூர் உறுப்பினர்கள், அவர்களில் பலர் புதிய மனமாறியவர்கள் , தலைமை மற்றும் ஊழிய பணியின் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். 1977-ல் பெரும்பாலான புதிய மனமாறியவர்கள் மற்ற உறுப்பினர்களால் சுவிசேஷத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் உண்மையில், சிங்கப்பூர் பரிசுத்தவான்கள் “நன்மை செய்வதிலே சோர்வடையவில்லை … மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள்,” “சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33)

பல தசாப்தங்களாக அரசாங்கத்துடனான சபையின் உறவு கணிசமாக மேம்பட்டுள்ளது மற்றும் சபை உறுப்பினர்கள் குடும்பத்திற்கு முதலிடம் கொடுக்கும் கடின உழைப்பாளி குடிமக்கள் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளனர். அவர்களின் ஆற்றல் மிக்க குடும்ப வரலாற்று முயற்சிகள், பரிசுத்த உடன்படிக்கைகளுக்காக அருகிலுள்ள ஹாங்காங் மற்றும் தைபே ஆலயங்களுக்கு பல பெயர்களை அனுப்ப வழிவகுத்தது. நவம்பர் 2019-ல், தலைவர் ரசல் எம். நெல்சன் சிங்கப்பூருக்குச் சென்றபோது, ​​அவர்களின் முயற்சிகளைப் பாராட்டி, சிங்கப்பூர் பரிசுத்தவான்களுக்கு சொந்தமாக ஒரு ஆலயம் அமையும் நாளுக்காக ஜெபிப்பதாகக் கூறினார்.

விரைவான உண்மைகள்

அதிகாரப்பூர்வ பெயர்: Republic of Singapore/Republik Singapura/新加坡共和国/சிங்கப்பூர் குடியரசு

தலைநகரம்: சிங்கப்பூர்

மிகப்பெரிய நகரம்:சிங்கப்பூர்

அதிகாரப்பூர்வ மொழிகள்: ஆங்கிலம்/மலாய்/மாண்டரின் சீனம்/தமிழ்

நிலப்பரப்பு: 726 கிமீ2 (280 மைல்2)

சபை பிரதேசம்: ஆசியா

ஊழியங்கள்1 (சிங்கப்பூர்)

சபைகள்: 7