“இயேசு உண்மையில் அனைவரிடமும் அக்கறை காட்டினார்” உலகளாவிய வரலாறுகள்: சிங்கப்பூர் (2021)
“இயேசு உண்மையில் அனைவரிடமும் அக்கறை காட்டினார்” உலகளாவிய வரலாறுகள்: சிங்கப்பூர்
“இயேசு உண்மையில் அனைவரிடமும் அக்கறை காட்டினார்”
1960-களின் முற்பகுதியில் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த பிற்கால பரிசுத்தவான்களின் குழுக்கள் வழிபாட்டிற்காக ஒன்றுகூடியிருந்தாலும், 1968-ம் ஆண்டு வரை, தெற்கு தூர கிழக்கு ஊழியத்தின் நான்கு ஊழியர்கள் நாட்டில் மனமாற்ற முயற்சிகளைத் தொடங்கும் வரை எதுவும் நடைபெறவில்லை. 04 மே 1968-ல், ஞானஸ்நானம் பெற்றவர் முதல் உள்ளூர் சிங்கப்பூர் வாசி, ஆலிஸ் டான் கீ எங். அக்டோபர் 12, 1968 அன்று சபை அரசாங்கத்திடம் இருந்து அங்கீகாரம் பெற்றது, அடுத்த நாள் சிங்கப்பூர் கிளை ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏறக்குறைய அதே நேரத்தில், குயீனி செவ் பெங் கிம் மற்றும் எடி செவ் செங் கியாட் ஆகியோர் ஊழியக்காரர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்தனர். குயீனி, ஆங்கிலிகன் பள்ளியில் பயின்றார், மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றிய சபையின் போதனைகளால் அவர் ஆர்வமாக இருந்தார். “கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பே பலர் மரித்துவிட்டனர்,” என்று அவர் கூறினார். “கிறிஸ்துவைப்பற்றி அறிய அவர்களுக்கும் வாய்ப்பு இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். இயேசு உண்மையில் எல்லோரிடமும் அக்கறை கொண்டிருந்தார் என்பதை இது காட்டுகிறது.” குயீனியின் கணவர் எடி சபையையைப்பற்றி “ஆர்வமாக இல்லை” ஆனால் அவருடன் கலந்துரையாடல்கள் மற்றும் சபை சேவைகளில் கலந்து கொண்டார்.
குயீனியும் எடியும் பல மாதங்கள் ஊழியக்காரர்களிடம் கற்றுக்கொண்டனர். “நாங்கள் ஒரு புதிய காரை வாங்கியதால் தசமபாகம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குயீனி நினைவு கூர்ந்தார். “ நாங்கள் தசமபாகம் கொடுக்கும்படியாக, காரை விற்கும்படியாக மூப்பர் மொரிட்சென் எங்களிடம் சொன்னார். நாங்கள் மூப்பர் மொரிட்செனுடன் மிகவும் விவாதித்தோம். குயினி மற்றும் எட்டி சபைக்கு செல்வதை நிறுத்தினர். ஆனால் அவர்கள் காருக்கான பணத்தை செலுத்தியவுடன், விரைவில் ஊழியர்களுடன் கலந்துரையாடலை தொடர்ந்தனர். குயீனியும் எடியும் பாசிர் ரிஸ் கடற்கரையில் நவம்பர் 10, 1968-ல் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்களின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, எடி வேதங்களை, குறிப்பாக கோட்பாடும் உடன்படிக்கைகளுமை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார்.
1970-ம் ஆண்டின் தொடக்கத்தில், செய்தித்தாள்களில் சபை மீதான எதிர்மறையான தாக்குதல்களின் காரணமாக வெளிநாட்டு ஊழியக்கர்களின் விசாக்களை முப்பதிலிருந்து மூன்றாக கட்டுப்படுத்த வழிவகுத்தது. அடுத்த தசாப்தத்திற்கு, இதே போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன மற்றும் உள்ளூர் உறுப்பினர்கள் தலைமை வகித்தனர். எடி முதல் உள்ளூர் கிளைத் தலைவரானார், மேலும் குயீனி முதல் உள்ளூர் ஒத்தாசைச் சங்கத் தலைவரான ஷீலா சியா சாங் ஷியு என்கோ夏曾绍娥க்கு முதல் ஆலோசகராகப் பணியாற்றினார். 1971-ல் சிங்கப்பூர் சேகரம் உருவாக்கப்பட்டது, 1973-ல் எடி முதல் உள்ளூர் சேகரத் தலைவரானார்.