2020
குடும்ப வரலாறு மூலம் ஊழியம் செய்தல்
பெப்ருவரி 2020


ஊழியம் செய்தலின் கொள்கைகள், பெப்ருவரி 2020

குடும்ப வரலாறு மூலம் ஊழியம் செய்தல்

படம்
ministering

படவிளக்கம்- ஜோஷ்வா டென்னிஸ், கெட்டி இமேஜஸிலிருந்து பின்னணியும் புகைப்படமும்

அவர்களது குடும்ப வரலாறு மூலம் ஒருவருக்கு உதவுதல் ஊழியம் செய்ய வல்லமையான வழியாகும். குடும்ப கதைகள் மற்றும் விபரங்கள் மூலம் மற்றவர்களை அவர்களது முன்னோருடன் நீங்கள் இணைக்கும்போது, சிலசமயங்களில் அவர்கள் ஒருபோதும் அறிந்திராத, அவர்கள் பெற்றிருந்தவைகளால், அவர்களது இருதயங்களின் இடைவெளிகளை நிரப்புகிறீர்கள். (மல்கியா 4:5–6 பார்க்கவும்).

வாழ்நாள் சபை அங்கத்தினரோ அல்லது இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை ஒருபோதும் கேட்காத ஒருவரோ, அனைத்து தேவ பிள்ளைகளும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என அறிய ஏங்குகிறார்கள்.

பின்வரும் கதைகளில் காட்டப்பட்டபடி, ஒரு ஆழமான நீடித்த தாக்கத்தை விட்டுச்செல்ல எப்போதும் அதிக நேரம் எடுப்பதில்லை.

குடும்பத்தை 30,000 அடியில் கண்டுபிடித்தல்

அண்மையில் வீடுதிரும்பும் பயணத்தில், தன் தனிப்பட்ட கதையின் பகுதிகளை பகிர்ந்து கொண்ட ஸ்டீவுக்கு அருகில் நான் இருந்தேன். அவர் பள்ளிப்படிப்பை முடித்திருந்தார், 18 வயதில் தொலைத்தொடர்பு நிபுணராக அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தில் சேர்ந்தார். விரைவிலேயே அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதிக்கு தொலைத்தொடர்பு உதவியளிக்க, வெள்ளை மாளிகையில் பணியாற்றத் தொடங்கினார். 18 வயதிலிருந்து 26 வயது வரை, அவர் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளிடம் சேவை செய்தார். அவரது கதைகள் பரவசமூட்டுபவைகளாக இருந்தன.

நான் சொன்னேன், “ஸ்டீவ், உங்கள் சந்ததிக்காக நீங்கள் இக்கதைகளை எழுத வேண்டும்! உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அக்கதைகளை அவர்கள் முதலில் அறிய வேண்டும்.” அவர் சம்மதித்தார்.

அவரது முன்னோர்களைப்பற்றி அவர் என்ன அறிந்திருக்கிறார் என அவரைக் கேட்குமாறு நான் தூண்டப்பட்டேன். 1860 ஜனாதிபதி தேர்தலின்போது, நாட்டுப்புறத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, அவரது குடும்பம் எவ்வாறு ஆபிரகாம் லிங்கனுடன் இரவு உணவு சாப்பிட்டார்கள் என்ற கதை உள்ளிட்ட, நிறைய அவரது தாய் சார்ந்தவற்றை ஸ்டீவ் அறிந்திருந்தார்.

எனினும் தன் தந்தை சார்ந்து அவர் மிக குறைவாகவே அறிந்திருந்தார். அவர் உண்மையாகவே நிறைய அறிய விரும்பினார். நான் என் கைபேசியை எடுத்து FamilySearch செயலியைத் திறந்தேன். “ஸ்டீவ் உங்கள் குடும்பத்தை இப்போதே கண்டுபிடிக்கலாம்.”

நான் விமான அலைவரிசையோடு இணைத்தேன். நாங்கள் இருவரும் பார்க்கும்படியாக, எனக்கு முன்னால் உணவு வைக்கும் தட்டில் கைபேசியை வைத்தேன். நாங்கள் குடும்ப மரத்தை தேடினோம். சில நிமிடங்களுக்குள் அவரது கொள்ளுத் தாத்தா, அவரது கொள்ளுப் பாட்டியின் திருமண சான்றிதழை பார்த்துக் கொண்டிருந்தோம்.

“அது அவர்கள் தான்!” அவர் சொன்னார். “அவரது கடைசி பெயரை நான் இப்போது நினைவு வைத்திருக்கிறேன்.“

உற்சாகத்தின் ஆவி எங்கள் இருவர் மீதும் பொழிந்தது. அடுத்த 45 நிமிடங்களுக்கு அவரது குறைவாக அறியப்பட்ட முன்னோர்களுக்கு குறிப்புக்களை எழுதினோம். கொலரடாவில் நாங்கள் தொடர்ந்து தேடுவோம் என அவரிடம் வாக்களிக்குமாறு கேட்டார். விமானம் தறையிறங்கியபோது, நாங்கள் தொடர்பு தகவல்களை பரிமாறிக் கொண்டோம்.

வானில் 30,000 அடி (9,145 மீ.) பறந்து கொண்டு, என் கையைப் போன்ற சிறு கருவியைக் கொண்டு, அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் காணாமற்போன, 100 வருடங்களுக்கு முன் திருமணம் செய்த ஆணையும், பெண்ணையும் பற்றி அங்கு நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வியக்கத்தக்கது! ஆனால் நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்தோம். குடும்பங்கள் இணைக்கப்பட்டிருந்தன. கதைகள் நினைவுகூரப்பட்டன. தொழில்நுட்பத்துக்காகவும் கருவிகளுக்காகவும், நன்றியுணர்வு உணரப்பட்டது. இது அற்புதத்தை விட குறைந்ததல்ல.

ஜோனத்தான் பெற்றி, கொலராடோ, அ.ஐ.நா

புதிய குடும்பத்தால் சூழப்பட்டு

20 வருடங்களுக்கும் மேலாக, மரியா ஆர்வமின்றி இருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன், மக்கள் தொகை கணக்கு மற்றும் பிற ஆவணங்கள் மூலம் அவரது குடும்பத்தைத் தேடி, எங்கள் வீட்டில் அவருடன் இரண்டு மணிநேரம் செலவிட்டோம். ஒரு தருணத்தில் அவர் வியந்து கண்ணீர் சிந்தினார், “என் வாழ்நாள் முழுவதையும் விட இரண்டு மணி நேரத்தில் என் குடும்பத்தைப்பற்றி கற்றிருக்கிறேன்!”

நாங்கள் ஒன்றாயிருந்த நேர முடிவில், FamilyTree செயலியின் Relatives Around Me feature அவருக்கு அறிமுகம் செய்தோம். என் கணவரும் நானும் மரியாவுக்கு தூரத்து உறவினராக இருந்தது தெரிந்தது. அவர் மீண்டும் கண்ணீர் சிந்தினார், தான் தனியாக இருப்பதாக நினைத்ததாக கூறினார். அப்பகுதியில் அவருக்கு ஒரு உறவுக் குடும்பம் இருப்பதை அறிந்திருக்கவில்லை. சில வாரங்களுக்குப் பின் மரியா எங்கள் ஆயரைச் சந்தித்தார். அவர் இப்போது ஆலயத்துக்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார், எங்கள் தொகுதியில் அநேக புதிய ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளை சந்தித்திருக்கிறார்.

காரல் ரினர் எவரட், வடக்கு கரோலினா, அ.ஐ.நா.

ஊழியம் செய்ய தேவையானவை

நான் ஊழியம் செய்கிற ஒரு சகோதரி ஆஷ்லியும் நானும் எங்கள் பாட்டிகளிடமிருந்து சமையல் புத்தகங்களை பெற்றிருக்கிறோம். அவளுடையது அவளுடைய கொள்ளுப்பாட்டியிடமிருந்து, என்னுடைய பாட்டி க்ரீன்வுட் பாட்டி மரித்த பின் அவருடைய சமையல் குறிப்பு பெட்டி எனக்குக் கிடைத்தபோது நான் புத்தகத்தை சேர்த்தேன்.

ஆஷ்லியும் நானும் எங்கள் சமையல் புத்தகங்களிலிருந்து ஒரு சமையல் குறிப்பை எடுத்து, வேலை முடிந்த பிறகு ஒரு இரவில் அவற்றை முயற்சி செய்ய, ஒன்று சேர்ந்தோம். அவள் ஒரு கேக்கை தேர்ந்தெடுத்தாள், ஆகவே முதலில் அதைச் செய்து அடுப்பில் வைத்தோம். ஒவ்வொரு க்ரீன்வுட் குடும்ப விருந்திலும் இருந்த--சிப் டிப்பை நான் தேர்வு செய்தேன். ஆஷ்லியின் மகள் ஆலிஸ், உணவை சுவை பார்க்க எங்களுக்கு உதவினாள். பின்பு, மொத்த கேக்கையும் ஆஷ்லியின் பிள்ளைகள் உண்பதை அவள் விரும்பாததால், அவள் ஊழியம் செய்கிற சில சகோதரிகளுக்கு கொடுத்தாள்.

எங்கள் சமையல் இரவில் நான் அதிகம் நேசித்தது, நாங்கள் சமைத்தபோது, நாங்கள் வழக்கமான அவளது மற்றும் என்னுடைய போராட்டங்களாகிய ஊழியம் செய்யும் தலைப்புகள் பற்றி பேசினோம். ஆனால் நாங்கள் எங்கள் பாட்டிகள், அம்மாக்களைப்பற்றியும் பேசினோம், அது எங்கள் இருவருக்குமே மென்மையானதாக இருந்தது.

ஜெனிபர் க்ரீன்வுட், யூட்டா, அ.ஐ.நா.

உதவி செய்ய குறிப்பிட்ட வழிகள்

ஒன்றுமே முடியாததுபோல தோன்றும்போது, ஊழியம் செய்யும் சந்தர்ப்பங்களுக்காக, குடும்ப வரலாற்று கதவுகளைத் திறக்க முடியும். நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில கருத்துக்கள் இதோ.

  • குடும்ப வரலாற்றுக் கதைகள், விசேஷமாக புகைப்படங்களுக்கு உகந்த குரல் பதிவுகளை பதிவு செய்து மேலேற்ற அவர்களுக்கு உதவுங்கள்.

  • நீங்கள் பரிசாக கொடுக்கக்கூடிய விசிறி அட்டவணை அல்லது அச்சிடக்கூடிய குடும்ப வரலாற்று ஆவணத்தை உருவாக்கவும்.

  • அவர்கள் மகிழக்கூடிய விதமாக குறிப்பிதழ் எழுதுவதன் மூலம் தங்கள் சொந்த வரலாற்றை அறியும் வழிகளை கற்பிக்கவும். ஒலி குறிப்பிதழ்? புகைப்பட குறிப்பிதழ்? காணொலி குறிப்புக்கள்? தரமான குறிப்பிதழ் வடிவங்களை விரும்பாதவர்களுக்கு, அநேக தேர்ந்தெடுப்புகள் இருக்கின்றன.

  • முன்னோருக்கு நியமங்கள் செய்ய ஒன்றாக ஆலயம் செல்லுங்கள். அவர்கள் கையாள முடியாதபடி அவர்கள் நிறைய வைத்திருந்தால், அவர்களது குடும்ப பெயர்களுக்கு நியமங்கள் செய்ய முன்வரவும்.

  • குடும்ப பாரம்பரியங்களைப் பகிர ஒன்று கூடவும்.

  • ஒன்றாக ஒரு குடும்ப வரலாறு வகுப்பில் சேரவும்.

அச்சிடவும்