2020
ஆலய சேவை மூலம் ஊழியம் செய்தல்
மார்ச் 2020


ஊழியம் செய்யும் கொள்கைகள், மார்ச் 2020

ஆலய சேவை மூலம் ஊழியம் செய்தல்

ஆலயத்தின் ஆசீர்வாதங்களை பிறர் அனுபவிக்க நாம் உதவி செய்யும்போது, நாம் ஊழியம் செய்கிறோம்.

படம்
ministering

கெட்டி உருவங்களிலிருந்து பின்னணி, டெகுசிகல்பா ஹோண்டுராஸ் ஆலயத்தின் புகைப்படம்

ஆலயம் செல்லுதல் அந்த முயற்சிக்கு தகுதியுடையதே. “நமது மற்றும் நமது குடும்பங்களின் இரட்சிப்புக்கும் மேன்மைப்படுதலுக்கும் ஆலயம் முக்கியமானது. …

“… கர்த்தருடைய வீட்டில் மட்டுமே சாத்தியமாகிற நடந்துகொண்டிருக்கிற ஆவிக்குரிய பெலப்படுத்தல் மற்றும் கற்பித்தலும் நம் ஒவ்வொருவருக்கும் தேவை,”1 என தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்.

நமது நேரத்தையும், பொறுப்புகளையும், ஆதாரங்களையும் நிர்வகிப்பதும், அப்படியே, ஆவிக்குரிய விதமாக ஆயத்தப்பட்டிருப்பதும் ஆலயம் செல்வதற்கு தேவைப்படுகிறது. நமது சகோதர சகோதரிகளை ஆலயம் செல்வதிலிருந்து தடுக்கும் தடைகளை அடையாளம் கண்டு தீர்வுகளைக் காண அவர்களுக்கு உதவும்போது, நாம் ஊழியம் செய்கிறோம்.

ஆலயம் யாரும் அனுபவிக்கக்கூடிய ஒரு ஆசீர்வாதமாகும்.

அண்மையில் வீடுதிரும்பிய ஊழியக்காரி மேக், கோனா ஹவாய் ஆலயத்தின் வாசலை நோக்கி நடந்தபோது, வெளியே பெஞ்ச் மீது ஒரு இளம்பெண் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அந்த இளம்பெண்ணிடம் பேச வேண்டும் என மேக் உணர்ந்தாள், ஆனால் என்ன சொல்வதென அவளுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகவே அவள் இளம்பெண்ணின் கணுக்காலில் இருந்த பச்சைகுத்தின் அர்த்தத்தைப்பற்றி கேட்டாள். அது அந்த இளம் பெண் லானி தன் கதையை பகிர்ந்துகொள்ள அனுமதித்த உரையாடலைத் தொடங்கியது.

சபையில் முழுமையாக பங்கேற்கவும், அவளுக்கு உதவிய அருமையான அங்கத்தினர்கள் மற்றும் ஒருநாள் தன் சிறு மகளுடன் முத்திரிக்கப்படும் அவளது நம்பிக்கைக்குத் திரும்ப தன் போராட்டத்தைப்பற்றி லான், மேக்கிடம் சொன்னாள்.

தன்னுடன் ஆலயத்தின் காத்திருப்பு அறைக்கு வந்து அமருமாறு மேக், லானியை அழைத்தாள். அவர்கள் ஆலயத்தினுள் அதற்கு மேலும் போக முடியாது, ஆனால் அவர்கள் வாசலைக் கடக்க முடியும். லானி சம்மதித்தாள், அவர்கள் தலைவாசல் வழியாக ஒன்றாக உள்ளே சென்றனர். இரட்சகரின் ஓவியத்துக்குக் கீழே ஒரு பெஞ்சை ஒரு ஆலய பணியாளர் அவர்களுக்குக் காட்டினார்.

அவர்கள் ஒன்றாக அமர்ந்தபோது, லானி மென்மையாக சொன்னாள், “நான் உண்மையாகவே இன்று ஆலயத்தினுள் வர விரும்பினேன், ஆனால் பயந்தேன்.” மேக் பரிசுத்த ஆவியைப் பின்தொடர்ந்ததால், லானியின் அமைதியான ஜெபத்துக்குப் பதிலளிக்க அவள் உதவினாள்.

பரிந்துரை இல்லாதவர்களுக்கு உதவ ஆலோசனைகள்

இன்னும் ஆலய பரிந்துரை பெறாதவர்கள் கூட ஆலயத்தால் ஆசீர்வதிக்கப்பட முடியும்.

  • ஆலயப்பணி மூலம் கர்த்தர் உங்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைப் பற்றிய உங்கள் உணர்வுகளைப் பகிரவும்.

  • ஆலய திறந்த வீட்டுக்கு அல்லது வருகைபுரிவோர் மையத்துக்கு வர ஒருவரை அழைக்கவும். temples.ChurchofJesusChrist.orgல் வரவிருக்கிற திறந்த வீடுகளைக் காணவும்.

  • temples.ChurchofJesusChrist.orgல் புகைப்படங்களைப் பார்த்து ஆலயத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ளவும்.

பிறருக்கு ஆலய வருகையை எளிதாக்குங்கள்.

ஆலய பரிந்துரை வைத்திருக்கிற அங்கத்தினர்களுக்குக்கூட ஆலயம் செல்லுதல் சவாலாக இருக்கலாம். சிலர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதிருக்கும். கவனிப்பு தேவைப்படுகிற சிறு பிள்ளைகள் அல்லது வயதான குடும்ப அங்கத்தினர்கள் பிறருக்கு இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஆலய சேவையை சாத்தியமாக்க நாம் ஒன்றாக உழைக்கலாம்.

தன் நோயுற்ற கணவன் மற்றும் நான்கு பிள்ளைகளையும் கவனிப்பதால் லியோலா சாண்ட்லர் கஷ்டப்படுவதாக உணர்ந்தாள். ஆகவே ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அருகிலுள்ள ஆலயம் செல்ல நேரத்தை ஒதுக்க அவள் முடிவு செய்தாள். அவளது வாழ்க்கையில் அது சமாதானம் மற்றும் வல்லமையின் ஆதாரமானது.

ஒருநாள் அவளது தொகுதியிலுள்ள சில வயதான சகோதரிகள் ஆலயம் செல்ல மிகவும் விரும்புவதாகவும், ஆனால் அவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை எனவும் கேள்விப்பட்டாள். அவர்கள் செல்வதற்கு வாகனம் கொடுக்க லியோலா முன் வந்தாள். அடுத்த 40 ஆண்டுகளாக அவள் அரிதாக ஆலயத்துக்கு தனிமையில் சென்றாள்.2

லியோலா ஆசீர்வதிக்கப்பட்டாள், ஆலயத்துக்கு தம்முடன் பிறரை அழைத்துச்செல்ல முன்வந்தபோது அவள் பிறரை ஆசீர்வதித்தாள்.

பிறர் ஆலயம் செல்ல உதவ ஆலோசனைகள்

பிறர் அடிக்கடி ஆலயம் செல்ல நீங்கள் எப்படி உதவ முடியும்? அதே ஆலோசனைகள் உங்களுக்கும் உதவுவதை நீங்கள் காணலாம்.

  • ஒன்றாக செல்லுங்கள். ஒருவருக்கு போக்குவரத்து வசதி கொடுக்க அல்லது ஏற்பாடு செய்ய முன்வரவும். ஆலயம் செல்ல யாரோ ஒருவரைக்கூட இது ஊக்குவிக்கலாம்.

  • விசேஷமாக நியமங்களுக்காக ஏராளமான குடும்ப பெயர்கள் உங்களிடம் இருக்கும்போது, உங்கள் முன்னோருக்கு நியமங்களை நிறைவேற்ற உங்களுக்கு உதவ உங்கள் குடும்பம் அல்லது தொகுதி அங்கத்தினர்களிடம் கேட்கவும்.

  • பெற்றோர் ஆலயம் செல்லும்படியாக குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முன்வரவும். அல்லது ஒருவருக்கொருவரின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முறை எடுக்க ஏற்பாடு செய்யவும்.

ஆலயம் அதிக தூரத்தில் இருக்கும்போது

இலங்கையில், கொழும்பிலிருந்த சந்திரதாஸ் “ரோஷனும்” ஷாரன் ஆன்டனியும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட தீர்மானித்தனர். அவர்களது நண்பர்களான ஆனும் ஆண்டன் குமாரசாமியும் அவர்களைக் குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால் மணிலா பிலிப்பைன்ஸ் ஆலயம் செல்வது எளிதோ அல்லது சகாயமானதோ இல்லை என அவர்கள் அறிந்தனர்.

ரோஷனும் ஷாரனும் பணத்தை சேமித்து அவர்களால் பெற முடிந்த விமான பயணத்துக்கு பல மாதங்களுக்கு முன்பே பதிவு செய்தனர். இறுதியாக அந்த நாள் வந்தது. எனினும் அவர்கள் மலேசியாவை அடைந்தபோது, பிலிப்பைன்ஸுக்கு தொடர்ந்துசெல்ல அவர்களுக்கு விசா வேண்டும் அல்லது மற்றொரு விமானத்தில் செல்ல வேண்டும் என கண்டுபிடித்தனர். விசா கிடைப்பது சாத்தியமில்லாதிருந்தது, மற்றும் வேறொரு விமானத்துக்கு பயணச்சீட்டு வாங்க அவர்களால் முடியவில்லை. ஆனால் முத்திரிக்கப்படாமல் வீடு திரும்புவதைப்பற்றி சிந்திப்பதை அவர்களால் தாங்க முடியவில்லை.

வேறென்ன செய்வது என்பது நிச்சயமில்லாததால், ரோஷன் ஆண்டனை அழைத்தார். ஆண்டனும் ஆனும் நிச்சயம் உதவ விரும்பினர். இலங்கையில் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்ட சில தம்பதியரில் அவர்களும் உள்ளனர், அது எப்படிப்பட்ட ஆசீர்வாதம் என அவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் தங்கள் சேமிப்பை தேவையிலிருந்த ஒரு குடும்ப அங்கத்தினருக்கு உதவ அண்மையில் பயன்படுத்தியிருந்தனர். ஒரு புதிய விமான பயணத்துக்கு சீட்டு வாங்க ரோஷனிடமும் ஷாரனிடமும் பணமில்லை.

இலங்கையில், கணவன் மரித்தால் அவளிடம் சிறிது பணமிருக்கும்படி, மணமகன் மணமகளுக்கு ஒரு கழுத்தணி வாங்கிக்கொடுப்பது வழக்கம். புதிய பயணச்சீட்டுகளைை வாங்க உதவ தன் கழுத்தணியை விற்க ஆன் தீர்மானித்தாள். அவளது தாராள பரிசு மணிலாவுக்கு தங்கள் ஆலய பயணத்துக்கு ரோஷனுக்கும் ஆனுக்கும் சாத்தியமாக்கியது.

“ஆலய முத்திரித்தலின் மதிப்பு எனக்குத் தெரியும்,” என ஆன் சொன்னாள். “ஷாரனும் ரோஷனும் கிளைக்கு பெரிய பலம் என நான் அறிவேன். இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் இழப்பதை நான் விரும்பவில்லை.”3

ஆலயம் செல்ல முடியாதவர்களுக்கு உதவ ஆலோசனைகள்

தூரம் மற்றும் அதிக செலவினிமித்தம் அடிக்கடி ஆலயம் செல்ல அல்லது செல்லவே முடியாதவர்களுக்கு ஊழியம் செய்ய நீங்கள் அழைக்கப்படலாம். ஆனால் ஆலய ஆசீர்வாதங்களைப் பாராட்ட இன்னமும் நீங்கள் வழிகளைக் காணலாம்.

  • ஆலய ஆயத்தம் அல்லது குடும்ப வரலாற்று வகுப்பில் கற்றுக்கொடுங்கள் அல்லது ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

  • அவர்களது வீட்டில் தொங்க விட ஒரு ஆலய புகைப்படத்தை அவர்களுக்குக் கொடுங்கள்.

  • நீங்கள் ஆலயம் சென்றிருந்தால், உங்கள் அனுபவத்தைப்பற்றிய உணர்வுகளை அல்லது ஆலய நியமங்களைப்பற்றிய உங்கள் சாட்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • அவர்கள் செய்துள்ள உடன்படிக்கைகளைப்பற்றியும், அவற்றை எப்படி கைக்கொள்வது என்பதைப்பற்றியும் அதிகம் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவவும். “Understanding Our Covenants with God: An Overview of Our Most Important Promises,” in the July 2012 Liahona பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Becoming Exemplary Latter-day Saints,” Ensign or Liahona, Nov. 2018, 114.

  2. LaRene Gaunt, “Finding Joy in Temple Service,” Ensign, Oct. 1994, 8 பார்க்கவும்.

  3. வேறு வழியில் ஆலயம் செல்ல இயலாத சபையாருக்கு ஒரு முறை நிதியுதவியளிக்கிற சபையின் பொது ஆலய புரவலர் உதவி நிதியால் அவர்களது பணம் திருப்பியளிக்கப்பட்ட பிறகு, ஆனும் ஆண்டனும் தங்கள் கழுத்தணியை திரும்ப பெற முடிந்தது.

அச்சிடவும்