2020
பொது மாநாடு மூலம் ஊழியம் செய்தல்
ஏப்ரல் 2020


பொதுமாநாடு மூலம் ஊழியம் செய்தல், லியஹோனா, ஏப்ரல் 2020

படம்
ஊழியம் செய்தல்

ஊழியம் செய்தலின் கொள்கைகள், ஏப்ரல் 2020

பொது மாநாடு மூலம் ஊழியம் செய்தல்

உயர்த்தும் மேற்கோள்கள், குடும்ப பாரம்பரியங்கள், மற்றும் கர்த்தரின் ஊழியக்காரர்களின் போதனைகளுடன் ஊழியம் செய்ய, பொதுமாநாட்டு வாரக்கடைசிக்கு முன்னும், அப்போதும், பிறகும் பொது மாநாடு நமக்கு பல வழிகளைக் கொடுக்கிறது!

பொது மாநாட்டை பார்க்க ஒருவரை அழைக்க தங்கள் வகுப்பின் அங்கத்தினர்களை ஊழிய ஆயத்த வகுப்பு ஆசிரியர்களாக சுசி மற்றும் டாம் முல்லன் வழக்கமாக ஊக்குவிக்கிறார்கள்.

“ஒருவரை ஒன்றை செய்ய அழைப்பது ஊழியப்பணியின் ஒருங்கிணைந்த பணி, அது ஊழியம் செய்வதற்கும் பொருந்தும். அவர்களுக்கும் அவர்கள் அழைத்தவர்களுக்கும் அது எவ்வளவு நன்றாக இருந்தது என்பதைப்பற்றி எங்கள் மாணவர்கள் வழக்கமாக திரும்ப வந்து கூறினர்” என அவர் சொல்கிறார்.

அவர்களது மாணவர்கள் செய்ததை அறிவித்த விதங்களில் சில இங்கே:

  • “சில பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கிற ஒரு நண்பருக்கு நாங்கள் ஊழியம் செய்கிறோம். பதில்களுக்காக பொதுமாநாட்டு செய்திகளைக் கேட்குமாறு நாங்கள் அவரை அழைத்தோம். மாநாட்டுக்குப் பிறகு நாங்கள் அவரை சந்தித்தபோது, உதவக்கூடிய பல ஆலோசனைகளைக் கேட்டதாக அவர் எங்களிடம் சொன்னார்.”

  • “நாங்கள் ஒரு பொதுமாநாட்டு விருந்து ஆயத்தம் செய்தோம், பகிர்ந்துகொள்ள ஒவ்வொருவரும் தின்பண்டங்கள் கொண்டுவந்தனர். நாங்கள் அதை மீண்டும் செய்ய தீர்மானிக்கும் அளவுக்கு அது ரசிக்கத்தக்கதாக இருந்தது.”

  • “பொதுமாநாட்டை என்னுடன் பார்க்க ஒரு நண்பரை நான் அழைத்தேன். நாங்கள் அதைப்பற்றி பேசியபோது, கூடுமிடத்தில் பார்க்கமுடியுமா என பார்க்க, அங்கு செல்லலாம் என முடிவு செய்தோம். நாங்கள் போனோம், அங்கிருப்பது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது!”

முல்லன்ஸ்களும் அவர்களது மாணவர்களும் கற்றுக்கொண்டபடி, பொதுமாநாடு மூலம் ஊழியம் செய்ய பல வழிகள் உள்ளன. உயர்த்துகிற மேற்கோள்களையும், குடும்ப பாரம்பரியங்களையும், அர்த்தமிக்க கலந்துரையாடல்களையும், கர்த்தரின் ஊழியக்காரர்களின் போதனைகளையும் பகிர்ந்துகொள்வது அற்புதமான வழியாகும்!

உங்கள் வீட்டுக்கு பிறரை அழைக்கவும்

நான் உங்களிலன்பாயிருந்ததுபோல “’நீங்களும் ஒருவருரிலொருவர் அன்பாயிருங்கள்’ என தன்னைப் பின்பற்றியவர்களுக்கு இரட்சகர் கட்டளையிட்டார்(யோவான் 13:34). அவ்விதமாக, அவர் நம்மை எப்படி நேசித்தார் என நாம் பார்க்கிறோம். … நாம் அவரை நமது முன்னுதாரணமாக ஆக்கினால், ஒவ்வொருவரையும் சேர்த்துக்கொள்ள அணுகுவதற்கு நாம் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும்.” —தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ்1

பல ஆண்டுகளுக்கு முன், எங்கள் அற்புதமான வீட்டு போதகர் மைக், எங்கள் பிள்ளைகளும் நானும் பொதுமாநாட்டைப் பார்க்க ஒரு சிறு மடிக்கணினி மட்டுமே வைத்திருக்கிறோம் என்பதைக் கவனித்தார். தம்முடனும் அவரது மனைவியாகிய ஜாக்கியுடனும் பொது மாநாட்டை பார்க்க அவர்களுடன் இருப்பதை விரும்புவதாக, அவர்களது வீட்டுக்கு வருமாறு அவர் எங்களை உடனே அழைத்தார். ஒரு நிஜ தொலைக்காட்சிப் பெட்டியில் மாநாட்டை பார்ப்பதில் என் பிள்ளைகள் உற்சாகமடைந்தனர், அந்த ஆதரவுக்காக நான் பெரிதும் பாராட்டினேன். நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தை அனைவரும் விரும்பினோம்.

அதன் பின், பொது மாநாட்டை ஒன்றாக பார்ப்பது ஒரு பாரம்பரியமானது. எங்களுக்கு சொந்தமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிய பின்பும், பொது மாநாட்டுக்காக எங்கள் தலையணைகளோடும், நோட்டு புத்தகங்களுடனும், நொறுக்கு தீனிகளுடனும் மைக் மற்றும் ஜாக்கியின் வீட்டுக்கு சென்றோம். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை ஒன்றாக கேட்டல் அதை அதிக விசேஷமானதாக ஆக்கியது. நாங்கள் ஒரு குடும்பம் போல ஆனோம். மைக்கும் ஜாக்கியும் எங்கள் சிறந்த நண்பர்கள்களில் சிலராகவும், என் பிள்ளைகளுக்கு இரண்டாம் தாத்தா பாட்டிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களது அன்பும் நட்பும் எங்கள் குடும்பத்துக்கு அருமையான ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது. தங்கள் வீட்டையும் இருதயங்களையும் எங்களுக்காக திறக்க விருப்பமாயிருந்ததற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

சூசன் எர்ட், கலிபோர்னியா, அ.ஐ.நா

கருத்தில்கொள்ள வேண்டிய கொள்கைகள்

“கவனித்தார்”

பிறரின் தேவைகளை பார்க்க இரட்சகர் அன்புடன் நேரம் எடுத்துக் கொண்டார், பின்பு அந்த தேவைகளை சந்திக்க செயல்பட்டார் (மத்தேயு 9:35–36; யோவான் 6:5; 19:26–27 பார்க்கவும்). அதையே நாமும் செய்யலாம்.

“உடனே அழைத்தார்”

நாம் ஊழியம் செய்பவர்களின் தேவைகளை கவனித்த பிறகு, செயல்படுவதே அடுத்த படி.“தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்டல்”

ஒன்றாக கற்கவும், ஒன்றாக வளரவும், நமது ஆத்துமாக்களுக்கு முக்கியமானதாக இருக்கிற ஆவிக்குரிய காரியங்களைப்பற்றி பேசவும் நாம் “அடிக்கடி கூட” (மரோனி 6:5) வேண்டும் .

“வாருங்கள், ஒரு தீர்க்கதரிசியின் குரலைக் கேளுங்கள், தேவ வார்த்தையைக் கேளுங்கள்” 2 என்பது நாம் ஊழியம் செய்பவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடிய மிக முக்கிய அழைப்புக்களில் ஒன்றாக இருக்கலாம்.

“அன்பும் நட்பும்”

பிறருக்கு உண்மையாகவே உதவவும், செல்வாக்கு ஏற்படுத்தவும், நாம் மனதுருக்கத்துடனும் “மாறாத அன்புடனும்” உறவுகளை வளர்க்க வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41 பார்க்கவும்).

இணைய தளத்தில் பகிர்ந்துகொள்ளவும்

“அதிக எண்ணிக்கையில் தனிநபர்களிலும், குடும்பங்களிலும், நேரிடையாக நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் சமூக ஊடக தளங்கள் உலகளாவிய கருவிகள். நித்திய பிதாவாகிய தேவனையும், தன் பிள்ளைகளுக்காக அவரது மகிழ்ச்சியின் திட்டத்தையும், உலகத்தின் இரட்சகராக, அவரது குமாரனைப்பற்றியும், பொருத்தமானபடியும் மிக ஆற்றலுடனும் சாட்சியளிக்க இந்த உணர்த்தப்பட்ட கருவிகளை பயன்படுத்த கிறிஸ்துவின் சீஷர்களாக நமக்கு நேரம் வந்திருக்கிறது என நான் நம்புகிறேன். —மூப்பர் டேவிட் ஏ. பெட்னார்3

உலகம் முழுவதற்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள இணைய தளம் நம்மை அனுமதிக்கிறது. நான் அதை நேசிக்கிறேன்! பொது மாநாட்டுக்காக சில பயிற்சிகளை நான் பகிர்ந்துகொள்கிறேன், ஆனால் பொதுமாநாட்டிலிருந்து கலந்துரையாடலை உருவாக்க பிறருக்கு உதவ நான் அதிகமாக முயற்சிக்கிறேன். பிறரிடம் கேள்விகளைப் பார்க்கும்போது, காரியங்களை புதிய ஒளியில் பார்க்க அடிக்கடி உதவ முடியும் மற்றும் நமது சொந்த பெரிய கேள்விகளுக்கு ஒரு உந்துவிசையாக இருக்கமுடியும்.

நீங்கள் ஊழியம் செய்யும் குடும்பங்களுடன் பொது மாநாட்டு செய்திகளை கலந்துரையாட கேள்விகளைப் பயன்படுத்தும்போது தங்கள் பலங்களையும் அவர்களது தேவைகளையும் பார்க்க உங்களுக்கு உதவுகிறது என நான் கண்டறிந்தேன். மிக அண்மை பொது மாநாட்டு தலைப்பு எதுவாயிருந்தது என நீங்கள் உணர்கிறீர்கள்? என்பது நான் கேட்கவேண்டிய பிரபலமான கேள்விகளில் ஒன்று.

அவர்களது வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, எது அவர்களுக்கு முக்கியம் என பார்க்க அந்த பதில் கிட்டத்தட்ட எப்போதுமே உங்களை அனுமதிக்கிறது. அவர்களை நீங்கள் அதிக தெளிவாக பார்க்க இயலுவதால், நீங்கள் ஒரு சிறந்த ஊழியக்கார சகோதரி அல்லது சகோதரனாக அது உங்களை அனுமதிக்கிறது.

காமில் கில்காம், கொலொராடோ, அ.ஐ.நா

கருத்தில்கொள்ள வேண்டிய கொள்கைகள்

சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவும்

“சதாகாலங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் சாட்சிகளாய் நிற்க” நாம் உடன்படிக்கை செய்துள்ளோம். (மோசியா 18:9).

“ஒரு கலந்துரையாடலை உருவாக்கவும்”

பொது மாநாட்டு செய்திகள், வியப்பான, பொருத்தமான, மற்றும் ஆவிக்குரிய விதமாக நடத்தக்கூடிய கலந்துரையாடல்களுக்கு உணர்த்த முடியும். இந்த விதமான கலந்துரையாடல்கள் உங்கள் உறவுகளை பெலப்படுத்தவும், உங்கள் சாட்சி வளரவும், உங்களுக்கு மகிழ்ச்சி கொண்டுவரவும் முடியும்! (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:22 பார்க்கவும்).

“கேள்விகளைப் பயன்படுத்தவும்”

“ஆர்வங்கள், அக்கறைகள் அல்லது பிறர் வைத்திருக்கிற கேள்விகளை புரிந்துகொள்ள நல்ல கேள்விகள் உங்களுக்கு உதவும். அவை உங்கள் போதித்தலை அதிகரித்து, ஆவியை வரவேற்று, ஜனங்கள் கற்றுக்கொள்ள உதவ முடியும்.”4

குறிப்புகள்

  1. Dallin H. Oaks, “Love and the Law” (video), mormonandgay.ChurchofJesusChrist.org.

  2. “Come, Listen to a Prophet’s Voice,” Hymns, no. 21.

  3. David A. Bednar, “Flood the Earth through Social Media,” Liahona, Aug. 2015, 50.

  4. Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. (2004), 185.

அச்சிடவும்