2020
சபை நிகழ்வுகள் மூலமாக ஊழியம் செய்தல்
ஜூலை 2020


“சபை நிகழ்வுகள் மூலம் ஊழியம் செய்தல்,” லியஹோனா, ஜூலை 2020

படம்
ஊழியம் செய்தல்

வாலிபன் கூடாரம் அமைக்கும் நிழற்படம்-பட் கார்க்கின், சிறுமி மேஜையை ஒழுங்கு செய்யும் நிழற்படம்-ஷெரி ப்ரைஸ் மெக்பார்லண்ட், கெட்டி இமேஜஸிலிருந்து பின்னணி

ஊழியம் செய்தலின் கொள்கைகள், ஜூலை 2020

சபை நிகழ்வுகள் மூலம் ஊழியம் செய்தல்

ஆசிரியர் குறிப்பு: இந்த கட்டுரை கோவிட்-19 தொற்றுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது. சமூக இடைவெளி காலத்தில் இவ்வாலோசனைகளில் சில பொருந்தாது, ஆனால் சபைக்கூட்டங்களும் நிகழ்வுகளும் மீண்டும் நடக்கும்போது பொருத்தமானவைகளாகும். தேவைப்பட்டால், தற்போதைய சபை மற்றும் அரசு வழிகாட்டுதல்கள்படி இந்த ஆலோசனைகளை பொருத்திக் கொள்ளவும்.

நமது சக சபையாருக்கும், அக்கம்பக்கத்தாருக்கும், நண்பர்களுக்கும் நாம் ஊழியம் செய்யக்கூடிய ஒரு வழி சபை நிகழ்வுகள் மூலமாகும். நீங்கள் ஊழியம் செய்கிற ஒருவரின் தேவைகள் அல்லது ஆர்வங்களைச் சுற்றி நீங்கள் திட்டமிட்டாலும், அல்லது நிகழ்வுகளில் அல்லது பிறரின் சேவை சந்தர்ப்பங்களில், தொகுதி , பிணைய அல்லது பிணைய நிலை நிகழ்வுகளில் பங்கேற்க அவர்களை அழைத்தாலும், ஒற்றுமையை வளர்க்கவும் அங்கத்தினர்களை பெலப்படுத்தவும் அர்த்தமுள்ள மற்றும் பொழுதுபோக்கான வழிகளைக் கொடுக்க முடியும்.

சபை நிகழ்வுகள் ஊழியம் செய்ய அநேக சந்தர்ப்பங்களுக்கான கதவுகளைத் திறக்க முடியும். உதாரணமாக, சபை நிகழ்வுகள் பிறரை ஆசீர்வதிக்கிற சேவைத் திட்டங்களில் பங்கேற்கவும், சமூகத்தில் நேர்மறையான உறவுகளைக் கட்டவும் சந்தர்ப்பங்களை அளிக்க முடியும். சபை நிகழ்வுகள் சபையில் ஆர்வம் குறைந்த அங்கத்தினர்களையும், பிற விசுவாசத்தைச் சார்ந்த நண்பர்களையும் அல்லது மத சார்பில்லாத நண்பர்களையும் தொடர்புகொள்ள ஒரு சந்தர்ப்பமாக இருக்க முடியும்.

நமது தொகுதிகளையும் கிளைகளையும், நமது அக்கம்பக்கத்தாரையும், நமது சமூகங்களையும் ஆசீர்வதிக்கவும் பெலப்படுத்தவும் சபை நிகழ்வுகளில் அநேகரைச் சேர்த்தல் கர்த்தருக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குகிறது.

நேர்மறை உறவுகளைக் கட்டுதல்

குளிர்காலம் நெருங்கியது, தன் குடும்பத்தை எப்படி இதமாக வைத்துக்ககொள்வது என்பதுபற்றி டேவிட் டிக்சனுக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை.

டேவிட், அவரது மனைவி மற்றும் இரு மகள்களும் தற்போதுதான் மாபெரும் சிவந்த மலை பிளவுகளும், புதர்களும், பசுமைக்காடுகளும் சூழ்ந்த மேடான பாலைவன தரையான அஐநாட்டின் அரிசோனாவிலுள்ள பிரிடோனியா எனும் கிராமப்புற நகருக்கு நகர்ந்தனர்.

டிக்கன் குடும்பத்தார் வாடகைக்கு எடுத்த வீடு, பிரதான வெப்ப ஆதாரமாக விறகு அடுப்பை சார்ந்திருந்தது. பிரிடோனியாவில் குளிர்காலம் பனியும் பனிக்கட்டியும் நிறைந்தது என்பதால், விறகைச் சேகரிப்பது ஒரு தேவையான திறன் என டேவிட் விறைவிலேயே உணர்ந்தார்.

“என்னிடம் விறகோ, அல்லது சங்கிலி வாளோ அல்லது அதை எப்படி பயன்படுத்துவது என்ற அறிவோ எனக்கு இல்லை!” டேவிட் சொல்கிறார், “நான் என்ன செய்யப் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை.”

தொகுதியின் சில அங்கத்தினர்கள் குளிர் காலத்தை சமாளிக்க அவரது குடும்பம் போதுமான விறகை வைத்திருக்கிறதா என கேட்டனர். “என்னிடம் இல்லை என அவர்கள் உணர அதிக நேரம் ஆகவில்லை,” டேவிட் சொல்கிறார். “மூப்பர் குழுமம் உடனே விறகை சேகரிக்க எனக்கு உதவ முன்வந்தனர். நன்றியுணர்வால் மேற்கொள்ளப்பட்டு, நான் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.”

நன்கு திட்டமிடப்பட்ட, நன்கு அமைக்கப்பட்ட, ஜனங்கள் நிறையபேர் வந்த தொகுதி நிகழ்ச்சிகள் அனேகத்தைவிட இந்த விறகு சேகரிக்கும் பயணம் வித்தியாசமானது என டேவிட் விரைவில் கண்டார். ஒரு சனிக்கிழமை மாலையில், டேவிட், மூப்பர் குழுமம், மற்றும் பிற தொகுதி அங்கத்தினர்கள் பாரவண்டிகளிலும் இணைப்பு வண்டிகளிலும் மலையை நோக்கி சென்றனர்.

“ஒரு மாலையில், அவர்களது கருவிகள் மற்றும் அனுபவத்தினிமித்தம், தொகுதி அங்கத்தினர்கள் இரண்டு குளிர்காலத்துக்கு நீடித்த விறகுக்குவியலை என் குடும்பத்துக்கு கொடுத்தனர்,” என டேவிட் கூறுகிறார். “மிக முக்கியமாக, நான் தானே விறகைச் சேகரிப்பது பற்றி நான் அறிய வேண்டியவை அனைத்தையும் நான் கற்பிக்கப்பட்டேன். நான் பிரிடோனியாவை விட்டு வந்தபோது, எவ்வாறு ஒரு சங்கிலி வாளை கையாள்வது என அறிந்து, எனக்கு தெரிந்த அதிக விறகு சேகரிக்கும் நிகழ்ச்சிகளில் உதவினேன்.”

அப்படிப்பட்ட தொகுதி நிகழ்ச்சிகள் சபையாரிடையே நேர்மறையான உறவுகளை வளர்த்ததுமட்டுமின்றி, சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவருடனும் நேர்மறை உறவுகளையும் கட்டியது.

“சபையாரல்லாத அப்பகுதிக்கு புதியவரான ஒரு பெண்ணை நான் நினைவுகூர்கிறேன்,” என டேவிட் கூறுகிறார். “வெதுவெதுப்பாக்க அவரது வீட்டிலிருந்த மர பலகைகளை எரிக்கும் அளவுக்கு அவர் தள்ளப்பட்டார். அவரது நிலையை நாங்கள் அறிந்தவுடன், குளிர்காலம் முழுவதும் சமாளிக்க போதுமான விறகை அவர் பெற்றிருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். அவரால் பேச முடியாத அளவுக்கு அவர் நன்றியுள்ளவராக இருந்தார்.”

பிரிடோனியாவில் ஊழிய முயற்சிகள் குளிர்காலம் முழுவதும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும் வெதுவெதுப்பாகவும் இருந்ததை உறுதி செய்தது.

பிறரை அணுகுதல்

ருமேனியாவில் ஊழியம் செய்தபோது, மேக் யோஸ்ட் மற்றும் அவளது தோழியும் நீண்ட காலம் சபைக்கு வராத குடும்பத்தை ஒழுங்காக சந்தித்தார்கள். மேக் சொல்கிறாள், “ருமேனியாவில் ஸ்டானிக்கா குடும்பத்தினர் முதல் அங்கத்தினர்களாக இருந்தனர், அவர்களை நாங்கள் நேசித்தோம்.”

ஒரு கிளை நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தும் நேரம் வந்தபோது, தலைவர்கள் “முன்னோடி இரவு” கொண்டாட முடிவு செய்தார்கள். சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு செல்ல, அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கடந்த தைரியமிக்க முன்னோடிகளை அது கொண்டாடும் மாலையாக இருக்கும். ருமேனியாவில் சபையின் முன்னோடிகளை கவுரவிக்க அது ஒரு சந்தர்ப்பமாயிருக்கும்.

“தங்கள் மனமாற்றம் பற்றிய சாட்சியையும் ருமேனியாவில் சபை வளர்ந்ததை அவர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதையும் கூற, சில அங்கத்தினர்களுக்கு அது சிறந்த வழியாக இருக்கும்,” என மேக் சொல்கிறாள். “ஸ்டானிக்கா குடும்பத்தினர் ஈடுபடுத்தப்பட வேண்டுமென நாங்கள் உடனே நினைத்தோம். பங்கேற்க நாங்கள் அவர்களை அழைத்தோம், அவர்கள் மகிழ்ந்தார்கள்!”

நிகழ்ச்சியன்று இரவில், தொடங்க வேண்டிய நேரத்தில் இன்னும் ஸ்டானிக்கா குடும்பத்தினர் வரவில்லை.

“அவர்கள் வர மாட்டார்கள் என நாங்கள் கவலையடைந்தோம்,” மேக் நினைவுகூர்கிறாள். “ஆனால் சரியான நேரத்தில் அவர்கள் வாசல் வழியே வந்தார்கள். சுவிசேஷம் மற்றும் சபை பற்றி அழகான சாட்சியை ஸ்டானிக்கா குடும்பத்தினர் பகிர்ந்தனர். நீண்ட நாட்களாக அவர்கள் பார்க்காத பிற அங்கத்தினர்களுடன் அவர்கள் பழகினார்கள்.”

கிளை அங்கத்தினர்கள் தங்கள் கரங்களை விரித்து ஸ்டானிக்கா குடும்பத்தாரை வரவேற்றனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சபையில் சகோதரி ஸ்டானிக்காவைப் பார்க்க மேக் மகிழ்ச்சியோடு ஆச்சரியப்பட்டாள்.

“சில மாதங்களுக்குப்பின் கிளைக்கு நான் சென்றபோது, அவர் இன்னும் வந்துகொண்டிருந்தார். மேக் சொல்கிறாள். “அவரது சாட்சியை சொல்லவும், கிளையில் ஈடுபாட்டோடு தேவைப்படுவதை உணர்ந்தது உண்மையாகவே அவருக்கு உதவியிருக்கிறது.”

சபை நிகழ்வுகள் மூலம் ஊழியம் செய்வதற்கு ஆலோசனைகள்

  • தேவைகளைச் சந்திக்கிற நிகழ்ச்சிகளைத் திட்டமிடவும்: அநேக வித்தியாசமான தேவைகளைச் சந்திக்க நிகழ்ச்சிகள் சிறந்த வழியாகும். ஒரு தனிநபர் அல்லது குழுவின் குறிப்பிட்ட தேவைகளை சந்திக்க அவை திட்டமிடப்படலாம். ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்ளும் தேவையாயிருந்தாலும், சுவிசேஷம் பற்றி அதிகம் கற்பதாயிருந்தாலும், அல்லது ஆவியை உணர்வதானாலும், பங்கேற்பவர்களின் தேவைகளை அவை சந்திக்க வேண்டும்.

  • ஒவ்வொருவரையும் அழையுங்கள்: நீங்கள் நிகழ்வுகள் திட்டமிடும்போது, பங்கேற்பதால் பயன்பெறுபவர்களை அழைக்க சிறப்பான முயற்சி செய்யவும். புதிய அங்கத்தினர்கள், ஆர்வம் குறைந்த அங்கத்தினர்கள், இளைஞர், தனி வயதுவந்தோர், ஊனமுற்றோர், மற்றும் பிற விசுவாசத்தைச் சேர்ந்தோரை மனதில் கொள்ளவும். அவர்களது சிறந்த நலனை மனதில் வைத்து அழைக்கவும், அவர்கள் வருவதை எவ்வாறு விரும்புவீர்கள் என தெரிவிக்கவும்.

  • பங்கேற்பை ஊக்குவிக்கவும்: அவர்கள் பங்கேற்கும் சந்தர்ப்பம் பெற்றால், நிகழ்ச்சிகளிலிருந்து நீங்கள் அழைப்பவர்கள் அதிகம் பெறுவார்கள். பங்கேற்பை ஊக்குவிக்கும் ஒரு வழி, தனிநபர்கள் நிகழ்ச்சியின்போது தங்கள் வரங்களையும், திறன்களையும், தாலந்துகளையும் பயன்படுத்தச் செய்வதாகும்.

  • ஒவ்வொருவரையும் வரவேற்கவும்: ஒரு நிகழ்வில் உங்கள் நண்பர்கள் பங்கேற்றால், அவர்கள் வரவேற்கப்படுவதாக உணர, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவும். அதுபோல, உங்களுக்குத் தெரியாதவர்களை நீங்கள் கண்டால், நட்புடன் அவர்களையும் வரவேற்கவும்!

அச்சிடவும்