2020
சுயசார்பின் மூலமாக ஊழியம் செய்தல்
ஆகஸ்டு 2020


“சுயசார்பின் மூலமாக ஊழியம் செய்தல்,” லியஹோனா, ஆகஸ்டு 2020

படம்
ஊழியம் செய்தல்

ஊழியம் செய்தலின் கொள்கைகள், ஆகஸ்டு 2020

சுயசார்பின் மூலமாக ஊழியம் செய்தல்

சுயசார்பாக பிறருக்கு உதவிசெய்தல் கர்த்தருடைய வழியில் கொடுத்தலும் ஊழியம் செய்தலுமாகும்.

நமது குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரில் அநேகர் சுயசார்புடையவர்களாக மாறுவதில் ஆர்வமுள்ளவர்களாயிருக்கின்றனர். சபையின் சுயசார்பு முயற்சியைப் பயன்படுத்தி, “அதிக நம்பிக்கையையும், சமாதானத்தையும், முன்னேற்றத்தையும்”1 கொண்டுவருகிற கொள்கைகளுடன் சபை அங்கத்தினர்கள் பிறரை ஆசீர்வதிக்கும்போது, அவர்கள், சேவை செய்யவும், கவனிக்கவும், ஊழியம் செய்யவும் வாய்ப்புகளைக் காண்கின்றனர்.

“நான் வீட்டிலிருந்தேன்”

கிறிஸ்ஸி கெப்லர், அரிசோனா, அ.ஐ.நா

விவாகரத்தைத் தொடர்ந்து நான் பண ரீதியாக போராடிக்கொண்டிருந்தேன், எட்டு வருடங்கள் வீட்டில் இருந்த அம்மாவாக இருந்தபின் மீண்டும் பணிக்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். எனது பதின்வயதிலிருந்தே ஒரு ஜெபக்கூடத்துக்குள் காலடி வைக்காதிருந்தும், சத்தியத்தையும் விசுவாசத்தையும் தேடி ஆவிக்குரிய ரீதியிலும் போராடிக்கொண்டிருந்தேன்.

சபையில் ஆர்வமிக்க என்னுடைய மூத்த சகோதரி பிரஸில்லா வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் துணிகளைத் துவைத்துக்கொண்டிருந்தேன். நான் அங்கிருந்தபோது, 15 ஆண்டுகளில் முதல் அழைப்பாக, அவளுடைய குடும்பத்துடன் சபைக்கு வருமாறு பிரிஸில்லா என்னை அழைத்தாள்.

முதலில் நான் தயங்கினேன், ஆனால், தேவனிடத்தில் எவ்வாறு நெருங்கி வருவதென்பதை எனக்குக் காட்ட அதற்கு முந்திய இரவில் நான் அவரிடம் மன்றாடியிருக்கிறேன். உள்ளே ஒரு இழுபறியின் உணர்வுக்குப் பின்னர், “ஒரு வயதுவந்தவளாக, உன்னுடைய சொந்த இருதயத்துடனும் கண்களுடனும் நீயே கேட்கவும் பார்க்கவும் ஏன் செல்லக்கூடாது?” என நான் முடிவு செய்தேன்.

நாங்கள் திருவிருந்துக் கூட்டத்தில் இருந்தபோது, தனிப்பட்ட நிதி குறித்த சுயசார்பு படிப்பை அறிவிக்கும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பில் நான் கவனித்தேன். சபைக்கு திரும்பிவர நான் ஆயத்தமாயில்லை, ஆனால் அந்த 12 வார படிப்பால் நான் கவரப்பட்டேன். என்னுடைய சகோதரி மற்றும் மைத்துனரின் ஊக்குவிப்புடன், வரவுசெலவு கணக்கை எப்படி அமைப்பது, கடனை எவ்வாறு அடைப்பதென்பதை கற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நான் பதிவு செய்தேன். எப்படியாயினும் வகுப்புகள் என்னை ஆவிக்குரியபிரகாரமாக மாற்றியது.

வகுப்பின் முதல் சில வாரங்களில் ஆவிக்குரிய செய்திகளால் நான் ஆச்சரியமடைந்தேன், ஆனால் மூன்றாவது வகுப்பின்போது, நான் ஆறுதலாக இருந்தேன், புதிய ஆனால் பரிச்சயமான சத்தியங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்ற திடமான உணர்வால் மேற்கொள்ளப்பட்டேன். வகுப்பிலிருந்து வெளியேறி பிரிஸில்லாவைக் காண வண்டி ஓட்டிச்சென்றேன். “என்னுடைய வாழ்க்கையில் இந்த உணர்வை அதிகமாக நான் எவ்வாறு அடைவதென?” கண்ணீருடன் அவளிடம் நான் கேட்டேன். எனக்கு கற்பிக்க ஆரம்பிக்க ஊழியக்காரர்களை அவள் ஏற்பாடு செய்தாள்.

என்னுடைய சுயசார்பு வகுப்பு அங்கத்தினர்கள் என்னுடைய ஊழியக்காரர்கள் பாடங்களுக்கு வந்து எனக்கு ஆதரவு அளித்தனர். என்னுடைய ஆவிக்குரிய காரியத்தில் அவர்கள் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி, சுவிசேஷத்தைப்பற்றியும் தற்கால தீர்க்கதரிசிகளைப்பற்றியும் ஒரு சாட்சியத்தை மேம்படுத்த எனக்குதவினார்கள்.

பாடத் திட்டத்தை முடிக்க நான் எடுத்துக்கொண்ட நேரத்தில், உலகப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய மாற்றங்கள் பலவற்றை நான் செய்தேன். ஒரு நல்ல நிறுவனத்தில் நான் ஒரு புதிய வேலையை ஆரம்பித்து, என்னுடைய அநேக கடன்களை நான் அடைத்தேன்.

ஆனால், அழகிய நட்புறவுகளை உருவாக்குதல், ஒரு ஊக்குவிக்கும் ஆயரின் நேர்மறையான உறவை விருத்திசெய்தல், தசமபாகத்தைப்பற்றிய ஒரு சாட்சியத்தைக் கண்டுபிடித்தல், என்னுடைய ஆலய பரிந்துரையைப் பெறுதல், தரிப்பிக்கப்படுதல் மற்றும் என்னுடைய இரண்டு மூத்த பிள்ளைகளும் ஞானஸ்நானம் பெறுதலையும் உள்ளடக்கி பாடத்திட்டத்திலிருந்து ஆழமான, இனிமையான ஆசீர்வாதங்கள் வந்தன.

சுயசார்புக்கான என்னுடைய பாதை இன்னமும் விரிவடைகிறது, ஆனால் என்னுடைய எஞ்சிய பயணத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்களையும் நான் ஏற்படுத்திய நட்புறவுகளையும் போற்றுவேன்.

“ஒவ்வொரு வகுப்பையும் விட்டுப்போகும்போது நேசிக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன்”

டிசம்பர் 2016ல் தன்னுடைய 10 வயது மகன் வின்சன்ட்டுடன் சால்ட் லேக் சிட்டி, யூட்டாவிலுள்ள ஆலய சதுக்கத்திற்கு அவள் வருகைபுரிந்தபோது, “வசதியாக அஞ்ஞானவாதியாக” கேட்டி பங் தன்னைக் கருதினாள். தனது 16வது வயதில் அவள் சபையை விட்டுப்போனாள், 17வயதில் தனிமையான தாயானாள், பச்சைக் குத்திக்கொள்ள ஆரம்பித்து, காபியை சுவைப்பதை விருத்தி செய்தாள். ஆனால், ஆலய சதுக்கத்திற்கு சென்றபோது, பரிசுத்த ஆவியை வின்சன்ட் உணர்ந்து, ஊழியப் பாடங்களை அவனால் கற்றுக்கொள்ள முடியுமா என அவனுடைய தாயிடம் கேட்டான்.

அவளுடைய இரண்டு வேலைகள் மற்றும் ஒரு வாரத்தில் 80 மணி நேர வேலை இருந்தபோதிலும், வின்சன்டுடன் சேர்ந்து கேட்டி சுவிசேஷத்தைப் படித்தாள், ஊழியக்காரர்களின் வருகைகளுக்கு இடையில் அவனுடைய கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்துகொண்டிருந்தாள். 2017 ஆம் ஆண்டு கோடையில், சபைக் கூட்டங்களில் அவள் கலந்துகொள்ள ஆரம்பித்தாள், அங்கே, சபையின் சுயசார்பு பாடங்களைப்பற்றி அவள் அறிந்துகொண்டாள்.

“அவை எனக்கு உதவக்கூடிய ஒன்று என்பதை நான் உணர்ந்தேன்,” என்று அவள் கூறினாள். “ஒருவேளை நான் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை அல்லது என் வாழ்நாள் முழுவதும் என் பெற்றோரைச் சார்ந்திருக்கவேண்டியதில்லை.”

“நம்பமுடியாத அளவிற்கு உலகப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் பலப்படுத்துகிறது” என்று கேட்டி தனது பாடத்திட்டத்தை அழைத்தாள், ஏனெனில் அவள் கற்றுக்கொண்டவற்றின் காரணமாக மட்டுமல்லாமல், சுயசார்பின் குழு அவளை எவ்வாறு ஏற்றுக் கொண்டு ஊழியம் செய்தார்கள் என்பதாலுமே.

குறிப்பு

  1. “Message from the First Presidency,” in Personal Finances for Self-Reliance (2016), i.

அச்சிடவும்