2020
என்னைப் பின்பற்றி வாருங்கள் மூலமாக ஊழியம் செய்தல்
செப்டம்பர் 2020


என்னைப் பின்பற்றி வாருங்கள் மூலமாக ஊழியம் செய்தல்,” லியஹோனா, செப்டம்பர் 2020

படம்
ஊழியம் செய்தல்

ஊழியம் செய்தலின் கொள்கைகள், செப்டம்பர் 2020

என்னைப் பின்பற்றி வாருங்கள் மூலமாக ஊழியம் செய்தல்

பிறர் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த என்னைப் பின்பற்றி வாருங்கள் எவ்வாறு உங்களுக்கு உதவமுடியும்?

ஞாயிறு பள்ளி வகுப்பறையில் ஒரு ஆசிரியராக அல்லது மாணவராக, அல்லது பள்ளிக்கூடத்தில், வேலையில் அல்லது வேறு எங்காவது நீங்கள் உங்கள் குடும்பத்தினருடனிருந்தாலும் அங்கே என்னைப் பின்பற்றி வாருங்கள் மூலமாக வேதப்படிப்பு பிறருக்கு ஊழியம் செய்ய ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கற்பித்தல் “ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கலந்துரையாடலை நடத்துவதைவிட கூடுதலானது, அன்போடு ஊழியம் செய்வதையும், மற்றவர்களை சுவிசேஷத்தால் ஆசீர்வதிப்பதையும் இதில் அடக்குகிறது.”1

மாணவர்களுடன் இணைதல்

ஒபெலியா ட்ரெஜோ டி கார்டெனாஸ் அவளுடைய மெக்சிகோ சிட்டி தொகுதியில் இளம் வயதுவந்தோருக்கு கற்றுக்கொடுக்க அழைக்கப்பட்டபோது, தனது ஒவ்வொரு ஞாயிறு பள்ளி மாணவர்களுடனும் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பது அவர்களுக்கு கற்பிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் தனது திறனை அதிகரிக்கும் என்று அவள் உணர்ந்தாள்.

“எனது மாணவர்களுடன் எனக்கு நெருங்கிய உறவு இல்லையென்றால், அவர்கள் என் அன்பை உணரவில்லை என்றால், நான் ஒரு வகுப்பில் கற்பிக்கும்போது அல்லது என் சாட்சியத்தை அளிக்கும்போது அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்,” என்று அவள் கூறுகிறாள். “நான் வெறும் ஞாயிறு பள்ளி ஆசிரியர் என அவர்கள் உணரலாம்.”

ஆனால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே சகோதரி கார்டெனாஸ் கற்பித்தால் எப்படி அத்தகைய உறவை வளர்க்க முடியும்? அவள் தொழில்நுட்பத்தின் மூலம் பதிலைக் கண்டுபிடித்தாள். கைபேசி பயன்பாடான வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி, அவளும் அவளுடைய மாணவர்களும் விரைவில் எழுத்து மற்றும் குரல் செய்திகள் மூலம் தினசரி இணைந்தனர். இப்போது, அடுத்த ஞாயிறு பள்ளி பாடத்திற்கு முன்பு ஒவ்வொரு நாளும், ஒரு வகுப்பு தன்னார்வலர் மற்ற வகுப்பு உறுப்பினர்களுக்கு அடுத்த பாடத்திலிருந்து ஒரு வேத வசனத்தை, ஒரு தொடர்புடைய தனிப்பட்ட சிந்தனையுடன் அனுப்புகிறார். வசனத்தையும் சிந்தனையையும் வாசித்த பிறகு, வகுப்பு உறுப்பினர்கள் தங்கள் சொந்த எண்ணங்களுடன் பதிலளிக்கிறார்கள்.

“அவர்கள் வேதத்தை வாசிக்கும்போது, அவர்கள் மகிழ்ச்சியான முகத்தை அனுப்புகிறார்கள், அதனால் அவர்கள் வேதத்தை வாசித்திருக்கிறார்கள் அல்லது படித்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அதைப்பற்றி சிந்தித்திருக்கிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன்” என்று சகோதரி கார்டெனாஸ் கூறுகிறாள். அடுத்த ஞாயிறு பாடத்திற்கான நேரம் வரும்போது, மாணவர்கள் பங்கேற்க ஆயத்தமாயிருக்கின்றனர்.

பெற்றோர் சபையில் ஆர்வமில்லாமலிருக்கிற ஒரு இளம் வயதுவந்த ஒருவரை இந்த தினசரி இணைப்பு சமீபத்தில் ஆசீர்வதித்தது.

“அவர் சபைக்கு வருவதைப் பார்ப்பதை நான் விரும்புகிறேன், ஏனென்றால் அங்கு வருவதற்கு, அவர் ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்று எனக்குத் தெரியும்,” என்று சகோதரி கார்டெனாஸ் கூறுகிறாள். “அவரது வகுப்பு தோழர்கள் அனுப்பிய வசனங்களும் சிந்தனைகளும், அவரது முறைவரும்போது அவர் அனுப்பிய வசனங்களும் சிந்தனைகளும் அவரை அதிகமாய் பலப்படுத்தியுள்ளன என்பதை நான் நிச்சயமாய் நம்புகிறேன்.”

அவளுடைய ஞாயிறு பாடத்தாலும், அவளுடைய வகுப்பின் தினசரி வேத இணைப்பாலும், வசனங்கள் மூலமாக ஊழியம் செய்தல் நின்றுபோவதில்லை என சகோதரி கார்டெனாஸ் கூறுகிறாள்.

“என்னுடைய ஆயத்தத்தில் என்னுடைய மாணவர்களுக்காக ஜெபித்தல் அடங்கியிருக்கிறதென” அவள் சொல்கிறாள். “ஞாயிற்றுக் கிழமை மட்டுமல்ல வாரத்தின் ஒவ்வொரு நாளும் நான் அவர்களைப்பற்றி நினைக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட மற்றும் வெவ்வேறு தேவைகளிருக்கின்றன. ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளை. என்னுடைய பாடங்களை நான் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது அவர்களைப்பற்றி நான் நினைக்கிறேன்.”

அவள் கற்பிக்கும்போது, அவளுடைய மாணவர்கள், பரிசுத்த ஆவி, இருவருக்கும் அவள் செவிகொடுக்கிறாள்.

“ஆசிரியர்தான் ஆவியானவர்” என அவளுடைய மாணவர்களின் குரல்களில் அவள் அடிக்கடி கேட்கிறாள். “அவர்கள் சொல்வது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிற வெளிப்படுத்தல் என்பதால் நான் கவனம் செலுத்தவேண்டும்.

எங்களுடைய வகுப்பு, “இல்ல மாலையைப் போன்றது”

அதன் போஷிப்பு மற்றும் ஊழிய சூழலினால் சகோதரி கார்டெனாஸின் ஞாயிறு பள்ளி வகுப்பில் உறுப்பினராக இருப்பதற்கு கார்லா குட்டிரெஸ் ஒர்டேகா கோர்டோபா ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறாள். கார்லா அந்த சூழலை பின்வருபவை உள்ளிட்ட பல காரணிகளுக்கு காரணமாக்குகிறாள்:

  • ஆயத்தம்: வசனங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளுதல் அடுத்த வகுப்புக்காக ஆயத்தப்பட மாணவர்களுக்கு உதவுகிறது. “தினசரி வசனங்கள் நம்மை போஷித்து நமது அறிவை விரிவுபடுத்துகிறது” என அவள் விளக்குகிறாள்.

  • பங்கெடுத்தல்: “நாம் அனைவரும் பேசுகிறோம். என்னுடைய வகுப்புத் தோழர்களை, நண்பர்களாக, சகோதரர்களாக, சகோதரிகளாக, மிக ஆழமாக அறிந்துகொள்ள இது என்னை அனுமதிக்கிறது.

  • அன்பு: “சகோதரி கார்டனாஸ் கரங்களைப் பிடித்து உங்களை அழைத்துச் செல்கிறார். ஏராளமான சகோதரர்களுடனும் சகோதரிகளுடனும் எங்களுடைய வகுப்பு, இல்ல மாலையைப் போன்று இருக்கிறது. இது மிக விசேஷமானது.”

  • பரிசுத்த ஆவி: “பரிசுத்த ஆவியுடன் நாங்கள் அதே மனநிலையில் இருப்பதால், எங்களுடைய வகுப்பில் ஒரு இனிமையான, இணக்கமான ஆவி இருக்கிறது.”

  • சாட்சியம்: “என்னுடைய சாட்சியத்தைப் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாயிருக்க என்னைப் பின்பற்றி வாருங்கள் எனக்குதவியது. மார்மன் புஸ்தகத்தைப்பற்றியும் வேதாகமத்தைப்பற்றியும் ஒரு ஆழமான அறிவு எனக்கிருக்கிறது. பள்ளியில் என் வகுப்புத் தோழர்களுடனும், வேலையில் மக்களுடனும் நான் கற்றுக்கொண்டவற்றைப் பகிர்ந்துகொள்ள இது என்னை அனுமதிக்கிறது.”

ஆவிக்குரிய தேவைகளுக்கு ஊழியம் செய்தல்

அ.ஐ.நாட்டின் கென்டக்கியிலுள்ள, க்ரெய்க் மற்றும் நிக்கி கிறிஸ்டன்சன் வேதங்களிலுள்ள ஆபிரகாமிய உடன்படிக்கையைப்பற்றி அவர்களுடைய மூன்று மகன்களுடன் வாசித்தபோது, அவர்களுக்கு அதை விளக்குவதை கடினமாக அவர்கள் கண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களாக ஆபிரகாமிய உடன்படிக்கையைப் படித்து பின்னர் அவர்கள் கண்டவற்றைப் பகிர்ந்துகொள்ள ஒரு குடும்பமாக அவர்கள் தீர்மானித்தனர்.

“எங்களுக்கு சில சுவாரஸ்யமான கருத்துக்கள் கிடைத்தன” என க்ரெய்க் சொல்கிறார். “ஆபிரகாமின் பெயர் ஆபிராமாக பயன்படுத்தப்பட்டது என எங்கள் எட்டு வயது மகன் கற்றுக்கொண்டான். பாவத்திலிருந்து திரும்பவும், ஒரு நீதியான வாழ்க்கையை வாழவும் கர்த்தருக்கு அவன் வாக்களித்ததால் அவனுடைய பெயர் ஆபிரகாமாக மாறியது. அவனால் அதைச் செய்ய முடிந்தது உண்மையில் என்னை ஆச்சரியப்படுத்தியது”.

அவர்கள் அனைவரும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டார்கள், ஆபிரகாமிய உடன்படிக்கை என்றால் என்ன, இன்றைய பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு அது என்ன அர்த்தமாகிறது என்பதைப்பற்றி ஒரு நல்ல கலந்துரையாடலை நடத்தினர்.

“நாங்கள் வழக்கமாக அறையைச் சுற்றி வந்து, எங்கள் குடும்ப வேதப் படிப்பிற்காக வேத வசனங்களைப் படிக்க முறை எடுத்தோம்” என நிக்கி சொல்கிறார் “பரிசுத்த ஆவியினால் கற்பித்தலுக்கு நேராக என்னைப் பின்பற்றி வாருங்கள் அதிகமாக நோக்கமாயிருக்கிறது. இப்போது நாம் ஒன்றுசேர்ந்து படிக்கும்போது, எங்களுடைய குடும்ப தேவைகளின் அடிப்படையில் ஒரு வித்தியாசமான திசையில் எங்களுடைய கலந்துரையாடல்களை கொண்டுபோக, பரிசுத்த ஆவியிடமிருந்து சிறிது குறிப்பை நான் உணருகிறேன்.

என்னைப் பின்பற்றி வாருங்களைப் பயன்படுத்துதல் அவர்களுடைய குடும்பம் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கவும், குடும்ப சுவிசேஷப் படிப்பில் ஆர்வமாயிருக்கவும் மட்டும் உதவுவதில்லாமல், தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளுக்கு ஊழியம் செய்யவும் க்ரெய்க் மற்றும் நிக்கிக்கு உதவியது.

“என்னுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க, என்னைப் பின்பற்றி வாருங்கள் எனக்குதவுகிறது என நிக்கி சொல்கிறார். “என்னுடைய பிள்ளைகளுடன் சிலசமயங்களில் எனக்கிருக்கிற வெவ்வேறு சவால்களைக் கையாளுவதற்கும்கூட இது எனக்குதவுகிறது. பரிசுத்த ஆவியுடன் அதிகமாய் இசைவானவனாக நான் உணருகிறேன், மிக நெருக்கமாக நான் கேட்கிறேன், ஒவ்வொரு பிள்ளைக்கும் நான் எவ்வாறு உதவமுடியும் என்பதற்கான உணர்த்துதல்களை நான் பெற்றிருக்கிறேன்.”

நீண்ட சுவிசேஷ கலந்துரையாடல்களை குடும்பத்தில் உருவாக்க என்னைப் பின்பற்றி வாருங்கள் உதவுகிறதென்பதை க்ரெய்க் ரசிக்கிறார். “எங்கள் மகன்கள் தங்கள் சுவிசேஷ அறிவில் அவர்கள் இருக்கும் இடத்தில் அனைவரும் வித்தியாசமாக இருக்கிறார்கள்,” என்று அவர் சொல்கிறார்.. “என்னைப் பின்பற்றி வாருங்கள் அவர்களுடைய தேவைகளின் அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள உதவ நமக்கு ஒரு வழியைக் கொடுத்திருக்கிறது. சுவிசேஷத்தின் மீதான அன்பில் அவர்கள் வளர்வதைப் பார்ப்பதும், அவர்கள் வாழ்க்கையில் சுவிசேஷ அறிவை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதும் ஒரு அற்புதமான ஆசீர்வாதமாக இருக்கிறது.”

குறிப்பு

  1. என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஞாயிறு பள்ளிக்காக: மார்மன் புஸ்தகம் 2020 (2019), 19.

அச்சிடவும்