2020
பிள்ளைகள் மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகள் மூலம் ஊழியம் செய்தல்
அக்டோபர் 2020


“பிள்ளைகள் மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகள் மூலம் ஊழியம் செய்தல்,” லியஹோனா, அக்டோபர் 2020

படம்
ஊழியம் செய்தலின் கொள்கைகள்

புகைப்படங்கள்-டாம் கார்னர், ஐசக் டார்க்கோ- அச்சியம்பாங்க், அலெக்சாண்டர் கே. போட்டங்க், மற்றும் ஜோனஸ் ரெபிக்கி.

ஊழியம் செய்தலின் கொள்கைகள், அக்டோபர் 2020

பிள்ளைகள் மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகள் மூலம் ஊழியம் செய்தல்

பிறர் வளர அழைப்பதும், வழியில் அவர்களுக்கு உதவுவதும் ஊழியம் செய்தலின் சாராம்சமாகும்.

பிள்ளைகள் மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகள் மூலம் ஊழியம் செய்தலுக்கு சந்தர்ப்பங்கள் ஏராளமாயிருக்கின்றன. வீட்டில் உங்கள் சொந்த பிள்ளைகள் அல்லது இளைஞர்கள் இருக்கலாம். நிகழ்ச்சியின் தலைவராக நீங்கள் இருக்கலாம் அல்லது பிள்ளைகளும் இளைஞரும் உள்ள குடும்பங்களுக்கு நீங்கள் ஊழியம் செய்யலாம். அல்லது சில பிள்ளைகளையும் இளைஞர்களையும் நீங்கள் அறியலாம் (அது நம் அனைவரையும் உள்ளடக்கலாம்.) உங்கள் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், பிறரின் வாழ்க்கையை ஆசீர்வதிக்க இந்நிகழ்ச்சி அல்லது இதன் கொள்கைகளை பயன்படுத்த பல வழிகள் இருக்கின்றன.

நம்மை ஒன்றிணைந்து மேம்படுத்துதல்

பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் இதயத்தில் பரிபூரணமாக ஊழியம் செய்த இரட்சகரைப் போலாக ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வதும் உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் அநேகர், உங்கள் வாழ்க்கையில் பல துறைகளில் நீங்கள் அதிகமாக முன்னேறுவது, பிறருக்கு உதவ அல்லது ஊழியம் செய்ய நீங்கள் நன்கு பழக்கப்பட்டுவிட்டீர்கள் என கற்றிருக்கிறார்கள்.

ஆனால் பிள்ளைகள் மற்றும் வாலிபர் நிகழ்ச்சிகளில், பிறரை ஆசீர்வதிப்பதற்கு நீங்கள் ஒன்றைக் கற்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கற்கும் செயல் தாமே, ஊழியம் செய்ய சந்தர்ப்பங்களை அளிக்கிறது.

கானாவில் வசிக்கும் ப்ராபட் எனும் பெயருள்ள இளைஞனுக்கு, பியானோ எப்படி வாசிப்பது என கற்க, பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் இலக்கை அமைப்பது ஒரு தொடக்கம் மட்டுமே. “நான் கற்பதை பிறரும் கற்க உதவுவதும் என் இலக்கு” என ப்ராபட் கூறுகிறான்.

அவன் இன்னும் ஆசிரியராகவில்லை என்றாலும், அவன் எப்போதும் கற்பனை செய்ததை விட மிகப் பெரிதாக அவனது இலக்கு ஏற்கனவே வளர்ந்து விட்டிருக்கிறது. கூடுமிடத்தில் பியானோ வகுப்பில் கற்பவர்கள் ப்ராபட்டுடன் இப்போது 50 பேர் இருக்கின்றனர். ப்ராபட்டுக்கும் அந்த பிற 50 பேருக்கும் யார் கற்பிக்கிறார்? அலெக்சாண்டர் எம். மற்றும் கெல்வின் எம்., இருவரும் 13 வயதினர். “நாங்கள் பிறருக்கு அன்பின் செயலைக் காட்ட விரும்புகிறோம்,” கெல்வின் சொல்கிறான்.

வாரத்துக்கு மூன்று நாட்கள் இரு இளைஞர்களும் கற்க வரும் அனைவருக்கும் இலவசமான அடிப்படை பியானோ வகுப்புக்கள் கற்பிக்கின்றனர். பியானோ பாடங்களுடன் கூடுதல் ஆதாயங்கள் இருந்திருக்கின்றன. பியானோ வகுப்புகள் மூலம் சபைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பல மாணவர்கள் பின்னர் சுவிசேஷம் கற்று, ஞானஸ்நானம் பெற முடிவு செய்தனர்.

நாம் நம்மையே முன்னேற்ற முயற்சிகள் செய்யும்போது, நம்மோடு சேர பிறரை அழைத்து, நாம் பிறருக்கு ஊழியம் செய்யலாம்.

ஊழியம் செய்வதற்கு ஒரு வெல்லும் ஆலோசனை

ஒரு பிணைய ஆரம்ப வகுப்பு தலைவியாக, பிரேசில் குரிடிபாவின், சப்ரினா சிமோஸ் டியஸ் அகஸ்டோ நிகழ்ச்சியின் தனிப்பட்ட மேம்படுத்தும் தன்மைகள் தன் பிணையத்திலுள்ள பிள்ளைகளையும் இளைஞர்களையும் எவ்வாறு ஆசீர்வதிக்கிறது என கண்டிருக்கிறாள். ஆனால், ஒரு ஊழியம் செய்யும் சகோதரியாக, தன் பணியில் தனிப்பட்ட முன்னேற்றத்தைப்பற்றி அவள் கற்றதை பயன்படுத்த அநேக வழிகளையும் அவள் பார்த்திருக்கிறாள்.

சகோதரி அகஸ்டோ சொல்கிறாள், நான் ஒரு தாலந்தை விருத்தி செய்யும்போது, நான் ஊழியம் செய்யும் ஒருவரை ஆசீர்வதிக்க அந்த தாலந்தை நான் பயன்படுத்த முடியும்.

அவளுக்கு பணிக்கப்பட்ட சகோதரிகளில் ஒருவருக்கு சாக்லேட் பிஸ்கட்டுகள் எவ்வாறு செய்வதென சகோதரி அகஸ்டோ கற்பித்தாள். அந்த சகோதரி இப்போது தன் குடும்ப வருமானத்தில் சேர்க்க உதவ பிஸ்கட்டுகள் செய்து விற்கிறாள். “பல மாதங்களுக்குப்பின், நான் விற்கும்படியாக எவ்வாறு தேன் ரொட்டி செய்வதென மற்றொரு சகோதரி எனக்கு கற்பித்ததால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்,” சகோதரி அகஸ்டோ சொல்கிறாள். “நமது தாலந்துகளை விருத்தி செய்து, பகிர்ந்து கொள்வது ஒருவருக்கொருவரது வாழ்க்கையை ஆசீர்வதிக்க முடியும், ஊழியம் செய்யும் சகோதரிகளாக நமது உறவுகளை ஆழப்படுத்தும்.”

அச்சிடவும்