2021
எழுதும் காரியத்தைச் செய்யுங்கள்
ஜூலை 2021


“எழுதும் காரியத்தைச் செய்யுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக, ஜூலை 2021, 18–19.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜூலை 2021

எழுதும் காரியத்தைச் செய்யுங்கள்

வேதங்களைப் படிக்கும்போது உங்களுடைய எண்ணங்களை எழுதுவது, உண்மையில் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவலாம்.

“வேதங்களைப் படிக்க ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும், நான் தூங்கிவிடுகிறேன்!” என ஒரு ஊழியக்காரர் தன்னுடைய ஊழியத் தலைவரிடம் சொன்னார். “வேதங்கள் ஒரு தூக்க மாத்திரையைப் போன்றிருக்கிறது!”

“நீங்கள் படிக்கும்போது எப்போதாவது குறிப்புகள் எடுத்திருக்கிறீர்களா?” என அவருடைய ஊழியத் தலைவர் கேட்டார்

“இல்லை,” என ஊழியக்காரர் சொன்னார்.

“நீங்கள் படிக்கும் செயலை மட்டும் செய்யும்போது, தூக்க வயப்படுவதோ கவனம் கலைவதோ மிகவும் சுலபம்”, என்றும் “நீங்கள் எழுதும் போது இவற்றை தவிர்க்கலாம்!” என்றும் ஊழியத் தலைவர் கூறினார்

ஊழியக்காரருக்கு ஊழியத் தலைவர் சொன்ன அறிவுரை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, உங்கள் வேதப் படிப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளைத் தேடுகிறீர்கள் எனில், இதை முயற்சித்து பாருங்கள். நீங்கள் படிப்பதைக் குறித்து எழுதும் போது, அதிக ஈடுபாட்டுடனும் இன்னும் சிறப்பாகவும் படிப்பதை உணர்வீர்கள்.

மிகவும் பயனுள்ளதாக நாங்கள் கண்டறிந்த சில வழிமுறைகள் இதோ.

சகோதரர் ஸ்டீவன் லண்ட்:

படம்
ஸ்டீவன் லண்ட்

நான் படிக்கும் போது என்னுடன் காகிதத்தை வைத்திருப்பேன். படிக்கையில் பரிசுத்த ஆவி என்னைத் தூண்டும் போது, நான் அந்த அறிவுறுத்தல்களை எழுதுவேன்.

பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் குழுமத்தில் மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் (1928–2015) என்பவரிடமிருந்து எனக்கு இந்த யோசனை வந்தது, அவர் கூறியதாவது: “நீங்கள் ஆவியிலிருந்து கற்றுக்கொள்ளும் முக்கியமான விஷயங்களை பாதுகாப்பான இடத்தில் எழுதுங்கள் நீங்கள் விலைமதிப்பற்ற பதிவுகளை எழுதும்போது, இன்னும் அதிக பதிவுகள் வருவதைக் காண்பீர்கள். மேலும், நீங்கள் பெறும் அறிவு உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உதவும்” (“அறிவைப் பெறுவதற்கும் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்கான வலிமை,” என்சைன், ஜூன் 2002, 32).

அந்த வார்த்தைகள் உண்மை என்று எனக்குத் தெரியும். நான் போதனை மற்றும் பாடங்களை உருவாக்கும்போது, வேதங்களுக்கு மட்டுமல்ல, அவற்றைப் படிக்கும்போது நான் எழுதியவற்றையும் பார்க்கிறேன்.

சகோதரர் அஹ்மத் கார்பிட்:

படம்
அஹ்மத் கார்பிட்

நான் தலைப்பு வாரியாகப் படிக்க விரும்புகிறேன். நான் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வேதங்களைப் படிப்பேன், ஆனால் நான் இடையே தலைப்புகளையும் படிக்க விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, விசுவாசம் அல்லது இஸ்ரவேலின் சேகரிப்பைப்பற்றிய வேதங்களைக் கண்டுபிடிக்க நான் தலைப்பு வழிகாட்டியைப் பயன்படுத்துவேன். பிறகு நான் குறிப்புகளை மட்டும் எடுக்காமல், நான் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்தும் விதமாக, என்ன கற்றுக்கொள்கிறேன் என்பதையும் எழுதுவேன். இதைச் செய்யும்போது நான் எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறேன் என்று எப்போதும் வியப்படைகிறேன். மனப்பாடம் செய்ய சில வேதங்களையும் தேர்வு செய்கிறேன்.

சகோதரர் பிராட்லி வில்காக்ஸ்:

படம்
பிராட்லி வில்காக்ஸ்

நான் படிப்பிற்கென்று ஒரு குறிப்பேட்டை வைத்திருப்பேன், அதில் வேதங்களை எனது சொந்த வார்த்தைகளில் எழுதுவேன். உதாரணமாக, “ஜென்ம சுபாவ மனிதன் தேவனுக்கு விரோதி” ( மோசியா 3:19) “ஏனென்றால் பெருமைமிக்க மற்றும் வருத்தப்படாத மனிதன் தேவனுக்குவிரோதியாகத் தெரிவு செய்கிறான், ஆனால் தேவன் அவனுக்கு விரோதி அல்ல. தேவன் அவருடைய சிறந்த நண்பர்” என்று எழுதுவேன்.

நான் கேள்விகளையும் எழுதுவேன். அவை நான் படிப்பதற்கு முன்பு நினைக்கும் கேள்விகளாக இருக்கலாம் அல்லது அவை நான் படித்தவற்றால் தூண்டப்படும் கேள்விகளாக இருக்கலாம். எந்த வழியிலும், அது என்னை கவனம் செலுத்த வைக்கும்.

உங்கள் எண்ணங்களை எழுதும் வல்லமை

நம் தலைமையில் நாம் ஒவ்வொருவரும் வேதங்களை வித்தியாசமாக படிக்கிறோம், ஆனால் நாம் அனைவரும் எழுதுவது போலவே எழுதுகிறோம்!

எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை உள்வாங்க வாசிப்பு நமக்கு உதவுகிறது. அது முக்கியம். நாம் பேசும்போது அல்லது எழுதும்போது, எண்ணங்களையும் உணர்வுகளையும் உள்ளிருந்து கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறோம். நற்செய்தி உண்மைகளை சிறப்புடன் தனிப்பட்டதாக்க, இது உதவுகிறது என்று நினைக்கிறோம்.

சடங்கு கூட்டத்தில் சொற்பொழிவு கொடுக்கும்படி கேட்கப்பட்டபோது ஒரு இளைஞர் இந்த உண்மையை தனக்காக கண்டுபிடித்தான். பலர் சொற்பொழிவாற்றுவதை அவர் கேள்விப்பட்டார், ஆனால் விவரங்களை நினைவில் கொள்ள முடியவில்லை. இந்த நேரம் வித்தியாசமாக இருந்தது. அவர் தனது சொந்த சொற்பொழிவுக்கான மேலோட்ட குறிப்புகளை எழுதியபோது, அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சொற்பொழிவை வழங்க அவருக்கு உதவியது மட்டுமல்லாமல், அதை அவர் நீண்ட காலமாக நினைவில் வைத்திருந்தார்.

உங்கள் வேத படிப்பிலும் இதே நடக்கலாம். உங்கள் வேதங்களைத் திறக்கும்போது நீங்கள் தூங்குகிறீர்கள் என்றால், எழுந்திருக்க வேண்டிய நேரம் இது. பென்சில், பேனா, தொலைபேசி அல்லது கணினியை எடுத்து எழுத தொடங்குங்கள். இது ஏற்படுத்தும் வித்தியாசத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்!

அச்சிடவும்