புதிய ஏற்பாடு 2023
ஜூலை 10–16. அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–9: “நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?”


“ஜூலை 10–16. அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–9: ‘நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“ஜூலை 10–16. அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–9” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

தரையில் விழுந்த பவுல்

தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் மனமாற்றம்–மைக்கல் ஏஞ்சலோ மெர்சி டா கரவாகியோ

ஜூலை 10–16

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–9

“நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?”

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–9 வாசித்து தொடங்கவும். உங்கள் சொந்த படிப்பில் பிற கொள்கைகளைக் கண்டாலும் இக்குறிப்பில் உள்ள ஆலோசனைகள் இந்த அதிகாரத்திலுள்ள முக்கிய கொள்கைகள் சிலவற்றை அடையாளம் காண உங்களுக்கு உதவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

மனமாற்றத்துக்குப் பொருந்தாத நபர் போல ஒருவர் இருப்பாரானால், ஒருவேளை அது கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதில் புகழ் பெற்ற பரிசேயனான சவுலே. ஆகவே அனனியா என்ற பெயருள்ள சீஷனிடம் கர்த்தர் சவுலைத் தேடி ஒரு ஆசீர்வாதம் கொடுக்கச் சொன்னபோது, நாம் புரிந்துகொள்ளும் விதமாக அனனியா தயங்கினான். அவன் சொன்னான், “ஆண்டவரே, இந்த மனுஷன் உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக் குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்”(அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13). ஆனால் கர்த்தர் சவுலின் இருதயத்தையும் அவனது திறமையையும் அறிந்தார், அவர் சவுலுக்காக மனதில் ஒரு ஊழியத்தை வைத்திருந்தார்: “அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும், என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15). ஆகவே அனனியா கீழ்ப்படிந்தான், இந்த முன்னாள் பொல்லாங்கனை அவன் கண்டபோது, அவனை “சகோதரனாகிய பவுலே” என அழைத்தான் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:17). சவுல் முற்றிலுமாக மாறக்கூடுமானால், அவ்வளவு எளிதாக அனனியா அவனை வரவேற்கக்கூடுமானால், நாம் உட்பட யாரையும் மாறக்கூடியவர் இல்லை என நாம் கருத முடியுமா?

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்புக்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–8

என் இருதயம் “தேவனின் பார்வையில் சரியாக” இருக்க வேண்டும்.

ஒரு வளர்கிற சபை என்பது இராஜ்யத்தில் சேவை செய்ய சீஷர்களின் தேவை அதிகரிப்பதாகும். அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1–5ன் படி, அவர்களுடன் சேவை செய்பவர்களிடம் பன்னிரு அப்போஸ்தலர்கள் என்ன குணங்களைத் தேடினர்? அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–8 நீங்கள் வாசிக்கும்போது, இந்த குணங்களும் பிறவும் ஸ்தேவான் மற்றும் பிலிப்பு போன்றவர்களிடம் எப்படி காட்டப்பட்டதென கவனிக்கவும். சீமோனிடம் என்ன குறைவாயிருந்தது, மாற சித்தமாயிருப்பதைப்பற்றி நாம் அவனிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்?

உங்கள் இருதயம் “தேவனின் பார்வையில் சரியாயிருக்கிறது” என்பதை உறுதிசெய்ய மாற வேண்டும் என எதையாவது உணர்கிறீர்களா? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:21–22). நீங்கள் தேவனுக்கு சேவை செய்யும்போது இந்த மாற்றத்தை செய்வது உங்களை எவ்வாறு ஆசீர்வதிக்க முடியும்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–7

பரிசுத்த ஆவியை எதிர்ப்பது இரட்சகரையும் அவரது ஊழியக்காரர்களையும் மறுதலிக்க வழிநடத்தும்.

யூத தலைவர்கள் மேசியாவின் வருகைக்கு ஜனங்களை தயார்படுத்துவதற்கு பொறுப்பானவர்கள். இருந்தும் அவர்கள் மேசியாவை அடையாளம் காணத் தவறி, அவரை நிராகரித்தனர். இது எப்படி நடந்தது? ஸ்தேவானின் வார்த்தைகளில் பதிலின் ஒரு பகுதியைக் காண முடியும்: “நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51). பரிசுத்த ஆவியை எதிர்ப்பது என்றால் என்ன என நினைக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியை எதிர்ப்பது இரட்சகரையும் அவரது ஊழியக்காரர்களையும் மறுதலிப்பதற்கு ஏன் வழிநடத்துகிறது?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–7 நீங்கள் வாசிக்கும்போது, ஸ்தேவான் யூதர்களுக்கு போதித்த பிற செய்திகளைத் தேடவும். அவன் எந்த குணங்களுக்கு எதிராக எச்சரிக்கிறான்? அதுபோன்ற எந்த குணங்களையாவது உங்களில் கண்டுபிடித்திருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியை எதிர்ப்பதன் விளைவுகளைப்பற்றி ஸ்தேவானின் வார்த்தைகள் என்ன போதிக்கின்றன? பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி அதிக உணர்வுடனும் பதிலளித்தும் இருக்க முடியும்?

“The Martyrdom of Stephen” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:26–39

இயேசு கிறிஸ்துவிடம் பிறரை வழிநடத்த பரிசுத்த ஆவி எனக்கு உதவுவார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:26–39லிலுள்ள விவரத்திலிருந்து, சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதைப்பற்றி என்ன கற்கிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் பிலிப்புக்கு எப்படி உதவினார்? பிறருடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வது எப்படி வழிகாட்டியாயிருப்பது போல் இருக்கிறது? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:31 பார்க்கவும்).

மூப்பர் உலிசஸ் சோயர்ஸ் கூறினார், இந்த விவரம் “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கற்றுக்கொள்ளவும் ஒருவருக்கொருவர் போதிக்கவும் நம் அனைவருக்குமுள்ள தெய்வீக ஆணையின், ஒரு நினைவூட்டலாக இருக்கிறது. … நாம் சில சமயங்களில் எத்தியோப்பியனைப் போல் இருக்கிறோம்—நமக்கு உண்மையுள்ள மற்றும் உணர்த்தப்பட்ட ஆசிரியரின் உதவி தேவை; நாம் சில சமயங்களில் பிலிப்பைப் போல இருக்கிறோம்—மற்றவர்களுக்கு அவர்களின் மனமாற்றத்தில் கற்பித்து பலப்படுத்த வேண்டும்” (“How Can I Understand?,” Liahona, May 2019, 6). மூப்பர் சோயர்ஸின் மீதி செய்தியை படித்து, சுவிசேஷத்தை சிறப்பாகக் கற்றுக்கொள்பவராகவும், போதிப்பவராகவும் இருக்க பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எப்படி உதவுவார் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9

கர்த்தரின் சித்தத்துக்கு என்னை ஒப்புவிக்கும்போது, அவரது கரங்களில் நான் ஒரு கருவியாக இருக்க முடியும்.

சவுலின் மனமாற்றம் திடீரென நடந்ததாக தோன்றுகிறது, கிறிஸ்தவர்களை சிறைபிடிப்பதிலிருந்து அவன் நேராக ஜெபாலயங்களில் கிறிஸ்துவைப்பற்றி பிரசங்கிக்க சென்றான். நீங்கள் அவனது கதையை வாசிக்கும்போது, அவன் மாற ஏன் அவ்வளவு விருப்பமாயிருந்தான் என சிந்திக்கவும். (தன் மனமாற்றத்தைப்பற்றி சவுலின் சொந்த விவரிப்பை வாசிக்க, அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:1–16 மற்றும்26:9–18 பார்க்கவும். இந்த விவரங்களில் சவுல் பவுல் எனும் பெயரால் அழைக்கப்படுகிறான் என்பதைக் கவனிக்கவும் [அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:9 பார்க்கவும்].)

சவுலின் அனுபவம் வழக்கத்துக்கு மாறானது என்பது உண்மையாக இருக்கும்போது, அநேக ஜனங்களுக்கு, மனமாற்றம் ஒரு நீண்ட நடைமுறை, மனமாற்றத்தைப்பற்றி சவுலிடமிருந்து எதையாவது நீங்கள் கற்றுக்கொள்ள முடியுமா? அனனியாவும் பிற சீஷர்களும் பவுலின் மனமாற்றத்தைப்பற்றி பிரதிகிரியை ஆற்றிய விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் இந்த பாடங்களைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்வீர்கள்? சவுல் செய்ததுபோல, “நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?” என ஜெபத்தில் கேட்டு நீங்கள் தொடங்கலாம்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36–42 நீங்கள் வாசிக்கும்போது, தபீத்தாள் எவ்வாறு தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருந்தாள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அவளுடைய உதாரணத்தில் உங்களை எது உணர்த்தியது?

Dieter F. Uchtdorf, “Waiting on the Road to Damascus,Ensign or Liahona, May 2011, 70–77; “The Road to Damascus” (video, ChurchofJesusChrist.org)ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8; 7:51–60அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8 மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51–60லுள்ள ஸ்தேவானைப்பற்றிய விவரங்களை லூக்கா 23:1–46லிலுள்ள இரட்சகரைப்பற்றிய விவரங்களுடன் ஒப்பிடவும். இரட்சகரின் எடுத்துக்காட்டை ஸ்தேவான் எவ்வாறு பின்பற்றினான்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51–60.அவன் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது பரிசுத்த ஆவி ஸ்தேவானை எப்படி ஆசீர்வதித்தது? கடினமான நேரங்களில் பரிசுத்த ஆவியிடமிருந்து நீங்கள் எப்போது பெலன் பெற்றிருக்கிறீர்கள்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:5.முள் என்பது மிருகங்களை விரட்ட பயன்படுத்தப்படுகிற கூர்மையான ஈட்டி. குத்தப்படும்போது வழக்கமாக மிருகங்கள் திரும்ப உதைக்கும், அது பிராணியின் மாம்சத்தில் மேலும் ஆழமாக ஈட்டியை செல்ல வைக்கும். இந்த ஒப்புமை சில சமயங்களில் நமக்கு எப்படி பொருந்தும்? கர்த்தரிடமிருந்து திருத்தத்தை சிறப்பாக ஏற்றுக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?

தபீத்தாளை பேதுரு மரித்தோரிலிருந்து எழுப்புதல்

தபீத்தாள் எழுந்திருத்தல்–சாண்டி பிரெக்கிள்டன் காகன்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:32–43.அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:32–43லிலுள்ள கதைகளின் படங்களை குடும்ப அங்கத்தினர்கள் வரைய அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த கதைகளிலிருந்து உண்மையான சீஷத்துவம்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? தபீத்தாள் போல “மிகுதியான நற்கிரியைகள்,” நிறைந்த ஒருவர், கர்த்தரை நம்ப பிறருக்கு உதவ முடியும்? ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36; “Chapter 60: Peter Brings Tabitha Back to Life” (in New Testament Stories, 156–57, or the corresponding video on ChurchofJesusChrist.org பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I’ll Go Where You Want Me to Go,” Hymns, no. 270.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

வேதங்களை உங்கள் வாழ்க்கைக்கு ஒப்பிடவும். நீங்கள் வாசிக்கும்போது, வேதங்களிலுள்ள கதைகளும் போதனைகளும் உங்கள் வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36–39ல் தபீத்தாள் செய்தது போல் மற்றவர்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன ?

ஸ்தேவான் மரிக்கும்படியாக கல்லெறியப்படுதல்

“அப்பொழுது தேவனை அழைத்து, கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில் அவனைக் கல்லெறிந்தார்கள்” (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59 [அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59, அடிக்குறிப்பு c ல்]).