“டிசம்பர் 18–24. கிறிஸ்துமஸ்: ‘மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“டிசம்பர் 18–24. கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
டிசம்பர் 18–24
கிறிஸ்துமஸ்
“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”
இரட்சகரின் பிறப்பு மற்றும் ஊழியம்பற்றி சிந்திப்பது, கிறிஸ்துமஸ் பருவத்தில் அமைதி மற்றும் புனிதத்தன்மையை எவ்வாறு கொண்டு வர உதவும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்
ஒரு குழந்தையின் பிறப்பு ஏன் அவ்வளவு மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வருகிறது? ஒருவேளை ஒரு புதிய குழந்தை நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். அந்தக் குழந்தைக்கு வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும், அவன் அல்லது அவள் என்ன அற்புதமான காரியங்களை சாதிக்கலாம் என நம்மை சிந்திக்க அழைக்கிற, புத்தம் புதிய சாத்தியங்கள் நிறைந்த புதிய வாழ்க்கையில் ஏதோவொன்று இருக்கிறது. தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விட இது ஒருபோதும் உண்மையாக இருந்ததில்லை. ஒரு குழந்தை மீது அதிக நம்பிக்கை ஒருபோதும் வைக்கப்பட்டிருக்கவில்லை, இவ்வளவு வாக்குத்தத்தோடு ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்ததில்லை.
ஒரு தொழுவத்தில் புதிதாக பிறந்த குழந்தையை தேட மேய்ப்பர்களை தூதன் அழைத்தபோது, அப்பிள்ளையைப்பற்றி அவர்களுக்கு அவன் ஒரு செய்தியும் கொடுத்தான். ஒரு பரிசுத்த ஊழியத்தை நிறைவேற்ற இந்த குழந்தை பூமிக்கு வந்திருக்கிறது என்ற, அது ஒரு நம்பிக்கையின் செய்தி. மேய்ப்பர்கள் தங்கள் செய்தியை சொன்னார்கள் “மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் … பிரசித்தம் பண்ணினார்கள். ஆனால் மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள்” (லூக்கா 2:17–19). ஒருவேளை இந்தக் கிறிஸ்துமஸில் மரியாளின் எடுத்துக்காட்டை பின்பற்றுவது நலமாயிருக்கும்: இந்த ஆண்டில் இரட்சகரைப்பற்றி நீங்கள் கற்றவைகளை உங்கள் இருதயத்தில் சிந்திப்பது. நீங்கள் வாசித்த விவரங்களில் அவர் தன் மீட்பின் ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்றினார்? மிக முக்கியமாக அவரது ஊழியம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியிருக்கிறது? அப்போது, மேய்ப்பர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு நீங்கள் உத்வேகம் பெறலாம்: இயேசு கிறிஸ்து உங்களுக்காகச் செய்ததை நீங்கள் எப்படி “தூர தேசத்தில் தெரியப்படுத்துவீர்கள்”?
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
மத்தேயு 1:18–25; 2:1–12; லூக்கா 1:26–38; 2:1–20
பூமியில் நம்மிடையே பிறக்க இயேசு கிறிஸ்து மனமிறங்கினார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் கதையைப்பற்றி நீங்கள் முன்பே அநேக நேரங்கள் வாசித்திருந்தாலும் கேட்டிருந்தாலும், மனதில் இந்த எண்ணத்துடன் இம்முறை படிக்கவும்: “இயேசு கிறிஸ்து உலகில் எவ்வாறு வந்தார் என்ற கொண்டாட்டம் மட்டுமே கிறிஸ்துமஸ் அல்ல, ஆனால் அவர் யார் என அறிவதும்கூட—நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து—மற்றும் ஏன் அவர் வந்தார் என அறிவதும்தான்” (Craig C. Christensen, “The Fulness of the Story of Christmas” [First Presidency Christmas devotional, Dec. 4, 2016], broadcasts.ChurchofJesusChrist.org).
அவர் பிறப்பதற்கு முன் இயேசு கிறிஸ்து யாராக இருந்தார் என்பதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? (உதாரணமாக, யோவான் 17:5; மோசியா 3:5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:13–14, 20–24; மோசே 4:2 பார்க்கவும்). அவரது பிறப்பைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் உணர்கிற விதத்தை இந்த அறிவு எவ்வாறு பாதிக்கிறது?
இயேசு கிறிஸ்து பூமிக்கு ஏன் வந்தார் என்பதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? (உதாரணமாக, லூக்கா 4:16–21; யோவான் 3:16–17; 3 நேபி 27:13–16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:20–28 பார்க்கவும்). இரட்சகரைப்பற்றி நீங்கள் உணரும் விதத்தை இந்த அறிவு எப்படி பாதிக்கிறது? நீங்கள் வாழும் விதத்தை இது எப்படி பாதிக்கிறது?
2 கொரிந்தியர் 8:9; எபிரெயர் 2:7–18; 1 நேபி 11:13–33; ஆல்மா 7:10–13; “The Nativity” (video, ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்).
1 கொரிந்தியர் 15:21–26; கொலொசேயர் 1:12–22; 1 பேதுரு 2:21–25
இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தை நிறைவுசெய்து, நான் நித்திய ஜீவனை சுதந்தரிக்க சாத்தியமாக்கினார்.
கிறிஸ்து பிறப்பின் கதை அற்புதமான நிகழ்வுகளால் சூழப்பட்டாலும், அவரது வாழ்வின் பின்பகுதியில், அவர் சாதித்த மிகுதியான பணி இல்லையானால், அவரது பிறப்பும் மற்றொரு பிறப்பாக இருந்திருக்கும். தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி சொல்வது போல, “கெத்செமனே மற்றும் கல்வாரியின் மீட்பும், உயிர்த்தெழுலின் ஜெயமும் இல்லையானால், பெத்தலகேமின் இயேசு குழந்தை, இன்னொரு குழந்தையாக இருந்திருக்கும்” (“The Wondrous and True Story of Christmas,” Ensign, Dec. 2000, 5).
இரட்சகரின் தெய்வீக ஊழியம் மற்றும் பிறரிடம் அவரது வல்லமையான அன்பின் ஆதாரம் புதிய ஏற்பாடு முழுவதிலும் காணப்படுகிறது. எந்த பாகங்கள் அல்லது விவரங்கள் உங்கள் மனதுக்கு வருகிறது. இந்த ஆதாரத்தை அல்லது உங்கள் படிப்பு இதழை நீங்கள் பார்த்து நீங்கள் பதிவு செய்த சில எண்ணங்களை பரிசீலிக்கலாம். நீங்கள் 1 கொரிந்தியர் 15:21–26; கொலொசேயர் 1:12–22; 1 பேதுரு 2:21–25 வாசித்து இரட்சகரும் அவரது பணியும் எவ்வாறு உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதித்திருக்கிறது என சிந்திக்கவும். உங்கள் வாழ்க்கையில் எதை மாற்ற வேண்டும் என உணர்கிறீர்கள்? இரட்சகரின் வல்லமையை நீங்கள் எப்படி ஈர்ப்பீர்கள்?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
மத்தேயு 1:18–25; 2:1–12; லூக்கா 1:26–38; 2:1–20உங்கள் குடும்பத்துடன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நீங்கள் எப்படி கொண்டாடலாம்? இங்கே சில ஆலோசனைகள் அல்லது உங்கள் சொந்தமாக உருவாக்கலாம்:
-
கிறிஸ்து பிறப்பு கதையை வாசிக்கவும் அல்லது நடிக்கவும்.
-
“The Christ Child” (ChurchofJesusChrist.org) காணொலி பார்க்கவும்.
-
சுவிசேஷ நூலக தொகுப்புகளில் “Jesus Christ” விசேஷமாக “His Birth (Christmas)” என தலைப்பிடப்பட்ட பாகத்தில் சில ஆதாரங்களைத் தேடவும்.
-
பிரதான தலைமையின் கிறிஸ்துமஸ் ஆராதனையைப் பார்க்கவும் (broadcasts.ChurchofJesusChrist.org).
-
ஒன்றுசேர்ந்து கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடவும் அல்லது அக்கம்பக்கத்தார் அல்லது நண்பர்களை பாட தேர்ந்தெடுக்கவும்.(பாடல்கள் எண் 201–14 பார்க்கவும்).
-
ஒரு சேவையின் செயல் செய்யவும்.
-
இயேசு கிறிஸ்துவை நினைவூட்ட அவர்கள் செய்யக்கூடிய ஆபரணங்கள் அல்லது அலங்காரங்களைப்பற்றி அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுக்கக்கூடியவற்றை கிறிஸ்து பிறப்பு கதையில் தேடுமாறு குடும்ப அங்கத்தினர்களிடம் கேட்கவும்.
-
-
1 கொரிந்தியர் 15:21–26; கொலொசேயர் 1:12–22; 1 பேதுரு 2:21–25இயேசு கிறிஸ்து பிறந்ததற்காக நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? அவர் நமக்கு என்ன பரிசு கொடுத்திருக்கிறார்? அவருக்கு எவ்வாறு நாம் நன்றி தெரிவிக்க முடியும்? “He Sent His Son” போன்று உங்கள் குடும்பத்தினர் அவருடைய ஊழியத்தைப்பற்றி கற்பிக்கும் ஒரு பாடலைப் பாடலாம். (Children’s Songbook, 34–35).
-
“ஜீவிக்கும் கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சியங்கள்”கிறிஸ்துமஸ் நேரத்தில் உங்கள் குடும்பத்தினர் இரட்சகரைப்பற்றி நினைக்க உதவ நீங்கள் விரும்பினால், ஒருவேளை நீங்கள் ஒன்றுசேர்ந்து “The Living Christ: The Testimony of the Apostles” (ChurchofJesusChrist.org) வாசிக்கவும் படிக்கவும் சிறிது நேரம் செலவிடலாம். “ஜீவிக்கும் கிறிஸ்துவிலிருந்து” பாகங்களை நீங்கள் மனப்பாடம் செய்யலாம் அல்லது அதிலுள்ள ஆதரவான வாசகங்களை புதிய ஏற்பாட்டில் இரட்சகரின் வாழ்க்கையைப்பற்றிய விவரிப்புகளை தேடவும். இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சொந்த சாட்சியை அவன் அல்லது அவள் எழுத குடும்பத்தின் ஒவ்வொருவரையும் அழைத்து, தூண்டப்பட்டால் குடும்ப அங்கத்தினர்களுக்கு அதை வாசிக்கவும்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Once within a Lowly Stable,” Children’s Songbook,41.