“பெப்ருவரி 28–மார்ச் 6. ஆதியாகமம் 28–33: ‘மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“பெப்ருவரி 28–மார்ச் 6. ஆதியாகமம் 28–33” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
பெப்ருவரி 28–மார்ச் 6
ஆதியாகமம் 28–33
“மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்”
ஆதியாகமம் 28–33, நீங்கள் வாசிக்கும்போது, யாக்கோபு மற்றும் அவனுடைய குடும்பத்தினரின் உதாரணங்களிலிருந்து, நீங்கள் கற்பதை சிந்திக்கவும். நீங்கள் பெறும் எந்த எண்ணத்தையும் எழுதுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
யாக்கோபு தீர்க்கதரிசி பெற்ற இரண்டு ஆவிக்குரிய அனுபவங்களைப்பற்றி ஆதியாகமத்தின் அதிகாரங்கள் 28 மற்றும்32 சொல்கின்றன. இரண்டும் வனாந்தரத்தில் நடந்தன, ஆனால் மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகளின் கீழ் நடந்தன. முதல் அனுபவத்தில், யாக்கோபு ஒரு மனைவியைக் கண்டுபிடிப்பதற்காக தனது தாயின் தாயகத்திற்குச் சென்று கொண்டிருந்தான், வழியில், ஒரு கல் தலையணையில் இரவைக் கழித்தான். அத்தகைய பாழடைந்த இடத்தில் கர்த்தரைக் கண்டுபிடிப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான், ஆனால் தேவன் வாழ்க்கையை மாற்றும் சொப்பனத்தில் யாக்கோபுக்கு தன்னை தேவன் வெளிப்படுத்தினார், யாக்கோபு அறிவித்தான், “மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன்”(ஆதியாகமம் 28:16). பல வருடங்கள் கழித்து, யாக்கோபு மீண்டும் வனாந்தரத்தில் இருந்தான். இந்த நேரத்தில், அவன் கானானுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தான், ஆபத்தான தனது சகோதரன் ஏசாவுடன் மீண்டும் ஒரு பயங்கரமான சந்திப்பை எதிர்கொண்டான். ஆனால், அவனுக்கு ஒரு ஆசீர்வாதம் தேவைப்படும்போது, வனாந்தரத்தில் கூட கர்த்தரைத் தேட முடியும் என்பதை யாக்கோபு அறிந்திருந்தான் (ஆதியாகமம் 32 பார்க்கவும்).
தேவனிடமிருந்து ஆசீர்வாதம் தேடும் உங்கள் சொந்த வனாந்தரத்தில் நீங்கள் இருக்கலாம். உங்கள் வனாந்தரம் யாக்கோபு பெற்ற கடினமான குடும்ப உறவாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் தேவனிடமிருந்து தொலைவில் இருப்பதை உணரலாம் அல்லது உங்களுக்கு ஒரு ஆசீர்வாதம் தேவை என்று நினைக்கலாம். சில நேரங்களில் ஆசீர்வாதம் எதிர்பாராத விதமாக வரும்; மற்ற நேரங்களில் அது ஒரு போராட்டத்திற்கு முன்னால் வரலாம். உங்கள் தேவை என்னவாக இருந்தாலும், உங்கள் வனாந்தரத்தில் கூட, “கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்” என்பதை நீங்கள் கண்டறியலாம்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
ஆலயத்தில் ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் எனக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.
ஒரு மனைவியைக் கண்டுபிடிப்பதற்காக ஆரானுக்குச் செல்லும் வழியில், யாக்கோபு பூமியிலிருந்து வானத்திற்கு ஒரு ஏணியைக் கனவில் கண்டான், அதற்கு மேல் தேவன் நின்றிருந்தார். கனவில், ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு ஆகியோருடன் அவர் செய்த அதே உடன்படிக்கைகளை தேவன் யாக்கோபுடன் புதுப்பித்தார் (ஆதியாகமம் 28:10–17 பார்க்கவும்; ஆதியாகமம் 12:2–3; 26:1–4 ஐயும் பார்க்கவும்). ஏணி எதைக் குறிக்கலாம் என்பது குறித்த இந்த எண்ணத்தை தலைவர் மரியன் ஜி. ரோம்னி பகிர்ந்து கொண்டார்: “கர்த்தருடன் அவன் செய்த உடன்படிக்கைகள், பரலோகத்திற்குள் பிரவேசித்து கர்த்தருடன் கூட்டுறவு கொள்ள அவனுக்கு தகுதியளிக்கும் ஆசீர்வாதங்களாகிய, வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, ஏணியில் படிகள் உள்ளன, தானே அவற்றில் ஏற வேண்டும் என்பதை யாக்கோபு உணர்ந்தான், …- யாக்கோபுக்கு பெத்தேல் இருந்ததைப் போலவே ஆலயங்கள் நமக்கு உள்ளன” (“Temples—The Gates to Heaven,” Ensign, Mar. 1971, 16).
ஆதியாகமம் 28:10–22லுள்ள எந்த பிற வார்த்தைகளும் சொற்றொடர்களும் யாக்கோபுவின் அனுபவத்துக்கும் ஆலய ஆசீர்வாதங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை உங்களுக்கு ஆலோசனையளிக்கின்றன? இந்த வசனங்களைப் படிக்கும்போது, நீங்கள் செய்த உடன்படிக்கைகளைப்பற்றி சிந்தியுங்கள்; உங்களுக்கு என்ன எண்ணங்கள் வருகின்றன?
ஆதியாகமம் 29:1–18 நீங்கள் வாசிக்கும்போது, பெத்தேலில் யாக்கோபுடன் தேவன் புதுப்பித்த உடன்படிக்கைக்கு ராகேலுடனான யாக்கோபின் திருமணம் எவ்வாறு முக்கியமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள் (“தேவனுடைய வீடு”; ஆதியாகமம் 28:10–19 பார்க்கவும்). ஆதியாகமம் 29–33ல் யாக்கோபின் வாழ்க்கையைப்பற்றி நீங்கள் தொடர்ந்து வாசிக்கும்போது இந்த அனுபவத்தை மனதில் கொள்ளுங்கள். கர்த்தருடைய வீடு உங்களை எவ்வாறு தேவனிடம் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது?
Yoon Hwan Choi, “Don’t Look Around, Look Up! ஐயும் பார்க்கவும்” Liahona, May 2017, 90–92.
என்னுடைய சோதனைகளில் கர்த்தர் என்னை நினைவு கூர்கிறார்.
ராகேலும் லேயாளும் நம்முடைய காலத்திலிருந்து வேறுபட்ட ஒரு காலத்திலும் கலாச்சாரத்திலும் வாழ்ந்திருந்தாலும், அவர்களிடம் இருந்த சில உணர்வுகளை நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். ஆதியாகமம் 29:31–35 மற்றும் 30:1–24 நீங்கள் வாசிக்கும்போது, ராகேலுக்கும் லேயாளுக்கும் தேவனின் இரக்கத்தை விவரிக்கிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடவும். தேவன் “[உங்கள்] உபத்திரவத்தைப் பார்த்து” உங்களை எவ்வாறு “நினைவுகூர்ந்தார்” என்பதை சிந்திக்கவும் (ஆதியாகமம் 29:32; 30:22).
தேவன் நமக்குச் செவிகொடுத்தாலும், அவருடைய ஞானத்தில் நாம் கேட்பதை அவர் எப்போதும் நமக்குத் தருவதில்லை என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். பரலோக பிதா நமக்குப் பதிலளிக்கிற பல்வேறு வழிகளைப்பற்றி கற்றுக்கொள்ள “Answers to Prayer” (Liahona, May 2019, 11–14) என்ற மூப்பர் புரூக் பி. ஹேல்ஸின் செய்தியைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளவும்.
இந்த கதையின் கலாச்சார பின்னணியைப்பற்றி மேலும் அறிய Old Testament Student Manual: Genesis–2 சாமுவேல் (2003), 86–88 பார்க்கவும்.
நமது குடும்பங்களில் உள்ள முரண்பாடுகளை சமாளிக்க இரட்சகர் நமக்கு உதவ முடியும்.
யாக்கோபு கானானுக்குத் திரும்பியபோது, ஏசா அவனை எப்படி வரவேற்பான் என்று அவன் “மிகவும் பயந்து வியாகுலப்பட்டான்” (ஆதியாகமம் 32:7). {ஆதியாகமம் 32–33ல் ஏசாவுடனான யாக்கோபுவின் சந்திப்பு மற்றும் அதற்கு வழிவகுக்கும் அவனது உணர்வுகளைப்பற்றி, நீங்கள் வாசிக்கும்போது, ஒருவேளை குணமடைய வேண்டிய, உங்கள் சொந்த குடும்ப உறவுகளை நீங்கள் சிந்திக்கலாம் - . இந்த கதை யாரையாவது அணுக உங்களைத் தூண்டக்கூடும். இது போன்ற கேள்விகள் உங்கள் வாசிப்பை வழிநடத்த உதவும்:
-
ஏசாவை சந்திக்க யாக்கோபு எவ்வாறு ஆயத்தமானான்?
-
ஆதியாகமம் 32:9–12ல் காணப்படுகிற யாக்கோபின் ஜெபத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரிகிறது?
-
ஏசாவின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் மன்னிப்பைப்பற்றி என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?
-
குடும்ப உறவுகளை குணப்படுத்த இரட்சகர் எவ்வாறு உதவ முடியும்?
லூக்கா 15:11–32; Jeffrey R. Holland, “The Ministry of Reconciliation,” Liahona, Nov. 2018, 77–79 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
ஆதியாகமம் 28–33.இந்த அதிகாரங்களிலிருந்து நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவ “Jacob and His Family” (in Old Testament Stories) பயன்படுத்தவும். குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொரு படத்திலும் இடைநிறுத்தப்பட்டு, திருமணத்தின் முக்கியத்துவம், உடன்படிக்கைகள், வேலை மற்றும் மன்னிப்பைப்பற்றி என்ன கற்பிக்கப்பட்டிருக்கிறது என அடையாளங்காணலாம்.
-
ஆதியாகமம் 28:10–22.நமது உடன்படிக்கைகள் ஏணியைப் போன்றவை என்பதைப்பற்றி பேச நீங்கள் ஒரு ஏணியை (அல்லது ஏணியின் படம்) பயன்படுத்தலாம். நாம் என்ன உடன்படிக்கைகளை செய்துள்ளோம், அவை எவ்வாறு நம்மை தேவனிடம் நெருக்கமாக கொண்டு வருகின்றன? ஆதியாகமம் 28:10–22ல் விவரிக்கப்பட்டுள்ள குடும்ப அங்கத்தினர்கள் யாக்கோபின் கனவை வரைவதை ரசிக்கலாம்.
“Nearer, My God, to Thee” (Hymns, no. 100) என்ற பாடல் யாக்கோபுவின் சொப்பனத்தால் உணர்த்தப்பட்டது. உங்கள் குடும்பத்தினர் இந்த பாடலைப் பாடி ஒவ்வொரு வார்த்தையும் என்ன கற்பிக்கிறது என்பதைப்பற்றி கலந்துரையாட முடியும்.
-
ஆதியாகமம் 32:24–32.போராட விரும்பும் குடும்ப அங்கத்தினர்கள் உங்களிடம் இருக்கலாம். கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதங்களை நாடுவதை விவரிக்க “போராட்டம்” ஏன் ஒரு சிறந்த வழியாகும்? “தேவனுக்கு முன்பாக போரிடுவது” என்றால் என்ன என்பதைப்பற்றி ஏனோஸ் 1:1–5; ஆல்மா 8:9–10 எதை ஆலோசனையளிக்கிறது?
-
ஆதியாகமம் 33:1–12.பல வருட கடினமான உணர்வுகளுக்குப் பிறகு, யாக்கோபும் ஏசாவும் மீண்டும் இணைந்தனர். யாக்கோபும் ஏசாவும் இன்று நம்முடன் பேச முடிந்தால், நமது குடும்பத்தில் சர்ச்சை இருக்கும்போது நமக்கு உதவ அவர்கள் என்ன சொல்லக்கூடும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Dearest Children, God Is Near You,” Hymns, no. 96.