“மார்ச் 7–13. ஆதியாகமம் 37–41: ‘கர்த்தர் யோசேப்போடே இருந்தார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022(2021)
“மார்ச் 7–13. அப்போஸ்தலருடைய நடபடிகள் 37–41” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
மார்ச் 7–13
ஆதியாகமம் 37–41
“கர்த்தர் யோசேப்போடே இருந்தார்”
நீங்கள் ஆதியாகமம் 37–41 வாசிக்கும்போது, வேத பாகங்கள் உங்கள் வாழ்க்கையுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் காண பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ ஜெபம் செய்யுங்கள். நீங்கள் பெறும் எந்த உள்ளுணர்வுகளையும் பதிவுசெய்யவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
சில நேரங்களில் நல்லவர்களுக்கு கெட்ட காரியங்கள் நடக்கும். வாழ்க்கை அந்த பாடத்தை தெளிவாக நமக்குக் கற்பிக்கிறது, அதேபோல் யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பின் வாழ்க்கையுமிருந்தது. தேவன் தனது பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையின் வாரிசாக அவன் இருந்தான், ஆனால் அவன் தனது சகோதரர்களால் வெறுக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்டான். போத்திபாரின் மனைவியால் அணுகப்பட்டபோது, அவன் தனது உத்தமத்தை சமரசம் செய்ய மறுத்து விட்டாான், எனவே சிறையில் தள்ளப்பட்டான். அவன் அதிக உண்மையுள்ளவனாக இருக்கும்போது, அதிக கஷ்டங்களை எதிர்கொண்டான் என்று தோன்றியது. ஆனால் இந்த துன்பங்கள் அனைத்தும் தேவன் அங்கீகரிக்காததற்கான அறிகுறியாக இருக்கவில்லை. உண்மையில் அந்த நேரம் முழுவதும், “கர்த்தர் அவனோடிருந்தார்.”(ஆதியாகமம் 39:3) யோசேப்பின் வாழ்க்கை தேவன் நம்மைக் கைவிட மாட்டார் என்ற முக்கியமான உண்மையின் வெளிப்பாடாக இருந்தது. “இரட்சகரைப் பின்தொடர்வது உங்கள் சோதனைகள் அனைத்தையும் அகற்றாது” என்று தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் போதித்தார். “எனினும், இது உங்களுக்கும், உங்கள் பரலோக பிதா உங்களுக்குக் கொடுக்க விரும்பும் உதவிக்கும் இடையே உள்ள தடைகளை அகற்றும். தேவன் உங்களோடிருப்பார்” (“A Yearning for Home,” Liahona, Nov. 2017, 22).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
ஆதியாகமம் 37:1–28; 39; 41:9–45
அவனது உபத்திரவத்தில் “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.”
மீண்டும் மீண்டும், நல்ல அதிர்ஷ்டம் யோசேப்பைக் கைவிட்டதாகத் தோன்றியது, ஆனால் கர்த்தர் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. நீங்கள் யோசேப்பின் கதையை வாசிக்கும்போது, இதுபோன்ற கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள்: சோதனையின்போது கர்த்தருக்கு நெருக்கமாக இருக்க யோசேப்பு என்ன செய்தான்? கர்த்தர் “அவனுடன்” எப்படி இருந்தார்?(ஆதியாகமம் 39:2–3, 21, 23).
உங்கள் வாழ்க்கையைப்பற்றியும் நீங்கள் இதே போன்ற கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் சோதனை காலங்களில் கர்த்தர் உங்களை கைவிடவில்லை என்பதற்கு என்ன ஆதாரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் அனுபவங்களை குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருடன் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (1 நேபி 5:14 பார்க்கவும்). எதிர்காலத்தில் நீங்கள் சோதனைகளை எதிர்கொள்ளும்போது உண்மையுள்ளவர்களாக இருக்க உங்களை ஆயத்தப்படுத்த நீங்கள் இப்போது என்ன செய்ய முடியும்?
யோவான் 14:18; ரோமர் 8:28; ஆல்மா 36:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8; D. Todd Christofferson, “The Joy of the Saints,” Liahona, Nov. 2019, 15–18 ஐயும் பார்க்கவும்.
ஆதியாகமம் 37:5–11; 40; 41:1–38
நான் உண்மையுள்ளவனாக இருந்தால், கர்த்தர் என்னை வழிநடத்தி உணர்த்துவார்.
மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தார், “வெளிப்படுத்தல்கள் பல்வேறு வழிகளில் தெரிவிக்கப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, சொப்பனங்களை, தரிசனங்கள், பரலோக தூதர்களுடனான உரையாடல்கள் மற்றும் உணர்த்துதல்” (“The Spirit of Revelation,” Liahona, May 2011, 88). பார்வோனின் தலைமை பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமான யோசேப்புக்கும் பார்வோனுக்கும் உண்மைகளை வெளிப்படுத்த கர்த்தர் சொப்பனங்களைப் பயன்படுத்தினார். இந்த சொப்பனங்களை எவ்வாறு விளக்குவது என்பதையும் கர்த்தர் யோசேப்புக்கு வெளிப்படுத்தினார். ஆதியாகமம் 37:5–11; 40:5–8; 41:14–25, 37–38லிருந்து, கர்த்தரிடமிருந்து வெளிப்படுத்துதல் பெற்று புரிந்து கொள்ளுதலைப்பற்றி நீங்கள் என்ன கற்க முடியும்? உதாரணமாக, வெளிப்படுத்தலைப் புரிந்துகொள்ள கடினமாகத் தோன்றும்போது யோசேப்பின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆதியாகமம் 40:8; 41:16 பார்க்கவும்).
கர்த்தர் தம்முடைய சித்தத்தை உங்களுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வெளிப்பாட்டின் அடிப்படையில் செயல்பட நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவரிடமிருந்து கூடுதல் வழிகாட்டுதலை நீங்கள் எவ்வாறு தேடுகிறீர்கள்?
Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 93–96; Michelle Craig, “Spiritual Capacity,” Liahona, Nov. 2019, 19–21 ஐயும் பார்க்கவும்.
கர்த்தருடைய உதவியுடன், நான் சோதனையிலிருந்து தப்பிக்க முடியும்.
நீங்கள் சோதிக்கப்படும்போது, யோசேப்பின் உதாரணம் உங்களுக்கு ஊக்கத்தையும் பலத்தையும் தர முடியும். ஆதியாகமம் 39ல் அவனது அனுபவத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, சோதனையை எதிர்ப்பதற்கு யோசேப்பு செய்த காரியங்களைக் கவனியுங்கள். உதாரணமாக:
-
போத்திபாரின் மனைவியின் இச்சைகளை அவன் “மறுத்துவிட்டான்”(வசனம் 8).
-
பாவம் செய்வது தேவனையும் மற்றவர்களையும் புண்படுத்தும் என்பதை அவன் கண்டுகொண்டான் (வசனங்கள் 8–9).
-
“நித்தம் நித்தம்” தொடர்ந்தாலும் அவன் சோதனைக்கு “செவிசாய்க்கவில்லை” (வசனம் 10).
-
அவன் “தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்”(வசனம் 12).
யோசேப்பின் உதாரணத்தை மனதில் கொண்டு, சோதனையைத் தவிர்ப்பதற்கும் எதிர்ப்பதற்கும் ஒரு திட்டத்தை உருவாக்குவதை கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் எதிர்கொள்ளும் ஒரு சோதனையைப்பற்றி நீங்கள் சிந்திக்கலாம், தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகளை எழுதுங்கள், மற்றும் சோதனையானது எழும்போது பரலோக பிதாவை சார்ந்திருப்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள்(2 நேபி 4:18, 27–33 பார்க்கவும்).
சோதனை:
தவிர்க்க சூழ்நிலைகள்:
பதிலளிக்க திட்டம்:
ஆதியாகமம் 38ல் காணப்படுகிற, சோதனையை எதிர்கொள்ளும்போது யோசேப்பின் வலிமையைப்பற்றிய இந்த விவரத்துக்கு முன்னதாக அவனது மூத்த சகோதரன் யூதாவைப்பற்றிய மிகவும் மாறுபட்ட விவரம் காணப்படுகிறது அதிகாரங்கள் 37, 38, மற்றும் 39, ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டால், கற்புடைமையைப்பற்றி உங்களுக்கு என்ன போதிக்கின்றன?
1 கொரிந்தியர் 10:13; 1 நேபி 15:23–24; 3 நேபி 18:17–18 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
ஆதியாகமம் 37.நீங்கள் யோசேப்பின் சகோதரர்களில் ஒருவனாக இருந்திருந்தால், அவனுடனான உங்கள் உறவை பொறாமை பலவீனப்படுத்துவதிலிருந்து காத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்திருக்க முடியும்? ஒருவருக்கொருவர் “சமாதானமாக பேச” இது எவ்வாறு உதவும்?(வசனம் 4).
-
ஆதியாகமம் 39.“The Refiner’s Fire” and “After the Storm” (ChurchofJesusChrist.org) காணொலிகள், சோதனைகளின்போது கர்த்தரிடத்தில் திரும்பி பெலன் பெற்றவர்களின் அனுபவங்களை ஒப்பிடுகின்றன. ஒருவேளை, யோசேப்பு தனது அனுபவங்களைப்பற்றி ஒரு காணொலியை உருவாக்கினால் அவைகளில் ஒன்றை நீங்கள் பார்த்து யோசேப்பு என்ன சொல்லியிருக்கக்கூடும் என்பதைப்பற்றிப் பேசலாம். “I’m Trying to Be Like Jesus” (Children’s Songbook, 78–79) பாடலை நீங்கள் ஒன்றாகப் பாடி, அவன் சோதனைகளை எதிர்கொண்டபோது, யோசேப்போடு உங்கள் குடும்பத்தினர் பகிரக்கூடிய புத்திமதிகளைத் தேடவும்.
-
ஆதியாகமம் 39:7–12.இந்த வசனங்களை வாசிப்பது உங்கள் குடும்பத்தினருடன் கற்புடைமை நியாயப்பிரமாணத்தைப்பற்றி கலந்துரையாட ஒரு வாய்ப்பை வழங்கும். இந்த விவாதத்திற்கு உதவக்கூடிய சில ஆதாரங்கள் இதோ:யாக்கோபு 2:28; ஆல்மா 39:3–9; “Sexual Purity” (in For the Strength of Youth [2011], 35–37); “Sexual Intimacy Is Sacred and Beautiful” (in Help for Parents [2019], AddressingPornography.ChurchofJesusChrist.org).
-
ஆதியாகமம் 41:15–57.கர்த்தர் யோசேப்பின் மூலம் எகிப்து ஜனங்களை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்பதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? எதிர்கால அவசரநிலைகளுக்கு ஆயத்தப்படுவதைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒரு குடும்பமாக சிறப்பாக ஆயத்தமாக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி விவாதிக்கவும். ஆலோசனைகளுக்கு Gospel Topics, “Emergency Preparedness,” topics.ChurchofJesusChrist.org பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Jesus Is Our Loving Friend,” Children’s Songbook, 58.