“உங்கள் குடும்ப வேத படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்”,என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்
சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள உங்கள் குடும்பத்தினருக்குதவ, வழக்கமான குடும்ப வேதப் படிப்பு ஒரு ஆற்றல் மிக்க வழி. ஒரு குடும்பமாக நீங்கள் எவ்வளவு படித்தீர்கள் எவ்வளவு நேரம் படித்தீர்கள் என்பது, உங்கள் முயற்சிகளில் சீராக இருப்பதைப்போல முக்கியமானதல்ல. உங்கள் குடும்ப வாழ்க்கையில் வேதப் படிப்பை ஒரு முக்கியமான பகுதியாக நீங்கள் ஆக்கும்போது, பரலோக பிதாவிடத்திலும், இயேசு கிறிஸ்துவண்டையும் நெருக்கமாக வரவும் தேவனுடைய வார்த்தையின் அஸ்திபாரத்தின்மேல் அவர்களுடைய சாட்சிகளைக் கட்டவும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள்.
பின்வரும் கேள்விகளைக் கருத்தில்கொள்ளவும்:
-
அவர்களாகவே வேதங்களைப் படிக்க உங்கள் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?
-
அவர்கள் கற்றுக்கொண்டிருப்பவற்றை பகிர்ந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களை ஊக்குவிக்க உங்களால் என்ன செய்யமுடியும்?
-
பழைய ஏற்பாட்டின் அன்றாட போதித்தலின் தருணங்களில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற கொள்கைகளை நீங்கள் எவ்வாறு வலியுறுத்தமுடியும்?
சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலுக்கு வீடுதான் சிறந்த இடமென்பதை நினைவு வைத்திருங்கள். சபை வகுப்பில் சாத்தியமில்லாத வழிகளில், வீட்டில் சுவிசேஷத்தை நீங்கள் கற்றுக்கொள்ளவும் போதிக்கவும் முடியும். வேதங்களிலிருந்து உங்கள் குடும்பத்தினர் கற்றுக்கொள்ள உதவும் வழிகளை நீங்கள் சிந்திக்கும்போது ஆக்கபூர்வமாயிருங்கள். உங்கள் குடும்ப வேதப் படிப்பை மேம்படுத்த பின்வரும் ஆலோசனைகளில் சிலவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.
இசையைப் பயன்படுத்தவும்
வேதங்களில் போதிக்கப்பட்ட கொள்கைகளை வலுப்படுத்த பாடல்களைப் பாடவும். ஆலோசனையளிக்கப்பட்ட பாடல் அல்லது ஒவ்வொரு வார குறிப்பிலும் பட்டியலிடப்பட்டுள்ள பிள்ளைகளின் பாடல். பாடலின் வரிகள் அல்லது சொற்றொடர்களைப்பற்றி நீங்கள் குடும்பத்தினரிடம் கேள்வி கேட்கலாம். பாடுவதுடன், அந்தப் பாடல்களுக்கேற்ற செயல்களை உங்கள் குடும்பத்தினர் செய்யலாம் அல்லது அவர்கள் பிற செயல்கள் செய்யும்போது பின்னணி இசையாக பாடல்களைக் கேட்கலாம். அதிக ஆலோசனைகளுக்கு, “Including Sacred Music in Your Gospel Learning” எனும் இந்த ஆதாரத்தில் பார்க்கவும்.
அர்த்தமுள்ள வேத வசனங்களைப் பகிர்ந்துகொள்ளவும்
அவர்களுடைய தனிப்பட்ட படிப்பின்போது அர்த்தமுள்ளதாக அவர்கள் கண்டுபிடித்த வேதத்தின் பத்திகளைப் பகிர்ந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்கவும்.
உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவும்
நீங்கள் படிக்கிற வசனங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றை அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லும்படி குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும்.
உங்கள் வாழ்க்கையில் வசனங்களைப் பிரயோகிக்கவும்
ஒரு வேத பாகத்தைப் படித்த பின்னர், அவர்களுடைய வாழ்க்கையில் பொருந்துகிற வழிகளைப் பகிர்ந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களைக் கேட்கவும்.
ஒரு கேள்வியைக் கேட்கவும்
சுவிசேஷ கேள்வி ஒன்றைக் கேட்க குடும்ப உறுப்பினர்களை அழைத்து, பின்னர் அந்த கேள்விக்கு பதிலளிக்க உதவுகிற வார்த்தைகளுக்காக தேடுவதில் நேரத்தை செலவழிக்கவும்.
ஒரு வேத வசனத்தை காட்சியாக வைக்கவும்
அர்த்தமுள்ளதாக நீங்கள் காண்கிற ஒரு வசனத்தை தேர்ந்தெடுத்து, குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு இடத்தில் அதைக் காட்சியாக வைக்கவும். காட்சியாக வைக்க ஒரு வேத வசனத்தை தேர்ந்தெடுப்பதில் முறை எடுக்க பிற குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும்.
ஒரு வேதப் பட்டியலை உருவாக்கவும்
வரப்போகிற வாரத்தின்போது கலந்துரையாட நீங்கள் விரும்புகிற பல்வேறு வசனங்களை ஒரு குடும்பமாக தேர்ந்தெடுக்கவும்.
வசனங்களை மனப்பாடம் செய்யவும்
உங்கள் குடும்பத்துக்கு அர்த்தமுள்ளதாயிருக்கிற ஒரு வேத பாகத்தை தேர்ந்தெடுத்து, அதை தினமும் திருப்பி திருப்பி சொல்வதால், அல்லது மனப்பாட விளையாட்டை விளையாடுவதால் அதை மனப்பாடம் செய்ய குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும்.
பொருள்சார் பாடங்களைப் பகிர்ந்துகொள்ளவும்
ஒரு குடும்பமாக நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் வேத பாகங்களில் உள்ள சுவிசேஷக் கொள்கைகளுக்குத் தொடர்புள்ள பொருள்களை கண்டறியவும். வேதங்களிலுள்ள போதனைகளுக்கு ஒவ்வொரு பொருளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறதென்பதைப்பற்றிப் பேச குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும்.
ஒரு தலைப்பை எடுத்துக்கொள்ளவும்
குடும்பம் ஒன்றுசேர்ந்து படிக்கப்போகிற ஒரு தலைப்பை தேர்ந்தெடுப்பதில் குடும்ப உறுப்பினர்கள் முறை எடுத்துக்கொள்ளட்டும். தலைப்பைப்பற்றி வேத பத்தியைக் கண்டுபிடிக்க Topical Guide, the Bible Dictionary, or the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org) பயன்படுத்தவும்.
ஒரு படத்தை வரையவும்
ஒரு குடும்பமாக ஒரு சில வசனங்களை வாசித்து, பின்னர், நீங்கள் படித்ததற்கு தொடர்புடைய ஒன்றை வரைய குடும்ப உறுப்பினர்களுக்கு நேரத்தை அனுமதிக்கவும். ஒருவருக்கொருவரின் ஓவியங்களைப்பற்றி கலந்துரையாட நேரம் செலவழிக்கவும்.
ஒரு கதையை நடிக்கவும்
ஒரு கதையை வாசித்த பின்னர், அதை நடித்துக்காட்ட குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும். அதன் பின்னர், தனிப்பட்டவர்களாகவும், குடும்பமாகவும் நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற காரியங்களுக்கு கதை எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி பேசவும்.