பழைய ஏற்பாடு 2022
என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயன்படுத்துதல்


என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021) பயன்படுத்துதல்

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயன்படுத்துதல்என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் பயன்படுத்துதல்

இந்த ஆதாரம் யாருக்கானது?

இந்த ஆதாரம் சபையிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்துக்குமானது. நீங்கள் தனியாக அல்லது உங்கள் குடும்பத்துடன் சுவிசேஷத்தை கற்க உதவுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சுவிசேஷத்தை ஒழுங்காக படித்திராவிட்டால், நீங்கள் தொடங்க இந்த ஆதாரம் உங்களுக்கு உதவ முடியும். சுவிசேஷம் படிக்கும் நல்ல பழக்கம் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், நீங்கள் அதிக அர்த்தமுள்ள அனுபவங்களைப் பெற இந்த ஆதாரம் உங்களுக்கு உதவ முடியும்.

இந்த ஆதாரத்தை நான் எப்படி பயன்படுத்த முடியும்?

உங்களுக்கு உதவிகரமான எந்தவிதத்திலும் இந்த ஆதாரத்தை பயன்படுத்துங்கள். தனிப்பட்ட மற்றும் குடும்ப வேதப் படிப்புக்கு இதை ஒரு வழிகாட்டியாக அல்லது தனிப்பட்ட உதவியாக இதை உதவிகரமானதாக நீங்கள் காணலாம். இல்ல மாலைக்காகவும் நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். பழைய ஏற்பாட்டில் காணப்படுகிற முக்கிய கொள்கைகளை அடையாளப்படுத்திய குறிப்புகள், தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் படிப்பு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் ஆலோசனையளித்து, உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய இடம் அளிக்கிறது.

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் நீங்கள் செய்துகொண்டிருக்கும் நல்ல விஷயங்களை மாற்றவோ அல்லது அவற்றுடன் போட்டியிடவோ அல்ல. தேவ வார்த்தையின் உங்கள் சொந்த படிப்பை எவ்வாறு அணுகுவது என தீர்மானிக்க பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றவும்.

தம்பதி வீட்டில் வேதம் படித்துக்கொண்டிருத்தல்

சபையில் நடப்பதுடன் இந்த ஆதாரம் எவ்வாறு தொடர்புடையதாயிருக்கிறது?

இந்த ஆதார புத்தகத்தின் குறிப்புகள் வார வாசிப்புத் திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ளன. என்னைப் பின்பற்றி வாருங்கள், ஆரம்ப வகுப்பு, ஞாயிறு பள்ளி, மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்களுக்கும் இளம் பெண்கள் வகுப்புகளுக்கும் பின்பற்ற வேண்டிய ஆதார கால அட்டவணையாகும். வீட்டில் சுவிசேஷத்தைக் கற்கவும் அதன்படி வாழ்வதற்குமான உங்கள் முயற்சிகளை ஆதரிக்க, சபையில் உள்ள உங்கள் ஆசிரியர்கள் நீங்கள் வீட்டில் படித்துக்கொண்டிருக்கும் வேத பாகங்களைப்பற்றிய உங்கள் அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்குவர்.

வாரத்தில் இருமுறை மட்டுமே ஞாயிறு பள்ளி கற்பிக்கப்படுவதால், வாராந்தர கால அட்டவணையைப் பின்பற்ற ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் திட்ட வரைவுகளை தவிர்க்க அல்லது இணைக்க தேர்ந்தெடுக்கலாம். பிணைய மாநாடு அல்லது பிற காரணங்களால் வழக்கமான சபை கூட்டங்கள் (ஞாயிறு பள்ளி மற்றும் ஆரம்ப வகுப்பு) நடைபெறாத வாரங்களின்போது இதுவும் அத்தியாவசியமாயிருக்கலாம். இந்த வாரங்களில் வீட்டில் பழைய ஏற்பாட்டை தொடர்ந்து படிக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

கால அட்டவணையை நான் பின்பற்ற வேண்டுமா?

ஆண்டு இறுதிக்குள் பழைய ஏற்பாடு மற்றும் விலையேறப்பெற்ற முத்து ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுப்புகளைப் படிக்க கால அட்டவணை உங்களுக்கு உதவும். கூடுதலாக. மற்றவர்களைப்போல, இதே கால அட்டவணையைப் பயன்படுத்துதல், வீட்டிலும், சபையிலும் மற்றும் எல்லா இடங்களிலும் அர்த்தமுள்ள அனுபவங்களுக்கு நடத்த முடியும். ஆனால் கால அட்டவணையால் கட்டப்பட்டதாக அல்லது ஒவ்வொரு வசனத்தையும் படிக்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர வேண்டாம் ; கால அட்டவணை வெறுமனே உங்களை வேகப்படுத்த உதவும் வழிகாட்டியாகும். சுவிசேஷத்தை நீங்கள் தனியாகவும் குடும்பமாகவும், கற்றுக்கொள்கிறீர்கள் என்பதே முக்கியம்.

பழைய ஏற்பாடு வாசிப்பு கால அட்டவணையைப்பற்றிய குறிப்பு

பரிந்துரைக்கப்பட்ட என்னைப் பின்பற்றி வாருங்கள், 2022 க்கான வாசிப்பு கால அட்டவணை பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சேர்க்கவில்லை. பழைய ஏற்பாடு மற்ற வேதங்களை விட நீளமாக இருப்பதால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாசிப்பு கால அட்டவணையை மேலும் நிர்வகிக்க சில அதிகாரங்களும் புத்தகங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

மிகையானதைத் தவிர்ப்பதற்கும், இயேசு கிறிஸ்துபற்றி சாட்சியமளிக்கும் பத்திகளை முன்னிலைப்படுத்தவும், கோட்பாடு நிறைந்ததாகவும், குறிப்பாக நம் நாளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் அதிகாரங்களும் புத்தகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, பரிந்துரைக்கப்பட்ட வாசிப்பு கால அட்டவணையில் 1 மற்றும் 2 நாளாகமம் ஆகியவை இல்லை, ஏனெனில் அந்த புத்தகங்களின் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி 1 மற்றும் 2 இராஜாக்கள் ஆகியவற்றில் காணப்படும் விவரங்களை திரும்பக் கூறுகிறது. இந்த கால அட்டவணையில் உன்னதப்பாட்டும் சேர்க்கப்படவில்லை, ஏனென்றால் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இது உணர்த்தப்பட்ட வேதமல்ல என்று கற்பித்தார் (Guide to the Scriptures, “Song of Solomon,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்). இருப்பினும், இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஆய்வு கால அட்டவணை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வேதப் படிப்பு தனிப்பட்ட வெளிப்பாட்டால் வழிநடத்தப்பட வேண்டும்.