“கோட்பாடும் உடன்படிக்கைகளும் பற்றியது,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் பற்றியது,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
முன்னுரை
கோட்பாடும் உடன்படிக்கைகளும் பற்றியது
கர்த்தர் மறுபடியும் பேசுதல்
நமது பரலோக பிதா நம்மை நேசிக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்கும்படியாய் நாம் அவருடனே உடன்படிக்கைகளையோ, அல்லது வாக்குத்தத்தங்களையோ, செய்துகொள்ள விரும்புகிறார். அவர் தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை, நமக்கு இரட்சகராக இருந்து நம்மை மறுபடியும் அவரிடத்தில் திரும்பிச் சேர்க்க உதவ அனுப்பினார்.
தேவன், இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் தம்முடைய கற்பனைகளைப்பற்றியும் நமக்குப் போதிக்க தீர்க்கதரிசிகளையும் அனுப்புகிறார். தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம்செய்து அவருடைய சபையை வழிநடத்த உதவுகிறார்கள்.
நமக்கு என்ன போதிக்க வேண்டும் என்று இயேசு தீர்க்கதரிசிகளிடம் கூறுதல். நீண்ட காலத்திற்கு முன்பே தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் பைபிள் மற்றும் மார்மன் புஸ்தகம் போன்ற வேதங்களில் எழுதப்பட்டுள்ளன.
இயேசு கிறிஸ்து பூமியில் வாசம் செய்த பிற்பாடு அநேக ஆண்டுகளாக தீர்க்கதரிசிகள் இல்லை. ஜனங்கள் தேவனோடு உடன்படிக்கைகளை செய்யாமலும் கைக்கொள்ளாமலும் இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் சபை பூமியில் இல்லை.
பின்பு தேவன் ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக இருக்க அழைத்தார். ஜோசப் ஒரு சிறு பையன் என்றாலும் அவர் மிகவும் முக்கியமானதை செய்ய தேவன் காத்திருந்தார்.
ஜோசப் ஸ்மித் இயேசுவைப் பற்றிப் போதித்தார். அவர் இயேசு சபையை ஒழுங்கமைக்க உதவினார். இயேசு ஜோசப் ஸ்மித்துக்கு தம்முடைய சுவிசேஷத்தையும், எப்படி தம்முடைய சபையை நடத்துவது என்பதைப் பற்றியும் கற்றுக்கொடுத்தார்.
இயேசு ஜோசப் ஸ்மித்திடம் சொன்ன பல விஷயங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் எழுதப்பட்டுள்ளன. கோட்பாடும் உடன்படிக்கைகளும் என்பது பைபிள் மற்றும் மார்மன் புஸ்தகம் போன்ற ஒரு வேத புத்தகம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள், இயேசு எவ்வாறு தமது சபையை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மற்றும் பிறரின் உதவிகொண்டு மறுபடியும் கொண்டுவந்தார் அல்லது மறுஸ்தாபித்தார் என்பதை சொல்லுகிறது. சபை அங்கத்தினர்கள் பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவன் உலகம் முழுவதும் உள்ள தம் பிள்ளைகளை நேசிக்கிறார் என்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன. நாம் அவரோடு உடன்படிக்கை செய்கிறபோது அவர் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.