“ஜோசப் ஸ்மித்தின் குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“ஜோசப் ஸ்மித்தின் குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1805–1817
ஜோசப் ஸ்மித்தின் குடும்பம்
விசுவாசத்தின் குடும்பம்
ஜோசப் ஸ்மித் டிசம்பர் 23, 1805 இல் வடகிழக்கு அமெரிக்காவில் பிறந்தார். அவரது தந்தையும் ஜோசப் என்று அழைக்கப்பட்டார். அவரது தாயார் பெயர் லூசி என்பதாகும். அவருக்கு பல சகோதர சகோதரிகள் இருந்தனர். ஜோசப்பின் குடும்பத்தினர் விவசாயிகள். அவர்கள் தேவனை நம்பினார்கள் மற்றும் ஒருவரையொருவர் நேசித்தார்கள்.
ஜோசப் சிறுவனாக இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட ஒரு நோயால் காலில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது அவருக்கு மிகுந்த வலியை உண்டாக்கியது. ஜோசப்பின் குடும்பத்தினர் அவரது வலியைக் குறைக்க உதவ முயன்றனர், ஆனாலும் அவரது கால் மிகுந்த வலியை உண்டாக்கியது. மருத்துவர்கள் அவரது காலை சரி செய்ய முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை.
Saints, 1:7
ஜோசப்பின் உயிரைக் காப்பாற்ற அவரது காலை எடுத்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அவரது தாயார் அதை அனுமதிக்கவில்லை. ஜோசப்புக்கு உதவ வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டாள். காலை எடுப்பதிற்குப் பதிலாக அவரது காலில் உள்ள எலும்பின் ஒரு பகுதியை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இது வலியைக்கொடுக்கும் என்று ஜோசப் அறிந்திருந்தார், ஆனாலும் தேவன் தனக்கு உதவி செய்வார் என்ற விசுவாசமும் அவருக்கு இருந்தது.
Saints, 1:7
ஜோசப்பிற்கு வலியைக் குறைக்க மருத்துவர்கள் மதுவைக் கொடுக்க விரும்பினர். ஆனால் ஜோசப் வேண்டாம் என்று சொன்னார். அவரது தந்தை மட்டும் அவரைப் பிடித்துக் கொண்டால் போதும் என்று விரும்பினார்.
Saints, 1:7
ஜோசப் தன் தாயை வெளியே போகச் சொன்னார். மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்யும்போது அவர் மிகுந்த வலியில் இருப்பதை அவர் தாயார் பார்க்க அவர் விரும்பவில்லை.
ஜோசப்பின் காலின் எலும்பில் இருந்த மோசமான பாகங்களை மருத்துவர்கள் வெட்டியெடுத்த போது ஜோசப்பின் தந்தை அவரைப் பிடித்துக் கொண்டார். இது மிகுந்த வலியைக்கொடுத்தது, ஆனாலும் ஜோசப் தைரியமாக இருக்க தேவன் உதவினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோசப்பின் கால் நன்றாக குணமானது , ஆனாலும் நடக்கும் பொழுது இன்னும் வலித்தது.
Saints, 1:6–7
ஜோசப் பெரியவனானபோது , அவரது குடும்பம் நியூயார்க் மாநிலத்திற்கு குடிபெயர்ந்தது. ஜோசப்பின் குடும்பம் வறுமையிலிருந்தார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு போதுமான உணவுக்காக கடுமையாக உழைத்தனர். ஜோசப் ஒரு நல்ல சிறுவனாயிருந்தார். அவர் சந்தோஷமாக இருந்தார், அவருக்கு சிரிப்பதும் வேடிக்கை செய்வதும் பிடிக்கும்
Saints, 1:5–9
ஜோசப்பின் குடும்பம் இயேசு கிறிஸ்துவை நேசித்தனர். அவர்கள் ஒன்றாக இணைந்து ஜெபிக்கவும் வேதத்தை வாசிக்கவும் செய்தனர். ஆனால் ஜோசப்பின் பெற்றோர் தாம் எந்த சபையை சார்ந்தவர்களாய் இருக்கவேண்டுமென்ற உறுதிஇல்லாதவர்களாயிருந்தனர். ஒரு இரவு, ஜோசப்பின் தாய், லூசி,ஜெபிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபையைக் கண்டுபிடிக்க விரும்புவதாக தேவனிடம் கூறினாள். தேவன் அவளுடைய ஜெபத்திற்கு பதிலளித்தார், அவள் அதைக் கண்டுபிடிப்பாள் என்றும் உறுதியளித்தார்.
Saints, 1:10-11.