வேதக் கதைகள்
ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனம்


“ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

1817–1820

3:23

ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனம்

ஒரு தாழ்மையான ஜெபத்திற்கு பதில்

பல்வேறு விதமான மத நம்பிக்கைகளைப் பற்றி பிரசங்கிக்கும் மக்களின் போதனைகளை ஜோசப் ஸ்மித் கேட்கிறார்.

ஜோசப் ஸ்மித்தின் குடும்பம் வாழ்ந்த இடத்தில், இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதிக்கும் பல சபைகள் அங்கு இருந்தன. அவர்கள் அனைவரும் அவரைப் பற்றி வெவ்வேறு காரியங்களைப் போதித்தனர் . அவர்களில் யார் சரி என்று ஜோசப்பிற்கு உறுதியாக தெரியவில்லை. தனக்கு இரட்சகர் தேவை என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால் எந்த சபையில் சேர்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:5–6; Saints, 1:9

ஜோசப் ஸ்மித் அவரது பண்ணை நிலத்தில் வேலை செய்தல்.

ஜோசப் இதைப்பற்றி நீண்ட காலமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய பாவங்களிலிருந்து மன்னிப்படைய விரும்பினார். அவர் பல சபைகளுக்கு சென்றார், ஆனாலும் குழப்பமாகவே உணர்ந்தார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:8–10; Saints, 1: 9–12

ஜோசப் ஸ்மித் வேதாகமத்தை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிக்கிறார்.

ஒரு நாள் ,ஜோசப் வேதாகமத்தில் யாக்கோபு 1:5ஐ வாசித்தார். நமக்கு ஞானம் தேவையெனில், தேவனிடம் கேட்கலாம் என்று அது கூறியது. இது தான் தான் செய்யவேண்டியது என்று ஜோசப் தனது இருதயத்தில் தெரிந்து கொண்டார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:11-13.

ஜோசப் ஸ்மித் அவரது வீட்டிற்கு அருகிலிருந்த காட்டிற்கு ஜெபிக்க செல்கிறார்.

1820 ஆம் ஆண்டு ஒரு அழகான வசந்த காலத்தின் காலையில், ஜோசப் தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டிற்குச் சென்றார். பரலோக பிதாவிடம் ஜெபிக்க அவர் ஒரு தனிமையான இடத்தில் இருக்க வேண்டுமென விரும்பினார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:14-15.

ஜோசப் ஸ்மித் காட்டில் ஜெபம் செய்கிறார்.

ஜோசப் முழங்காலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார். அப்போது, ஒரு தீய சக்தி அவரை எடுத்துக்கொள்ள முயற்சிப்பதை உணர்ந்தார். அவரைச்சுற்றிலும் இருட்டு இருப்பதுபோல் உணர்ந்தார். தேவனிடம் பேசவிடாமல் யாரோ அவரைத் தடுக்க முயல்வது போல் தோன்றியது. ஜோசப் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி தன்னைக் காக்குமாறு தேவனிடம் கேட்டார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:15-16.

பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் ஜோசப் ஸ்மித்தின் முன் தோன்றினார்கள். அவர்கள் முன்பு அவர் முழங்காலிட்டார்.

திடீரென, வானத்திலிருந்து ஒரு அழகான பிரகாசமான ஒளி இறங்குவதை ஜோசப் பார்த்தார். இருள் நீங்கி சமாதானத்தை உணர்ந்தார். அந்த வெளிச்சத்தில். பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் காற்றில் நிற்பதை ஜோசப் பார்த்தார். பரலோக பிதா ஜோசப்பை பெயர்சொல்லி அழைத்தார். பின்பு இயேசுவை சுட்டிக்காட்டிச் சொன்னார்,“இவர் என் நேச குமாரன். இவருக்குச் செவிகொடு!”

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:16-17.

அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக இயேசு ஜோசப் ஸ்மித்திடம் சொல்கிறார்.

அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக இயேசு ஜோசப்பிடம் சொன்னார். எந்த சபைக்கு செல்ல வேண்டும் என்று ஜோசப் இயேசுவிடம் கேட்டார். எதிலும் சேர வேண்டாம் என இயேசு கூறினார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:18 -19; Saints, 1:16

ஜோசப் ஸ்மித், மரங்களடர்ந்த காட்டில் முழங்கால்படியிட்டு, இரட்சகர் சொல்வதை கேட்டுக்கொண்டிருத்தல்.

தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றிய முக்கியமான சத்தியங்கள் காணாமல் போய்விட்டதாக இயேசு சொன்னார். இந்த சத்தியங்களை ஜோசப் கற்றுக்கொண்டு உலகத்துடன் பகிர்ந்துகொள்ள, தூதர்களை அனுப்புவதாகச் சொன்னார்.

Saints, 1:16-17

ஜோசப் ஸ்மித் காட்டில் இருந்து வீட்டை நோக்கி நடத்தல்.

தரிசனம் முடிந்ததும், ஜோசப் அன்பினாலும் சந்தோஷத்தினாலும் நிறைந்திருந்தார். அவரிடம் குழப்பமே இல்லை. தேவன் அவரை நேசிப்பதை அறிந்திருந்தார். பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பார்த்ததாகச் சொல்வதை கேட்டு சிலர் அவரை வெறுத்தாலும், அது உண்மை என்று ஜோசப் அறிந்திருந்தார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:20–26; Saints, 1:16