“தூதன் மரோனி ஜோசப் ஸ்மித்தை சந்தித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“தூதன் மரோனி ஜோசப் ஸ்மித்தை சந்தித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1823
தூதன் மரோனி ஜோசப் ஸ்மித்தை சந்தித்தல்
ஒரு பரிசுத்த புஸ்தகத்தை பற்றி கற்றுக்கொள்ளுதல்
ஜோசப் ஸ்மித்தின் முதல் தரிசனத்திலிருந்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தன. அதன் பிறகு, தான் செய்த சில தவறுகளால் ஜோசப் மனம் வருந்தினார். தேவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று அவர் வியந்தார்.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:28–29; Saints, 1:20
ஒரு நாள் இரவு, அனைவரும் தூங்கிய பிறகு, ஜோசப் ஜெபம் செய்ய முடிவு செய்தார். தேவன் முன்பு அவருடைய ஜெபங்களுக்கு பதிலளித்தார் , அதுபோல அவர் மீண்டும் பதில் அளிப்பார் என்று ஜோசப் அறிந்திருந்தார்.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:29; Saints, 1:21 –22
ஜோசப் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஒளி அறையை நிரப்பியது. ஜோசப் தனது படுக்கையின் பக்கத்தில் ஒரு தூதன் காற்றில் நிற்பதை பார்த்தான். தூதன் தன்னுடைய பெயர் மரோனி என்று சொன்னார். தேவன் அவரை அனுப்பினார். தேவன் ஜோசப்பை மன்னித்துவிட்டதாகவும், அவருக்கு ஒரு பணி வைத்திருப்பதாகவும் கூறினார். உலகெங்கிலும் உள்ள மக்கள் ஜோசப்பையும் தேவன் அவருக்கு கொடுத்த பணியையும் அறிவார்கள்.
தங்கத்தகடுகளில் அல்லது பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு புஸ்தகம் இருப்பதாக மரோனி சொன்னார். அது ஜோசப்பின் வீட்டருகிலுள்ள ஒரு மலையில் புதைக்கப்பட்டிருந்தது. அந்த புஸ்தகம் நீண்ட காலத்திற்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த மக்களைப்பற்றியது . அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் அவரின் சுவிசேஷம் குறித்தும் அறிந்திருந்தார்கள். இந்த புஸ்தகத்தை மக்கள் வாசிக்குமாறு ஜோசப் மொழிபெயர்க்க தேவன் உதவுவார் என மரோனி சொன்னார்.
மரோனி அன்றிரவு மூன்று முறையும் மறுநாள் மீண்டும் வந்து சந்தித்தார். ஜோசப் தான் பார்த்ததை தன் தந்தையிடம் கூறினான். ஜோசப்பின் தந்தை மகிழ்ச்சி அடைந்தார். “இது தேவனிடமிருந்து வந்த தரிசனம்,“ என்று அவர் ஜோசப்பிடம் கூறினார்.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:35–50; Saints, 1:22 –25
ஜோசப் மலைக்கு சென்று ஒரு கனமான பாறையின் அடியில் தங்கத்தகடுகள் இருப்பதை கண்டுபிடித்தார். அவர் அவற்றை அணுகும்போது, அவற்றின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று அவர் யோசித்தார். ஜோசப் தகடுகளை எடுக்கத் தயாராகவில்லை என்று மரோனி வந்து அவரிடம் கூறினார். அவர் தயாராகும் வரை ஒவ்வொரு வருடமும் இந்த இடத்திற்கு வருமாறு ஜோசப்பிடம் கூறினார்.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:51–54; Saints, 1:25–27