“மார்ட்டின் ஹாரிஸ் ஜோசப்பிற்கு உதவுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“மார்ட்டின் ஹாரிஸ் ஜோசப்பிற்கு உதவுதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1828–1829
மார்ட்டின் ஹாரிஸ் ஜோசப்பிற்கு உதவுதல்
கர்த்தரை நம்ப கற்றுக்கொள்ளுதல்
ஒரு நாள், ஜோசப்பும் எம்மாவும் பென்சில்வேனியாவில் வசித்து வந்தபோது, மார்ட்டின் ஹாரிஸ் என்ற நண்பர் அவர்களைப் பார்க்க வந்தார். மார்ட்டின் நியூயார்க்கில் ஒரு பெரிய பண்ணை நிலம் வைத்திருந்தார். தங்கத் தகடுகளுடன் ஜோசப் செய்யும் பணி பற்றி அவர் அறிந்திருந்தார். அவர் முன்பு ஜோசப்புக்கு உதவியிருந்தார், இப்போது அவர் இன்னும் அதிகம் உதவ முடியுமா என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.
Saints, 1:49
ஜோசப்பும் எம்மாவும் நன்றியுணர்வோடு இருந்தார்கள். ஜோசப் பொய் சொல்கிறார் என்று பலர் நினைத்தார்கள். தங்கத் தகடுகள் உண்மையானவை என்று நம்பும் மார்ட்டின் போன்ற ஒரு நண்பர் இருந்தது நல்லது.
Saints, 1:49
ஜோசப் மொழிபெயர்க்க, மார்ட்டின் அவர் சொன்னதை எழுதினார். இந்த மகத்தான பணியில் கர்த்தருக்கு உதவி செய்வதில் மார்ட்டின் உற்சாகமாக இருந்தார்.
Saints, 1:50
மார்ட்டினின் மனைவி லூசி மகிழ்ச்சியாக இல்லை. உண்மையில் தங்கத் தகடுகள் ஜோசப்பிடம் இருப்பதை அவள் நம்பவில்லை. ஜோசப் மார்ட்டினை ஏமாற்றுவதாக அவள் நினைத்தாள். மார்ட்டின் ஜோசப்பிற்கு உதவுவதை நிறுத்திவிட்டு மீண்டும் நியூயார்க்கிற்கு வந்துவிட வேண்டும் என்று அவள் விரும்பினாள்.
Saints, 1:49-50
ஆனால் மார்ட்டின் ஜோசப்புடன் தொடர்ந்து பணியாற்றினார். லூசி அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதைப் படிக்க நேர்ந்தால், அவளும் நம்புவாள் என்று அவர் நினைத்தார். அவர்கள் மொழிபெயர்த்த பக்கங்களை தனது மனைவிக்குக் காட்ட நியூயார்க்கிற்கு எடுத்துச் செல்லலாமா என்று ஜோசப்பிடம் அவர் கேட்டார். தேவனிடம் ஜெபத்தில் கேட்கிறேன் என்று ஜோசப் சொன்னார்.
Saints, 1:50–51
பக்கங்களை எடுத்துச்செல்ல மார்டினை அனுமதிக்க வேண்டாம் என்று தேவன் ஜோசப்பிடம் சொன்னார். ஜோசப்பை மீண்டும் ஜெபிக்கும்படி மார்ட்டின் கேட்டுக்கொண்டார் . ஜோசப் ஜெபித்தபோது அதே பதிலைப் பெற்றார். ஆனாலும் எப்படியாவது தனது மனைவிக்கு பக்கங்களைக் காட்ட மார்ட்டின் விரும்பினார், ஜோசப்பும் தனது நண்பருக்கு உதவ விரும்பினார். ஜோசப் மூன்றாவது முறை ஜெபம் செய்தார். இந்த முறை ஜோசப்பே என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கலாம் என்று தேவன் சொன்னார்.
Saints, 1:51
மார்ட்டினிடம் அந்தப் பக்கங்களை நியூயார்க்கிற்கு எடுத்துச் செல்லலாம், ஆனால் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அவற்றைக் காட்ட வேண்டும் என்று ஜோசப் சொன்னார். மேலும் அவர் இரண்டு வாரங்களில் பக்கங்களை மீண்டும் கொண்டு வருவது அவசியமாயிருந்தது. மார்ட்டின் ஒப்புக்கொண்டு பக்கங்களுடன் புறப்பட்டார்.
Saints, 1:51
மார்ட்டின் சென்றிருந்தபோது , ஜோசப் மற்றும் எம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்துவிட்டது, எம்மா நோய்வாய்ப்பட்டார். எம்மாவும் ஜோசப்பும் மிகுந்த துக்கத்தில் இருந்தனர்.
Saints, 1:51-52
ஜோசப் எம்மாவைப் பற்றி கவலைப்பட்டார். அவர் மார்ட்டினைப் பற்றியும் கவலைப்பட்டார். இரண்டு வாரங்கள் கடந்தும், மார்ட்டின் திரும்பி வரவில்லை. எம்மாவும் கவலைப்பட்டாள்.
Saints, 1:52
எம்மா மார்ட்டினைத் தேட நியூயார்க் செல்லுமாறு ஜோசப்பிடம் சொன்னாள். ஜோசப் மார்ட்டினை அவரது பெற்றோர் வீட்டில் சந்தித்தார். பக்கங்களைப் பற்றி ஜோசப் மார்ட்டினிடம் கேட்டபோது, மார்ட்டின் மிகவும் வருத்தமடைந்தார். பக்கங்கள் தொலைந்துவிட்டன என்றார். அவர் எல்லா இடங்களிலும் தேடியும் அவைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
Saints, 1:52–53
ஜோசப் மிகவும் பயந்து சோகத்தில் ஆழ்ந்தார். பக்கங்களை எடுக்க மார்ட்டினை அனுமதித்தது தவறு என்று அவருக்குத் தெரியும். வீட்டுக்குத் திரும்பி வந்து எம்மாவிடம் நடந்ததைக் கூறினார். மரோனி தூதன் வந்து தங்கத் தகடுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். ஜோசப் மனத்தாழ்மையுடன் மனந்திரும்பினால் , அந்தத் தட்டுகளைத் திரும்பப் பெற்று மீண்டும் மொழிபெயர்க்கலாம் என்றார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:5-11; 10:1-3; Saints, 1:53–54
பல வாரங்களாக, ஜோசப் தான் செய்த தவறு பற்றி சிந்தித்து கொண்டிருந்தார். மன்னிப்பு வேண்டி ஜெபத்தில் கேட்டார். தேவன் அவரை மன்னித்தார். தேவனுடைய பணியை நிறுத்த முயற்சிக்கும் நபர்களால் பக்கங்கள் திருடப்பட்டதாக அவர் ஜோசப்பிடம் கூறினார். ஆனால் தேவனின் பணியை யாராலும் தடுக்க முடியாது. தேவன் தம்முடைய பணியைத் தொடர ஒரு திட்டம் வைத்திருந்தார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:1–10; Saints, 1:54–55
மரோனி தகடுகளை மீண்டும் ஜோசப்பிடம் கொடுத்தார். தேவன் ஜோசப் மற்றும் மார்ட்டினிடம், அவர்கள் தாழ்மையுடன் அவரை நம்பினால், அவர்கள் பல வழிகளில் அவருடைய பணிக்கு உதவ முடியும் என்று சொன்னார். அவர்கள் மார்மன் புஸ்தகத்தை உலகிற்கு கொண்டு வர உதவ முடியும். இந்தப் புஸ்தகம் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் மனந்திரும்பவும் இயேசு கிறிஸ்துவை நம்பவும் உதவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:16–20; 5:21–35; Saints, 1:56–57