“தூதர்கள் ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“தூதர்கள் ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபித்தல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
1829
தூதர்கள் ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபித்தல்
தேவனின் பணியைச் செய்யும் வல்லமை
ஜோசப்பும் ஆலிவரும் தங்கத் தகடுகளை மொழிபெயர்த்தபோது, எல்லோரும் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் அதிகாரத்தையும் அவர் மக்களுக்கு அளித்தார். ஜோசப் ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லை. அவர் ஞானஸ்நானம் பற்றி மேலும் அறிய விரும்பினார்.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:68; Saints, 1:65–66
மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க இப்போது யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஜோசப்பும் ஆலிவரும் வியந்தனர். தேவனிடத்தில் கேட்க முடிவு செய்தனர். அவர்கள் காட்டினுள் சென்று முழங்காலில் ஜெபித்தனர்.
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:68; Saints, 1:66
அவர்கள் ஜெபிக்கும்போது, ஒரு தூதன் தோன்றினான். அவர் யோவான் ஸ்நானன் என்று கூறினார், அவர் நீண்ட காலத்திற்கு முன்பு இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அவர் ஜோசப்புக்கும் ஆலிவருக்கும் ஆரோனிய ஆசாரியத்துவத்தை வழங்கினார். ஆசாரியத்துவம் தேவனின் வல்லமை. இது தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க பயன்படுத்தப்படுகிறது.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:69, 72; Saints, 1:66–67
ஆரோனிய ஆசாரியத்துவம் கொண்ட ஒருவர் மக்களுக்கு மனந்திரும்புதலைக் கற்றுத்தரவும் ஞானஸ்நானம் கொடுக்கவும் செய்யலாம் என்று யோவான் ஸ்நானன் கூறினார். ஜோசப்பையும் ஆலிவரையும் ஞானஸ்நானம் எடுக்கும்படி யோவான் கூறினார். அவர்கள் ஒரு நதிக்குள் சென்று ஒருவருக்கொருவர் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்!
பின்னர், மற்ற தூதர்களும் வந்தனர். இயேசுவின் அப்போஸ்தலர்களில் மூன்று பேர்—பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான்—ஜோசப் மற்றும் ஆலிவருக்கு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அளித்தனர். இப்போது ஜோசப்பும் ஆலிவரும் பரிசுத்த ஆவியின் வரத்தைக் கொடுக்க முடியும். ஜோசப்பும் ஆலிவரும் அப்போஸ்தலர்களாகவும் ஆனார்கள். அவர்கள் சபையை வழிநடத்தி இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகளாக இருக்கமுடியும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:12; Saints, 1:84