பாடத்திட்டத்துக்கான அறிவுரைகள்
பாடத்திட்டம் 2021க்கான அறிவுரைகள்


“2021 பாடத்திட்டத்துக்கான அறிவுரைகள்,” 2021 பாடத்திட்டத்துக்கான அறிவுரைகள் (2020)

“2021 பாடத்திட்டத்துக்கான அறிவுரைகள்” 2021 பாடத்திட்டத்துக்கான அறிவுரைகள்

குடும்பம் வேதங்களை வாசித்தல்

2021 பாடத்திட்டத்துக்கான அறிவுரைகள்

இந்த ஆவணம் 2021ல் பயன்படுத்தப்படவுள்ள சபை பாடத்திட்ட புத்தகங்களை பட்டியலிடுகிறது. அதிகமான மொழிகளில், இப்புத்தகங்கள் Gospel Library app மற்றும் ComeFollowMe.ChurchofJesusChrist.orgல் எண்மின் வடிவில் (digitally) கிடைக்கின்றன. 2021க்கான புதிய புத்தகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள்

புதிய என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (16587)

உங்கள் அங்கத்தின் அங்கத்தினர்கள் ஹிலிகேனான், சிங்களம், டர்க்கிஷ், இந்தி, தமிழ், தெலுங்கு, அல்லது உருது பேசினால், என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2021 (16899) பயன்படுத்தவும்.

ஆரம்ப வகுப்பு

பாலர் வகுப்பு (18 மாதங்கள்–2 வயது)

உங்கள் சிறுபிள்ளைகளைப் பாருங்கள்: பாலர் கையேடு (37108)

பாடல் நேரம் மற்றும் அனைத்து ஆரம்ப பள்ளி வகுப்புகள் (3–11வயது)

புதிய என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (16588)

உங்கள் அங்கத்தின் அங்கத்தினர்கள் அமாரிக், ஹிலிகேனான், இந்தி, மாங், ஐஸ்லாண்டிக், லாவோ, லிங்காலா, செர்பியன், ஷோனா, சிங்களம், ஸ்லோவோக், ஸ்லோவேனியன், தமிழ், தெலுங்கு, டர்க்கிஷ், உருது, ஷோஸா, அல்லது ஸுலு பேசினால், புதிய என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்லிருந்து ஆரம்ப வகுப்பு உபயோகத்துக்கு ஆலோசனைகளைப் பெறவும் அல்லது பிள்ளைகளுக்கான பிற சபை கையேடுகளைப் பயன்படுத்தவும்.

ஞாயிறு பள்ளி பாடங்கள்

வயதுவந்தோர் மற்றும் இளைஞர் ஞாயிறு பள்ளி

புதிய என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (16589)

உங்கள் அங்கத்தின் அங்கத்தினர்கள் அமாரிக், ஹிலிகேனான், இந்தி, மாங், ஐஸ்லாண்டிக், லாவோ, லிங்காலா, செர்பியன், ஷோனா, சிங்களம், ஸ்லோவோக், ஸ்லோவேனியன், தமிழ், தெலுங்கு, டர்க்கிஷ், உருது, ஷோஸா, அல்லது ஸுலு பேசினால், புதிய என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்லிருந்து ஞாயிறு பள்ளி உபயோகத்துக்கு ஆலோசனைகளைப் பெறவும் அல்லது பிற சபை கையேடுகளைப் பயன்படுத்தவும்.

மூப்பர்கள் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கம்

பொது மாநாட்டு செய்திகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்” (print version available in conference issues of the என்சைன் அல்லது லியஹோனா மாநாட்டு பதிப்புகளில் அச்சுப்பிரதி கிடைக்கிறது)

உங்கள் அங்கத்தின் அங்கத்தினர்கள் அமாரிக், ஹிலிகேனான், இந்தி, மாங், ஐஸ்லாண்டிக், லாவோ, லிங்காலா, செர்பியன், ஷோனா, சிங்களம், ஸ்லோவோக், ஸ்லோவேனியன், தமிழ், தெலுங்கு, டர்க்கிஷ், உருது, ஷோஸா, அல்லது ஸுலு பேசினால், உங்கள் மூப்பர்கள் குழுமம் அல்லது ஒத்தாசைச் சங்கத்தின் தேவைகளை சந்திக்கிற அண்மை பொதுமாநாட்டு செய்திகளிலிருந்து கறபிக்கவும் அல்லது பிற சபைக் கையேடுகளைப் பயன்படுத்தவும்.

ஆரோனிய ஆசாரியத்துவம் மற்றும் இளம் பெண்கள்

புதியஎன்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரோனிய ஆசாரியத்துவ குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புக்காக: கோட்பாட்டுத் தலைப்புக்கள் 2021 (16639)

உங்கள் அங்கத்தின் அங்கத்தினர்கள் அமாரிக், ஹிலிகேனான், இந்தி, மாங், ஐஸ்லாண்டிக், லாவோ, லிங்காலா, செர்பியன், ஷோனா, சிங்களம், ஸ்லோவோக், ஸ்லோவேனியன், தமிழ், தெலுங்கு, டர்க்கிஷ், உருது, ஷோஸா, அல்லது ஸுலு பேசினால், அத்தியாயம் 3 Preach My Gospel (16229)லிருந்து பாடங்களைப் பயன்படுத்தவும். உங்கள் இளைஞர்களின் தேவைகளைச் சந்திக்கிற அண்மை பொது மாநாட்டு செய்திகளிலிருந்தும் நீங்கள் கற்பிக்கலாம்.

அனைத்து அமைப்புக்களும்

ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டம்

இரட்சகரின் வழியில் கற்பித்தல்

பிற வகுப்புக்கள் (கையேடுகள் கிடைக்கப்பெற்றால்)

திருமணத்தையும் குடும்பங்களையும் பெலப்படுத்துவதற்கான, ஆலய ஆயத்தம், மற்றும் ஊழிய ஆயத்தம் வகுப்புக்கள் சபையின் இரண்டாம் மணி நேரத்தில் நடக்காது. எனினும், ஆயரின் விருப்பம் மற்றும் உள்ளூர் தேவைகளின் அடிப்படையில், தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், அல்லது குழுக்களுக்கும் பிற நேரங்களில் இந்த வகுப்புக்கள் கற்பிக்கப்படலாம்.

திருமணமும் குடும்ப உறவுகளும்

திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் ஆசிரியர் கையேடு (35865) மற்றும் திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் பங்கேற்போர் படிப்பு வழிகாட்டி (36357)

ஆலய ஆயத்தம்

உன்னதத்திலிருந்து தரிப்பிக்கப்பட்டு: ஆலய ஆயத்தம் பயிலரங்க ஆசிரியர் கையேடு (36854) மற்றும் பரிசுத்த ஆலயத்தில் பிரவேசிக்க ஆயத்தப்படுதல் (36793)

அங்க வருடாந்தர பாடத்திட்ட முறைக்கான அறிவுரைகள்

2021க்கு, தங்கள் அங்கங்களிலுள்ள அங்கத்தினர்களுக்கு விநியோகிக்க, ஆயர்களும் கிளைத்தலைவர்களும் என்னைப்பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் அச்சிடப்பட்ட பிரதிகளைப் பெறுவர். அங்கத்திலுள்ள ஒவ்வொரு ஆர்வமிக்க குடும்பத்துக்கும் ஒரு பிரதியை அவர்கள் பெறுவர். இந்தப் பிரதிகளுக்காக உள்ளூர் அங்கங்கள் பணம் கேட்கப்படமாட்டா. எனினும், ஆரம்ப வகுப்பு, ஞாயிறு பள்ளி, மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவம் மற்றும் இளம் பெண்கள் வகுப்பில் பயன்படுத்தப்படும் அச்சிடப்பட்ட கையேட்டுப் பிரதிகளுக்கு அங்கங்கள் விண்ணப்பித்து பணம் செலுத்த வேண்டும்.

ஜூன் 30, 2020 தொடங்கி, அங்க புத்தகங்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 31, 2020க்குப் பிந்தாமல் தயவுசெய்து உங்கள் விண்ணப்பங்களைக் கொடுக்கவும். இந்த தேதிக்குப் பிறகு விண்ணப்பிக்கப்படும் புத்தகங்கள் ஜனுவரி 1, 2021க்குள் வழங்கப்படாமலிருக்கலாம். அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு விண்ணப்பிக்க store.ChurchofJesusChrist.org க்குச் சென்று, Units and Callings தேர்வுசெய்து, பின்னர் Annual Curriculum தேர்ந்தெடுக்கவும்.

தேவைக்கு அதிகமான அச்சடிக்கப்பட்ட பிரதிகளுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்க உங்களுக்கு வுதவ, பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளவும்:

  • ஒவ்வொரு புத்தகத்தின் அச்சடிக்கப்பட்ட பிரதிகள் எத்தனை உங்கள் அங்கத்தில் ஏற்கனவே இருக்கின்றன?

  • அச்சடிக்கப்பட்ட பிரதிகளை விட புத்தகங்களின் எண்மின் வடிவை (digitally) எத்தனை ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான புத்தகங்கள்

ஒலி வடிவத்திலும், ப்ரெய்லி, மற்றும் பெரிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டவையும் store.ChurchofJesusChrist.orgல் கிடைக்கின்றன.