வேதக் கதைகள்
வாலிபன் தாவீது


“வாலிபன் தாவீது,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“வாலிபன் தாவீது,” பழைய ஏற்பாட்டு கதைகள்

1 சாமுவேல் 16

வாலிபன் தாவீது

ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ராஜாவாக ஆக அழைக்கப்படுதல்

சாமுவேல் பிரயாணம் பண்ணுதல்

ஒரு புதிய ராஜாவை கண்டுபிடிக்க சாமுவேல் தீர்க்கதரிசியை கர்த்தர் அனுப்பினார். அந்த நேரத்தில் ராஜாவாக இருந்த சவுல் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டான். பெத்லகேமுக்குச் சென்று ஈசா என்ற மனிதனைக் கண்டுபிடிக்கும்படி சாமுவேலிடம் கர்த்தர் சொன்னார். புதிய ராஜா, ஈசாவின் மகன்களில் ஒருவனாக இருப்பான்.

1 சாமுவேல் 16:1–5

சாமுவேலும் ஈசாவின் மகன்களும்

ஈசாவின் மூத்த மகன்கள் உயரமாகவும் வலிமையானவர்களுமாயிருந்தனர். ஆனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்து அவர்களைத் தீர்மானிக்க வேண்டாம் என்று சாமுவேலிடம் கர்த்தர் சொன்னார்.

1 சாமுவேல் 16:6–10

சாமுவேல் ஈசாவுடன் பேசுதல்

வேறு மகன்கள் இருக்கிறார்களா என்று ஈசாவிடம் சாமுவேல் கேட்டான். தனது இளைய மகன் தாவீது ஆடுகளைப் பராமரிப்பதாக ஈசா கூறினான். சாமுவேலிடம் தாவீது கொண்டு வரப்பட்டான்.

1 சாமுவேல் 16:11

ஆடு மேய்க்கும் சிறுவனான தாவீதை சாமுவேலும் ஈசாவும் பார்த்தல்

தாவீது தனது சகோதரர்களை விட சிறியவனாகவும் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவனாகவுமிருந்தான். ஆனால் தாவீது எப்படிப்பட்டவனாய் தோற்றமளித்தான் என்பதை கர்த்தர் பொருட்படுத்தவில்லை. தாவீதின் இருதயம் விசுவாசத்தால் நிறைந்திருப்பதை கர்த்தர் அறிந்திருந்தார். தாவீது ராஜாவாக இருப்பான் என்று அவர் சாமுவேலிடம் கூறினார். சாமுவேல் தாவீதை ஆசீர்வதித்தான். கர்த்தரின் ஆவி தாவீதை அரசனாக இருக்கத் தயார்படுத்தியது.

1 சாமுவேல் 16:12–13