வேதபாட வகுப்பும் முதிர்வேதபாட வகுப்பும்
கிறிஸ்துவைப் போன்ற போதனையின் கண்ணோட்டம்


“கிறிஸ்துவைப் போன்ற போதனையின் கண்ணோட்டம்,” இரட்சகரின் வழியில் போதித்தல் (2022)

கிறிஸ்துவைப் போன்ற போதனையின் கண்ணோட்டம்

பின்வரும் விளக்கப்படங்கள் இந்த ஆதாரத்தில் கற்பிக்கப்படும் கொள்கைகளின் கண்ணோட்டத்தை வழங்குகின்றன.

இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்துங்கள்

நீங்கள் எதைக் கற்பித்தாலும் அது பொருட்டின்றி இயேசு கிறிஸ்துவைப்பற்றி கற்பியுங்கள்

  • இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டை வலியுறுத்துங்கள்

  • இயேசு கிறிஸ்துவின் பட்டங்கள், பாத்திரங்கள் மற்றும் பண்புகளைப்பற்றி கற்பியுங்கள்

  • இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சியமளிக்கும் அடையாளங்களைத் தேடுங்கள்

இயேசு கிறிஸ்துவண்டை வர கற்பவர்களுக்கு உதவுங்கள்

  • தங்களுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய அன்பை, வல்லமையை மற்றும் இரக்கத்தை அடையாளம் காண கற்பவர்களுக்கு உதவுங்கள்

  • பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் தங்களுடைய உறவைப் பெலப்படுத்த கற்பவர்களுக்கு உதவுங்கள்

  • இயேசு கிறிஸ்துவைப் போலிருக்க மனமுவந்து முயற்சி செய்ய கற்பவர்களுக்கு உதவுங்கள்

கிறிஸ்துவைப் போன்ற போதனையின் கொள்கைகள்

நீங்கள் கற்பிப்பவர்களை நேசியுங்கள்

  • தேவன் அவர்களைப் பார்க்கிற வழியில் கற்பவர்களைப் பாருங்கள்.

  • அவர்களைத் தெரிந்துகொள்ள நாடுங்கள்—அவர்களின் சூழ்நிலைகள், தேவைகள் மற்றும் பெலன்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

  • பெயர் சொல்லி அவர்களுக்காக ஜெபியுங்கள்.

  • அனைவரும் மதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் மதிக்கப்படுகின்றன என்பதை அறிகிற, பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள்.

  • உங்கள் அன்பை வெளிப்படுத்த பொருத்தமான வழிகளைக் கண்டுபிடியுங்கள்.

ஆவியால் கற்பியுங்கள்

  • ஆவிக்குரிய ரீதியில் உங்களை ஆயத்தப்படுத்துங்கள்.

  • கற்பவர்களின் தேவைகளைப்பற்றிய ஆவிக்குரிய தூண்டுதல்களுக்கு பதிலளிக்க எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

  • பரிசுத்த ஆவியால் கற்பிக்கப்படுவதற்கான பின்னணிகளையும் வாய்ப்புகளையும் கற்பவர்களுக்கு உருவாக்குங்கள்.

  • தனிப்பட்ட வெளிப்பாட்டைத் தேட, அடையாளம் காண மற்றும் செயல்பட கற்பவர்களுக்கு உதவுங்கள்.

  • அடிக்கடி சாட்சியமளியுங்கள், தங்கள் உணர்வுகள், அனுபவங்கள் மற்றும் சாட்சியங்களைப் பகிர்ந்து கொள்ள கற்பவர்களை அழையுங்கள்.

கோட்பாட்டைப் போதியுங்கள்

  • இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டை நீங்களே கற்றுக்கொள்ளுங்கள்.

  • வேதங்களிலிருந்தும் பிற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலிருந்தும் கற்பியுங்கள்.

  • வேதங்களிலுள்ள சத்தியங்களைத் தேடவும், அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் கற்பவர்களுக்கு உதவுங்கள்.

  • மனமாற்றத்திற்கும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதற்கும் வழிவகுக்கும் சத்தியங்களில் கவனம் செலுத்துங்கள்.

  • இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டில் தனிப்பட்ட பொருத்தத்தைக் கண்டறிய கற்பவர்களுக்கு உதவுங்கள்.

கருத்தாய் கற்குமாறு அழையுங்கள்

  • தங்கள் கற்றுக்கொள்ளுதலுக்கான பொறுப்பை ஏற்க கற்பவர்களுக்கு உதவுங்கள்.

  • தினமும் சுவிசேஷத்தைப் படிப்பதன் மூலம் இரட்சகரை அறிந்துகொள்ளும்படி கற்பவர்களை ஊக்குவியுங்கள்.

  • கற்றுக்கொள்ள ஆயத்தமாகுமாறு கற்றுக்கொள்பவர்களை அழையுங்கள்.

  • அவர்கள் கற்றுக் கொள்ளும் சத்தியங்களைப் பகிர்ந்து கொள்ள கற்பவர்களை ஊக்குவியுங்கள்.

  • அவர்கள் கற்றுக்கொண்டதின்படி வாழ கற்பவர்களை அழையுங்கள்.

படம்
கிறிஸ்துவைப் போன்ற கற்பித்தலின் வரைபட கண்ணோட்டம்

அச்சிடவும்