பாகம் 135
ஜூன் 27, 1844ல் இலினாயிலுள்ள கார்த்தேஜ் சிறைச்சாலையில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மற்றும் அவருடைய சகோதரர் கோத்திரத்தலைவன் ஹைரம் ஸ்மித்தின் இரத்தசாட்சியின் அறிவிப்பு. ஜோசப்பும் ஹைரம் ஸ்மித்தும் கொலைசெய்ப்பட்டபோது ஏறக்குறைய வெளியீட்டிற்கு ஆயத்தமாயிருந்த கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் 1844 பதிப்பின் இறுதியில் இந்த ஆவணம் சேர்க்கப்பட்டது.
1–2, கார்த்தேஜ் சிறைச்சாலையில் ஜோசப்பும் ஹைரமும் இரத்தசாட்சிகளானார்கள்; 3, தீர்க்கதரிசியின் முதன்மையான ஸ்தானம் வரவேற்கப்பட்டது; 4–7, பணியின் சத்தியத்தையும் தெய்வீகத்தையும் அவர்களுடைய குற்றமற்ற இரத்தம் சாட்சியளிக்கிறது.
1 இந்த புஸ்தகத்தின் மற்றும் மார்மன் புஸ்தகத்தின் சாட்சியை முத்திரிக்க, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மற்றும் கோத்திரத்தலைவனாகிய ஹைரம் ஸ்மித்தின் இரத்த சாட்சியை நாங்கள் அறிவிக்கிறோம். 27 ஜூன், 1844ல் மாலை சுமார் 5மணி அளவில் கறுப்பு வண்ணமடிக்கப்பட்ட 150லிருந்து 200பேர்கள் அடங்கிய ஆயுதந்தரித்த ஒரு கும்பலால் கார்த்தேஜ் சிறைச்சாலையில் அவர்கள் சுடப்பட்டார்கள். முதலில் ஹைரம் சுடப்பட்டு, நான் செத்துப்போனேன்! என அதிர்ச்சியில் கூவி அமைதியாக விழுந்தார், ஜோசப் ஜன்னலிலிருந்து குதிக்க முயற்சி செய்யும்போது சுடப்பட்டு கர்த்தாவே என்னுடைய தேவனே! என அதிர்ச்சியில் கூவி மரணம் அடைந்தார். அவர்கள் இருவரும் மரித்த பின்பும் மிருகத்தனமாக அவர்கள் சுடப்பட்டார்கள், அவர்களை நான்கு குண்டுகள் துளைத்தன.
2 அந்த நேரத்தில் அறையிலிருந்த நபர்கள், பன்னிருவரில் இரண்டு பேரான ஜான் டெய்லரும், வில்லர்ட் ரிச்சர்ட்ஸ் மட்டுமே; ஒரு கொடிய முறையில் நான்கு குண்டுகளுடன் முன்னவர் காயப்பட்டார், ஆனால் பின்னர் குணமடைந்தார்; பின்னவர் தேவனின் பாதுகாப்பின் மூலமாக அவருடைய ஆடையில் ஒரு ஓட்டைகூட இல்லாமல் தப்பித்தார்.
3 இந்த உலகத்தில் எப்போதும் வாழ்ந்த எந்த மனுஷனையும் விட, அதிலுள்ள மனுஷர்களின் இரட்சிப்புக்காக இயேசுவைத் தவிர கர்த்தரின் தீர்க்கதரிசியும், ஞானதிருஷ்டிக்காரருமான ஜோசப் அதிகமாகச் செய்திருக்கிறார். இந்தக் குறுகிய இருபது வருஷக் காலத்திற்குள் தேவனின் வரத்தாலும் வல்லமையாலும் அவர் மொழி பெயர்த்த, மார்மன் புஸ்தகத்தை வெளியே கொண்டு வந்தார்; இரண்டு கண்டங்களிலும் அது வெளியிடப்பட வழி செய்தார்; அதில் அடங்கியிருந்த நித்திய சுவிசேஷத்தின் பரிபூரணத்தை பூமியின் நான்கு மூலைகளுக்கும் அனுப்பினார். வெளிப்படுத்தல்கள் மற்றும் கட்டளைகளைக் கொண்ட இந்த புஸ்தகமான கோட்பாடும் உடன்படிக்கைகளையும் மற்றும் பல ஞானமுள்ள ஆவணங்களையும் அறிவுரைகளையும் மனுபுத்திரர்களின் நன்மைக்காக வெளிக் கொண்டுவந்தார்; அநேக ஆயிரக்கணக்கான பிற்காலப் பரிசுத்தவான்களை கூட்டிச் சேர்த்து, ஒரு பெரிய பட்டணத்தை ஸ்தாபித்து, அழிக்கமுடியாத ஒரு புகழையும் பெயரையும் விட்டுப் போனார். அவர் மகத்துவமாய் வாழ்ந்தார், தேவன் மற்றும், அவருடைய ஜனங்களுடைய கண்களுக்கு முன்பாக அவர் மகத்துவமாய் மரித்தார்; பூர்வகாலங்களில் கர்த்தரின் அபிஷேகிக்கப்பட்ட அநேகரைப்போல அவருடைய ஊழியத்தையும் அவருடைய பணியையும் அவருடைய சொந்த இரத்தத்தால் முத்திரித்தார்; அப்படியே அவருடைய சகோதரர் ஹைரமும் செய்தார். வாழ்வில் அவர்கள் வேறுபட்டிருக்கவில்லை, மரணத்திலும் அவர்கள் பிரிக்கப்படவில்லை!
4 அவருடைய படுகொலைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு சட்டத்தின் போலியான தேவைகளுக்கு தன்னை ஒப்புக் கொடுக்க கார்த்தேஜ் சிறைச்சாலைக்கு ஜோசப் போனபோது, அவர் சொன்னார்: “அடிக்கப்பட ஒரு ஆட்டுக்குட்டியைப் போல நான் போய்க்கொண்டிருக்கிறேன்; ஆனால் ஒரு கோடை காலையைப்போல நான் அமைதியாயிருக்கிறேன்; தேவனுக்கும் எல்லா மனுஷருக்கும் முன்பாக குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கிறேன். நான் குற்றமற்றவனாக மரிப்பேன், ஆனாலும் என்னைப்பற்றிச் சொல்லப்படுவது, அவன் கொடூரமாய்க் கொல்லப்பட்டான்.” அதே காலையில் போவதற்கு ஹைரம் ஆயத்தமான பின்பு அடிக்கப்படும்படி அது சொல்லப்படுமா? ஆம், இப்படியாக அது இருந்தது, மார்மன் புஸ்தகத்தின் ஏத்தேரின் பன்னிரண்டாவது அதிகாரத்தின் இறுதியிலிருந்த பின்வரும் பத்தியை அவர் படித்து அந்த பக்கத்தை அதன்மேல் மடித்தார்:
5 மேலும் அந்தப்படியே, புறஜாதியார் தயாளத்தைப் பெற்றிருக்கும்படி, கர்த்தர் அவர்களுக்கு கிருபையைத் தந்தருள வேண்டுமென்று அவரிடம் விண்ணப்பம் பண்ணினேன். மேலும் அந்தப்படியே, கர்த்தர் என்னை நோக்கி: அவர்களுக்கு தயாளத்துவம் இல்லையெனில், நீ அதைப் பொருட்படுத்தவேண்டாம். நீ விசுவாசமுள்ளவனாய் இருக்கிறாய், ஆதலால் உன் வஸ்திரங்கள் சுத்தமாக்கப்படும். நீ உனது பெலவீனத்தைக் கண்டதினிமித்தம், என் பிதாவின் வாசஸ்தலங்களிலே நான் ஆயத்தப்படுத்தின இடத்தில் உட்காருமளவுக்கு நீ பெலப்படுத்தப்படுவாய். மேலும், இப்பொழுதும் நான், கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக புறஜாதியாரையும், ஆம், நான் நேசிக்கிற என் சகோதரரையும் சந்திக்கும் வரைக்கும் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன், என் வஸ்திரங்கள் உங்கள் இரத்தத்தினால் கறைபடவில்லை என்று சகல மனுஷர்களும் அறிவார்கள். சாசனம் எழுதியவர்கள் இப்பொழுது மரித்துவிட்டார்கள், அவர்களுடைய சாட்சி அமுலிலிருக்கிறது.
6 பிப்ருவரி, 1844ல் ஹைரம் ஸ்மித்துக்கு நாற்பத்தி நான்கு வயதாயிருந்தது, டிசம்பர் 1843ல் ஜோசப்புக்கு முப்பத்து எட்டு வயதாயிருந்தது; இப்பொழுது முதல் அவர்களுடைய பெயர்கள் மத இரத்தசாட்சிகளுக்கு மத்தியில் மகத்துவப்பட்டிருக்கும்; சபையின் மார்மன் புஸ்தகமும், இந்த கோட்பாடும் உடன்படிக்கைகளுமும் பாழாய்ப்போன உலகத்தின் இரட்சிப்புக்காக அவர்களைக் கொண்டுவர பத்தொன்பதாவது நூற்றாண்டின் சிறந்த இரத்தம் விலையாக்கப்பட்டது, என ஒவ்வொரு தேசத்திலுமுள்ள வாசகனுக்கும் நினைவுறுத்தப்படும்; அதாவது தேவனின் மகிமைக்காக ஒரு பச்சை மரத்தை நெருப்பு காயப்படுத்தக்கூடுமானால் கெட்டுப்போன திராட்சைத் தோட்டத்தை தூய்மைப்படுத்த காய்ந்துபோன மரங்களை அது சுட்டெரிக்க எவ்வளவு எளிதாயிருக்கும். மகிமைக்காக அவர்கள் வாழ்ந்தார்கள், மகிமைக்காக அவர்கள் மரித்தார்கள், மகிமையே அவர்களின் நித்திய பலன். காலங்காலமாக பரிசுத்தமானவர்களின் இரத்தினமாக அவர்களின் பெயர்கள் அவர்களின் சந்ததிவரை இருக்கும்.
7 அவர்கள் அடிக்கடி முன்பு நிரூபிக்கப்பட்டதைப்போல எந்த குற்றத்திற்கும் அவர்கள் குற்றமற்றவர்களாயிருந்து, துரோகிகளின் மற்றும் துன்மார்க்க மனுஷர்களின் சதித்திட்டத்தாலே அவர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள்; கார்த்தேஜ் சிறைச்சாலையின் தரையில் அவர்களின் குற்றமற்ற இரத்தம் மார்மானியத்திற்கு ஒரு பரந்த முத்திரையைப் பதித்து, அது பூமியிலுள்ள எந்த வழக்கு மன்றத்தாலும் மறுக்க முடியாதிருந்தது; ஆளுநரால் வாக்குக் கொடுக்கப்பட்டதைப்போல மாநிலத்தின் விசுவாசக் குறைவுடன் இலினாய் மாநிலத்தின் சாசனத்தில் அவர்களுடைய குற்றமற்ற இரத்தம் உலகம் முழுவதாலும் குற்றம் சுமத்தமுடியாத நித்திய சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு ஒரு சாட்சியாகும்; சுதந்திரத்தின் கொடியின்மீதும் ஐக்கிய நாடுகளின் மக்னா கார்டா மீதும் அவர்களுடைய குற்றமற்ற இரத்தம் இயேசு கிறிஸ்துவின் மதத்திற்காக ஒரு தூதனாயிருக்கிறது; அது எல்லா தேசங்களுக்கு மத்தியிலுமுள்ள நேர்மையான மனுஷர்களின் இருதயங்களைத் தொடும்; எல்லா இரத்த சாட்சிகளின் குற்றமற்ற இரத்தத்துடன் அவர்களுடைய குற்றமற்ற இரத்தம் பூமியின்மேல் தியாகிகளின் அந்த இரத்தத்திற்காக அவர் பழிதீர்க்குமட்டும் யோவான் கண்ட பலிபீடத்தின் கீழ் சேனைகளின் கர்த்தரிடத்தில் கூக்குரலிடும். ஆமென்.