வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 39


பாகம் 39

ஜனுவரி 5, 1831ல் நியூயார்க்கின் பயெட்டியில் ஜேம்ஸ் கோவெலுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக மெதடிஸ்ட் மதக்குருவாயிருந்த ஜேம்ஸ் கோவெல், தீர்க்கதரிசி ஜோசப் மூலமாக அவருக்கு கர்த்தர் கொடுக்கிற எந்த கட்டளைக்கும் கீழ்ப்படிவதாக கர்த்தருடன் உடன்படிக்கை செய்தார்.

1–4, தேவ குமாரர்களாக பரிசுத்தவான்களுக்கு வல்லமையிருக்கிறது; 5–6, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதென்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாகும்; 7–14, ஞானஸ்நானம் பெறவும் கர்த்தரின் திராட்சைத் தோட்டத்தில் பிரயாசப்படவும் ஜேம்ஸ் கோவெல் கட்டளையிடப்பட்டார்; 15–21, இரண்டாம் வருகைக்கு முன்பாக கர்த்தரின் ஊழியக்காரர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும்; 22–24, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் இப்போதைக்கும் நித்தியத்துக்கும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்.

1 எல்லா நித்தியத்திலிருந்து எல்லா நித்தியம் வரைக்கும் மகத்துவமானவரான நானாகிய இயேசு கிறிஸ்துவின், குரலுக்கு செவிகொடுத்து கேள்,

2 உலகத்தின் ஒளியாகவும் ஜீவனுமாயிருக்கிறவர்; இருளில் பிரகாசிக்கிற ஒளி, இருளானது அதைப் புரிந்து கொள்வதில்லை;

3 எனது சொந்த ஜனத்திடம் காலத்தின் மத்தியில் வந்தது நானே, எனது சொந்த ஜனமோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.

4 ஆனால் என்னை ஏற்றுக்கொள்கிற அநேகருக்கு எனது குமாரர்களாகும் வல்லமையை நான் கொடுத்தேன்; அதைப் போலவே என்னை ஏற்றுக்கொள்ளும் அளவில் அநேகரும் எனது குமாரர்களாகும் வல்லமையை நான் கொடுப்பேன்.

5 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னுடைய சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாதவன் என்னை ஏற்றுக்கொள்வதில்லை.

6 இதுவே என்னுடைய சுவிசேஷம், மனந்திரும்புதலும் தண்ணீரால் ஞானஸ்நானமும், பின்னர், சகல காரியங்களையும் காட்டுகிற, ராஜ்யத்தின் சமாதானத்துக்குரிய காரியங்களைப் போதிக்கிற, தேற்றரவாளனான அக்கினியாலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் வருகிறது.

7 இப்பொழுதும், இதோ, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜேம்ஸ், நான் உனக்குச் சொல்லுகிறேன், உன்னுடைய கிரியைகளை நான் பார்த்தேன், உன்னை நான் அறிவேன்.

8 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், உன்னுடைய இருதயம் இப்போது சரியாக எனக்கு முன்பாக இருக்கிறது, இதோ, உன்னுடைய தலையின்மேல் மகத்தான ஆசீர்வாதங்களை நான் அருளியிருக்கிறேன்;

9 ஆயினும், பெரும் துயரத்தை நீ பார்த்திருக்கிறாய், ஏனெனில் பெருமை மற்றும் உலகத்தின் அக்கறைகளினிமித்தம் அநேக முறைகள் நீ என்னை மறுதலித்திருக்கிறாய்.

10 ஆனால், இதோ, எனது நாமத்தில் அழைத்து, எழுந்து ஞானஸ்நானம் பெற்று, உன்னுடைய பாவங்களைக் கழுவு, நீ என்னுடைய ஆவியையும், நீ ஒருபோதும் அறிந்திராத ஒரு மகத்தான ஆசீர்வாதத்தையும் பெறுவாய் என உனக்குச் சொல்லுகிற எனது குரலுக்கு நீ செவிகொடுத்தால், உனது விடுதலையின் நாட்கள் வந்துவிட்டன.

11 நீ இதைச் செய்தால், ஒரு மகத்தான பணிக்கு நான் உன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். கடைசி நாட்களில் நான் அனுப்புகிற இஸ்ரவேல் வீட்டாராகிய என்னுடைய ஜனங்களை விடுவிக்க நான் அனுப்புகிற உடன்படிக்கையாகிய, எனது சுவிசேஷத்தின் பரிபூரணத்தை, நீ பிரசங்கிப்பாயாக.

12 அப்படியாக அந்த வல்லமை உன்மேல் இறங்கும். நீ மிகுந்த விசுவாசம் பெறுவாய். நான் உன்னுடனேயிருந்து உனக்கு முன்பாகப் போவேன்.

13 என்னுடைய திராட்சைத் தோட்டத்திலே பிரயாசப்பட, எனது சபையைக் கட்ட, பர்வதங்களின்மேல் களிகூர்ந்து செழிப்படையும்பொருட்டு சீயோனைக் கொண்டுவர நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்.

14 இதோ, மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கிழக்கு தேசங்களுக்குப்போக நீ அழைக்கப்படவில்லை, ஆனால் ஒஹாயோவுக்குப் போக நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்.

15 ஒஹாயோவில் எனது ஜனங்களில் அநேகர் கூடிவரும்போது, மனுபுத்திரருக்கு மத்தியிலே அறியப்படாத வகையான ஒரு ஆசீர்வாதத்தை நான் வைத்திருக்கிறேன். அது அவர்களின் தலைகளின்மேல் ஊற்றப்படும். அப்போதிலிருந்து மனுஷர்கள் சகல தேசங்களுக்கும் போவார்கள்.

16 இதோ, மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், தேசங்களின்மேல் நியாய விசாரிப்பில் எனது கையை நான் வைப்பதில்லை என நினைத்துக்கொண்டு அதிக விசுவாசத்தில் ஒஹாயோவில் ஜனங்கள் என்னைக் கூப்பிடுகிறார்கள், ஆனால் எனது வார்த்தையை நான் மறுதலிக்கமுடியாது.

17 ஆகவே, உனது ஊக்கத்தோடு பணிபுரிந்து, கடைசி முறையாக கத்தரிக்கப்படும்படிக்கு என்னுடைய திராட்சைத் தோட்டத்திற்குள் விசுவாசமுள்ள வேலைக்காரர்களை கூப்பிடு.

18 அவர்கள் எவ்வளவாய் மனந்திரும்பி என்னுடைய சுவிசேஷத்தின் முழுமையை ஏற்றுக்கொண்டு, பரிசுத்தமாகிறார்களோ அவ்வளவாய் நான் நியாய விசாரிப்பில் எனது கையை வைப்பதில்லை.

19 ஆகவே, போய் ஒரு உரத்த சத்தத்துடன் சொல். பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது; கூக்குரலிடு: ஓசன்னா! மிக உன்னதமான தேவனுடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.

20 எனது வருகையின் காலத்திற்காக எனக்கு முன்பாக பாதையை ஆயத்தப்படுத்தி, போய் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடு;

21 ஏனெனில் காலம் சமீபித்திருக்கிறது; நாளையும் அல்லது மணியையும் ஒருவனும் அறியான்; ஆனால் அது நிச்சயமாய் வரும்.

22 இந்தக் காரியங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; அவர்கள் இப்போதைக்கும் நித்தியத்திற்கும் என்னில் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.

23 மீண்டும், அப்படியே, தண்ணீரால் நீ எவ்வளவுபேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறாயோ, உன் கைகளை அவர்கள் மேல் வைப்பாயாக, அவர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவார்கள், எனது வருகைக்கான அறிகுறிகளை தேடி என்னை அறிந்துகொள்வார்கள்.

24 இதோ, நான் சீக்கிரத்திலேயே வருகிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.