“ஆபிரகாமும் சாராளும்,” மாதாந்தர Friend செய்திகள், பெப்ருவரி 2022
“ஆபிரகாமும் சாராளும்”
Friend மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2022
ஆபிரகாமும் சாராளும்
ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி. தேவன் ஆபிரகாமுடனும் அவருடைய மனைவி சாராளுடனும் ஒரு உடன்படிக்கை செய்தார்.
தேவன் அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்தார். அவர்கள் பிள்ளைகள் பெறுவார்கள் என்று அவர்களிடம் அவர் கூறினார். ஆபிரகாமும் சாராளும் தேவனைப் பின்பற்றுவதாக வாக்களித்தனர்.
ஆபிரகாமும் சாராளும் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றினார்கள். ஆனால் அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர்கள் முதுமை அடைந்தனர்.
இறுதியாக, ஆபிரகாமுக்கு 100 வயதாகவும், சாராவுக்கு 90 வயதாகவும் இருந்தபோது, அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர். தேவன் தங்களை ஆசீர்வதித்ததை அவர்கள் அறிந்தார்கள்.
தேவனை நான் நம்பமுடியும். சில நேரங்களில் ஆசீர்வாதங்கள் உடனடியாக வராது. தேவன் எப்போதுமே தம்முடைய வாக்குறுதிகளைக் காத்துக் கொள்கிறார்.
© 2022 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Friend Message, January 2022 மொழிபெயர்ப்பு. Tamil. 18313 418